அத்தியாவசிய சேவைகளுக்காக அறிமுகமானது 1965
irumbuthirai
May 25, 2021
பயணக் கட்டுப்பாடு காலத்திலும் அதற்குப் பின்னரும் அரச பொறிமுறையுடன் தொடர்புகளை மேற்கொண்டு அத்தியாவசிய சேவைகள் குறித்த தகவல்களை பொது மக்கள் கேட்டறிவதற்காக 1965 என்ற அவசர தொலைபேசி இலக்கம் நேற்று அலரி மாளிகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மத்திய நிலையமும் நேற்று (24) திறக்கப்பட்டதோடு குறித்த நிகழ்வு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
24 மணித்தியாலமும் இயங்கும் இந்த தொலைபேசி சேவையின் ஊடாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதும் எதிர்வரும் வரையறுக்கப்பட்ட காலப்பகுதியிலும் பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேடமாக பயணக் கட்டுப்பாட்டு
காலப்பகுதியில் அத்தியாவசிய பொருள் விநியோகம் மற்றும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் போதும் ஏற்படும் பிரச்சினைகள் அந்தந்த அரச நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தல் மற்றும் பொது மக்கள் செயல்திறன் மிக்கதாக இநத பணிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான இணைப்பு மத்திய நிலையமாக 1965 என்ற அவசர தொலைபேசி மத்திய நிலையம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்காக அறிமுகமானது 1965
Reviewed by irumbuthirai
on
May 25, 2021
Rating: