இதுவரையான கொரோனா மரணங்களில் பதிவான வயது கூடிய மரணம்!
irumbuthirai
May 25, 2021
இலங்கையில் இதுவரை இடம்பெற்ற கொரோனா மரணங்களில் நேற்றைய தினம் (24) அறிவிக்கப்பட்ட மரணங்களில் அதிகூடிய வயதுடைய மரணம் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.
அதாவது நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட 33 மரணங்களில் காலி, கினிமல்லகஹ (Ginimallagaha) என்ற இடத்தைச் சேர்ந்த 104 வயதுடைய பெண்ணின் மரணமே இவ்வாறு வயது கூடிய
கொரோனா மரணமாக இலங்கையில் பதிவாகியுள்ளது.
இவர் இம்மாதம் 22ஆம் திகதி தனது வீட்டில் மரணமானது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 33 மரணங்களில் 05 மரணங்கள் மாத்திரமே நேற்றைய தினம் இடம்பெற்றதாகும். ஏனைய 28 ம் இம்மாதம் 17 - 23 வரை இடம்பெற்றதாகும்.
இதேவேளை நேற்று அறிவிக்கப்பட்ட 33 மரணங்களில் 11 மரணங்கள் வீட்டிலேயே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மொத்த மரணங்கள் 1243 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையான கொரோனா மரணங்களில் பதிவான வயது கூடிய மரணம்!
Reviewed by irumbuthirai
on
May 25, 2021
Rating: