கொரோனா நோயாளர்களுக்காக வெளியானது சுற்றுநிருபம்

May 24, 2021

கொரோனா தொற்றாளர்களுக்காக புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 
அதாவது வைத்தியசாலைக்கு அழைத்துவரப்படும் நோயாளர் ஒருவர் 15 முதல் 30 நிமிடங்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து இந்த சுற்றுநிறுபம் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 
சில வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்கள் முறையாக கவனிக்கப்படுவதில்லை என்றும் நோயாளர்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா நோயாளர்களுக்காக வெளியானது சுற்றுநிருபம் கொரோனா நோயாளர்களுக்காக வெளியானது சுற்றுநிருபம் Reviewed by irumbuthirai on May 24, 2021 Rating: 5

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தல் தொடர்பான புதிய அறிவித்தல்

May 24, 2021

தற்போது பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தினாலும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாலும் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் பொழுது பாடசாலையில் இருந்து பெற்றுக் கொள்ளவேண்டிய சான்றிதழ்கள் இல்லாமல் இணையதளத்தின் ஊடாக 
மாத்திரம் விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
பயணக் கட்டுபாடு நீக்கப்பட்டதன் பின்னர் சான்றிதழ்களை சமர்பிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
இதேவேளை பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள் மே 21 முதல் ஜூன் 11 வரை Online மூலம் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தல் தொடர்பான புதிய அறிவித்தல் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தல் தொடர்பான புதிய அறிவித்தல் Reviewed by irumbuthirai on May 24, 2021 Rating: 5

Vacancies: Engineering Council, Sri Lanka.

May 24, 2021

Vacancies: Engineering Council, Sri Lanka. 
Closing date: 11-06-2021. 
See the details below.
Source : Sunday Observer.

Vacancies: Engineering Council, Sri Lanka. Vacancies: Engineering Council,  Sri Lanka. Reviewed by irumbuthirai on May 24, 2021 Rating: 5

Vacancy: People's Bank

May 24, 2021

Vacancy: People's Bank. 
Post: Chief Digital Officer. 
Closing date: 07-06-2021. 
See the details below.
Source : Sunday Observer. 
Vacancy: People's Bank Vacancy: People's Bank Reviewed by irumbuthirai on May 24, 2021 Rating: 5

திருத்தம்: இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020 (2021)

May 23, 2021
 


இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020 (2021) 
 
09.04.2021 ஆம் திகதிய வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட, இலங்கை வெளிநாட்டுச் சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020 (2021)’ அறிவித்தலில் பின்வரும் திருத்தங்களை அரசாங்க சேவை ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது என்பதை வெளிநாட்டமைச்சு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. 
திருத்தம்
மேற்படி அறிவித்தலின் பிரிவு 8 (꠰꠰꠰) இல் குறிப்பிட்ட மேற்குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி, 04.06.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
மேலும், இந்த அறிவித்தலின் குறிப்பிடப்பட்ட அதிகபட்ச வயதெல்லையானது, மூல வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டவாறு, விண்ணப்பங்களுக்கான முடிவுத் திகதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த  10.05.2021 என்றவாறே அமையும் எனவும் வெளிநாட்டமைச்சு அறிவித்துள்ளது. 
குறித்த திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
திருத்தம்: இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020 (2021) திருத்தம்: இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020 (2021) Reviewed by irumbuthirai on May 23, 2021 Rating: 5

அரச வைத்தியசாலைகளில் உரிய சேவைகள் கிடைக்கவில்லையா?

May 23, 2021

கொரோனா தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சில நோயாளர்களுக்கு ஒருசில வைத்தியசாலைகளில் முறையான சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 
எனவே இவ்வாறு அரச வைத்தியசாலைகளில் உரிய சேவைகள் கிடைக்காவிட்டால் அது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு அறிவிக்குமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் நோயாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
இதேவேளை Covid-19 சிகிச்சை நிலையங்களுக்கு தேவையான மருந்து வகைகள் உட்பட சகல வசதிகளையும் சுகாதார அமைச்சு ஏற்கனவே வழங்கி இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரச வைத்தியசாலைகளில் உரிய சேவைகள் கிடைக்கவில்லையா? அரச வைத்தியசாலைகளில் உரிய சேவைகள் கிடைக்கவில்லையா? Reviewed by irumbuthirai on May 23, 2021 Rating: 5

Official Mobile App. for Department of Examinations (பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ Mobile App)

May 23, 2021

Official mobile application offered by Department of Examinations, Sri Lanka. 
Results of G.C.E (A/L ) Examination, G.C.E (O/L) Examination, Grade 5 Scholarship Examination and Other Examination can be viewed via this application faster and easier than any other means. This application provides the many services like online exams, Online Certificate Request and Results Verifications, Online Application for the School Exams & Recruitment Exams, download facility for Admission Cards, Download facility for past papers & Exam Calendar etc. 
இலங்கை பரீட்சைத் திணைக்களம் கையடக்க தொலைபேசிகளுக்கான உத்தியோகபூர்வ மென்பொருளை வெளியிட்டுள்ளது. 
பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் சகல பரீட்சைகளின் பெறுபேறுகளை இந்த மென்பொருள் மூலமாக இலகுவாக பார்க்கலாம். 
அத்துடன் Online பரீட்சைகள், Online சான்றிதழ்களுக்காக விண்ணப்பித்தல், பெறுபேறுகளை உறுதிப்படுத்தல், சகல பரீட்சைகளுக்கும் Online மூலம் விண்ணப்பித்தல், பரீட்சை அனுமதி அட்டையை தரவிறக்கம் செய்தல், பரீட்சை நாட்காட்டி, கடந்தகால வினா பத்திரங்கள் என்பவற்றை தரவிறக்கம் செய்தல் போன்ற பல்வேறு சேவைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 
குறித்த App ஐ தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for download the App.

Official Mobile App. for Department of Examinations (பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ Mobile App) Official Mobile App. for Department of Examinations (பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ Mobile App)  Reviewed by irumbuthirai on May 23, 2021 Rating: 5

பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் பகுப்பாய்வு அறிக்கை

May 23, 2021

கடந்த வருடம் (2020) நடைபெற்ற உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் பல்வேறு அடிப்படைகளிலான பகுப்பாய்வு அறிக்கையை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 
பழைய மற்றும் புதிய பாடத் திட்டங்களில் தோற்றிய பரீட்சார்த்திகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பகுப்பாய்வு வெவ்வேறாக செய்யப்பட்டுள்ளது. 
மாகாண ரீதியாக, மாவட்ட ரீதியாக, பாடசாலை பரீட்சார்த்திகள், தனிப்பட்ட பரீட்சார்த்திகள், உயர்தர துறைகள் மற்றும் உயர்தர பாடங்கள் ரீதியாக என பல்வேறு நியதிகளின் அடிப்படையில் இந்த பகுப்பாய்வு வெவ்வேறாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இது மாத்திரமன்றி 2019 பெறுபேறுகளுடன் ஒப்பீடு செய்தும் இந்தப் பகுப்பாய்வு அறிக்கை பரீட்சைத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. 
குறித்த அறிக்கையை முழுமையாக பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் பகுப்பாய்வு அறிக்கை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்  பகுப்பாய்வு அறிக்கை Reviewed by irumbuthirai on May 23, 2021 Rating: 5

Port City வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது ஏன்? முஸ்லிம் காங்கிரஸின் விளக்கம்

May 22, 2021

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூல வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 5 உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை. இதற்கான காரணத்தை அந்த கட்சி தெரிவித்துள்ளது. 
அதாவது குறித்த சட்டமூலத்தில் சாதகமும் பாதகமும் காணப்படுவதாலேயே வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 
வாக்கெடுப்பின் போது குறித்த உறுப்பினர்கள் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இருந்தாலும் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
எந்த முடிவை எடுத்தாலும் சகலரும் தலைமைத்துவத்திற்கு 
கட்டுப்பட்டு ஒரே முடிவினை எடுக்க வேண்டும் என கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி, வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை என்ற முடிவை எடுத்ததாகவும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார். 
ஆனால் கட்சியின் தலைவரைத் தவிர ஏனைய உறுப்பினர்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்ததோடு பிரதமரின் இப்தார் நிகழ்விலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Port City வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது ஏன்? முஸ்லிம் காங்கிரஸின் விளக்கம் Port City வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது ஏன்? முஸ்லிம் காங்கிரஸின் விளக்கம் Reviewed by irumbuthirai on May 22, 2021 Rating: 5

Online கல்வி முறையில் தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டாம் - கல்வி அமைச்சு

May 22, 2021

கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன நிலையில் தற்போது இடம்பெறும் இணையவழி (Online) கல்வி நடவடிக்கைகளினால் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகும் நிகழ்வுகள் இடம்பெறுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 
மாணவர்களுக்கு ஓய்வில்லாமல் எந்நேரமும் வகுப்புகளை நடாத்துதல், பாட ரீதியாக அளவுக்கதிகமான வேலைப் பளுவை சுமத்துததல், ஆசிரியைகள் சாரி அல்லது ஒசரி போன்ற 
உடைகளை அணிந்து பாடங்களை நடத்துமாறும் அறிவுறுத்தப்படல் போன்ற பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
எனவே, இது போன்ற சம்பவங்கள் இடம் பெறாமல் தடுக்க அதிபர்கள், பிரதி அதிபர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தேவையற்ற மன அழுத்தங்களுக்கு உள்ளாகாதவாறு இணைய வழி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Online கல்வி முறையில் தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டாம் - கல்வி அமைச்சு Online கல்வி முறையில் தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டாம் - கல்வி அமைச்சு Reviewed by irumbuthirai on May 22, 2021 Rating: 5

17-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

May 22, 2021

17-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.




17-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 17-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on May 22, 2021 Rating: 5

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அதிரடி: Port City க்கு ஆதரவாக வாக்களித்த இருவர் நீக்கம்!

May 22, 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (All Ceylon Makkal Congress - ACMC) கட்சியைச் சேர்ந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
புத்தளம் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷப்ரி ரஹீம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தின் இஷாக் ரஹ்மான் ஆகியோரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர். 
இது தொடர்பில் அக்கட்சியின் பதில் தலைவர் சட்டத்தரணி எம்.என். ஷஹீட் தெரிவிக்கையில், 
அண்மையில் இடம்பெற்ற கட்சி உயர்மட்டக்குழு கூட்டத்தின் போது கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி இருவரும் ஆதரவாக வாக்களித்ததனால் தாம் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் தெரிவித்தார். 
தனது தீர்மானம் கட்சியின் அரசியல் பீடத்திற்கு அறிவிக்கப்பட்டு, அவர்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அதிரடி: Port City க்கு ஆதரவாக வாக்களித்த இருவர் நீக்கம்! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அதிரடி: Port City க்கு ஆதரவாக வாக்களித்த இருவர் நீக்கம்! Reviewed by irumbuthirai on May 22, 2021 Rating: 5

21-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

May 22, 2021

21-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 21-05-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.



21-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 21-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on May 22, 2021 Rating: 5
Powered by Blogger.