External Degrees - Online (Rajarata University of Sri Lanka)

May 27, 2021

Applications called for online external degrees from Rajarata university of Sri Lanka. 
Closing date: 15-06-2021. 
Click the link below for Application forms and further information: 
See the paper advertisement below.
Source: Sunday Observer.


External Degrees - Online (Rajarata University of Sri Lanka) External Degrees - Online (Rajarata University of Sri Lanka) Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

சிறந்த காரியாக தெரிவுசெய்யப்பட்டார் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒன்பது வயது சிறுமி

May 27, 2021

இங்கிலாந்தில் உள்ள பிரபலமான இஸ்லாமிய தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான "இஸ்லாம் சனல் TV" நடத்திய இந்த வருடத்திற்கான (2021) "அல் குர்ஆன் கிராஅத் போட்டி" நிகழ்ச்சித் தொடரில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 09 வயது மர்யம் ஜெஸீம் வெற்றிவாகை சூடப்பட்டார். 
குறித்த தொலைக்காட்சி இந்த போட்டியை 15 வருடங்களாக தொடராக நடாத்தி வரும் நிலையில் 
 "முதல் தடவையாக கலந்து கொண்ட மர்யம் ஜெஸீம் முதலிடத்தைப் பெற்று 2021 ஆம் ஆண்டின் ஐக்கிய இராஜ்ஜியத்தின் "அதி சிறந்த அல் குர்ஆன் காரியாவாக " மகுடம் சூட்டப்பட்டார். 
6-14 வயதுக்கு இடைப்பட்டவர்களிடையே இந்த போட்டி நடத்தப்பட்டது. 
இச் சிறப்பு மகுடத்தை அதி குறைந்த வயதில் வென்ற, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட முதலாவது சிறுமி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறந்த காரியாக தெரிவுசெய்யப்பட்டார் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒன்பது வயது சிறுமி சிறந்த காரியாக தெரிவுசெய்யப்பட்டார் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒன்பது வயது சிறுமி Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

கொரோனாவைக் குணப்படுத்தும் தேங்காய் எண்ணெய்: எப்படி பாவிக்க வேண்டும்? வெளியான புதிய ஆய்வு!

May 27, 2021

தேங்காய் எண்ணெய் கொரோனாவைக் குணப்படுத்துமா என்பது தொடர்பில் புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. 
அதாவது தூய்மையான தேங்காய் எண்ணெயிலுள்ள சேர்மங்கள் கொரோனா அறிகுறி உள்ளவர்களின் உடலில் வைரஸின் அளவை 
60 – 90% வரை குறைக்க முடியும் என பிலிப்பைன்ஸின் அட்டெனியோ டி மணிலா பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் பேராசிரியரும் பிலிப்பைன்ஸ் சங்கத்தின் ஒருங்கிணைந்த இரசாயனவியலாளர்கள் சங்கத்தின் தலைவருமான ஃபேபியன் டெரிட் கூறியுள்ளார். 
எனினும் லேசான அறிகுறிகளைக் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே இதைச் செய்ய முடியும். 
கொரோனா சிகிச்சை நிலையம் மற்றும் பொது வைத்தியசாலையில் 57 நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் உறுதியாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 
இதேவேளை சுத்தமான தேங்காய் எண்ணெயை எவ்வாறு பாவிக்க வேண்டும் என்றும் கூறினார். அதாவது ஒரு நாளைக்கு மூன்று முறை உணவுக்குப் பின் 02 தேக்கரண்டி சுத்தமான எண்ணையை எடுக்க வேண்டும் என்றார். 
எவ்வாறாயினும் இந்த அளவு தற்போதைய நிலையில் பரிந்துரைக்கப்பட்டாலும் அது தொடர்பில் ஆராய்ச்சிகள் தொடர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனாவைக் குணப்படுத்தும் தேங்காய் எண்ணெய்: எப்படி பாவிக்க வேண்டும்? வெளியான புதிய ஆய்வு! கொரோனாவைக் குணப்படுத்தும் தேங்காய் எண்ணெய்: எப்படி பாவிக்க வேண்டும்? வெளியான புதிய ஆய்வு! Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி வழங்குதல் தொடர்பில் அரசின் அறிவிப்பு

May 27, 2021

ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஊடகத்துறை அமைச்சும் தகவல் திணைக்களமும் நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். 
இந்த தடுப்பூசி மாவட்ட மட்டத்தில் வழங்கப்படும். கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பத்திரிகையாளர்களுக்கான தடுப்பூசிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் ஏற்கனவே வழங்கப்பட்டதாவும் அவர் மேலும் தெரிவித்தார். 
இதேவேளை ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரன, ஊடகவியலாளர்களுக்காக தனியான ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தை நிறுவ பாதுகாப்பு அமைச்சுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி வழங்குதல் தொடர்பில் அரசின் அறிவிப்பு ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி வழங்குதல் தொடர்பில் அரசின் அறிவிப்பு  Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

இலங்கையில் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலா?

May 26, 2021

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் பாதுகாப்பு தொடர்பில் 4ம் நிலை தரத்தின் கீழ் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளமை பொதுவான விடயம் எனவும் நாட்டில் மற்றுமொரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என பரவுகின்ற தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். 
தேசிய பாதுகாப்பு தொடர்பில் மக்கள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பாதுகாப்பு அமைச்சு, முப்படையினர் மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினர் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலா? இலங்கையில் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலா? Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

நீங்கும் விமானத் தடை: 75 பேருக்கே அனுமதி:

May 26, 2021

இலங்கைக்கு வரும் பயணிகள் விமான சேவை எதிர்வரும் ஜூன் 1ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஆனால் ஒரு விமானத்தில் ஆக கூடுதலாக 75 பயணிகளையே அழைத்து வரலாம். 
எவ்வாறாயினும், 14 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் பயணிகளுக்கு தொடர்ந்தும் பயணத்தடை அமுலில் இருக்கும். 
இதேவேளை இலங்கைக்கு வரும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா அதிகார சபைக்கு அறிவிக்க வேண்டும் என்பதோடு இலங்கை கடவுச் சீட்டினை கொண்டுள்ளவர்களும் இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களும் தாயகம் திரும்புவதற்கு அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.  
நீங்கும் விமானத் தடை: 75 பேருக்கே அனுமதி: நீங்கும் விமானத் தடை: 75 பேருக்கே அனுமதி: Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்ட தமிழர்

May 26, 2021

இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்னம் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 
ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 
இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் 34 ஆண்டுகளாக சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
இவர் திருகோணமலையை பூர்வீகமாகக் கொண்ட முடிக்குரிய வழக்கறிஞரான D.ராஜரட்ணத்தின் பேரனும் சிரேஷ்ட சட்டத்தரணி சிவா ராஜரட்ணத்தின் புதல்வருமாவார்.
புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்ட தமிழர் புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்ட தமிழர் Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

கொரோனா ஜனாஸாக்களை அடக்க மற்றுமொரு இடத்திற்கும் அனுமதி!

May 26, 2021

கொரோனா காரணமாக மரணிப்பவர்களின் சடலங்கள் ஓட்டமாவடியில் மாத்திரமே அடக்கம் செய்யப்பட்டு வந்தது. 
ஆனால் தற்போது திருகோணமலை, கிண்ணியா, மஹமாரு என்ற பகுதியிலும் அடக்கம் செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
அண்மையில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அரசியல்வாதிகள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்து இடத்தை பார்வையிட்டனர். 
இதனை தொடர்ந்து இதற்கான அனுமதி நேற்று (25) கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஜனாஸாக்களை அடக்க மற்றுமொரு இடத்திற்கும் அனுமதி! கொரோனா ஜனாஸாக்களை அடக்க மற்றுமொரு இடத்திற்கும் அனுமதி! Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

24-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

May 26, 2021

24-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.




24-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 24-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

University Admission 2020/21 (Aptitude Tests for University of Kelaniya)

May 26, 2021

University Admission 2020/21 (Aptitude Tests for University of Kelaniya) 
2020/21 ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதியிலே களனி பல்கலைக்கழகத்திற்கு எந்தெந்த பாடநெறிகளுக்கு Aptitude Test அவசியம் என்பது தொடர்பாகவும் அதற்கான தகைமைகள் தொடர்பாகவும் வெளியான அறிவித்தலை கீழே காணலாம். 
விண்ணப்ப முடிவு திகதி: 06-06-2021. 



University Admission 2020/21 (Aptitude Tests for University of Kelaniya) University Admission 2020/21 (Aptitude Tests for University of Kelaniya) Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

Vacancy: Bank of Ceylon (Trainee Secretarial Assistant)

May 26, 2021

Vacancy: Bank of Ceylon (Trainee Secretarial Assistant) 
Closing date: 05-06-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancy: Bank of Ceylon (Trainee Secretarial Assistant) Vacancy: Bank of Ceylon (Trainee Secretarial Assistant) Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

"SriLanka unites" தொடர்பில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார் அமைச்சர் சுதர்ஷினி! நடந்தது என்ன?

May 26, 2021

SriLanka unites என்ற அமைப்பு தொடர்பில் தனது நிலைப்பாட்டையும் தான் தெரிவித்த கருத்தையும் அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே மாற்றிக்கொண்டார். அதாவது, 
"SriLanka unites" என்ற பெயரில் குறித்த குழுவொன்றினால் போலியான, வைத்திய உபகரணப் பட்டியலொன்று தயாரித்து தனது பெயரைப் பயன்படுத்தி ட்விட்டர் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக நிதி வழங்குமாறு கேட்டு பதிவிட்டுள்ள செய்தி தவறானது என்றும், இது தொடர்பாக நிதி நன்கொடைகள் அல்லது வைத்திய உபகரணங்களை வழங்க வேண்டாம் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். மேலும் இப்படிப்பட்ட கோரிக்கையை தான் அவர்களிடத்தில் முன்வைக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை செய்வதற்கு அவர்கள் குறிப்பிடப்பட்டுள்ள குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு பல தடவைகள் தொடர்பு கொண்டபோதும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்திருந்தார். 
இந்த செய்தியை irumbuthirainews.com உம் தனக்குரிய வாட்ஸ்அப் குழுமங்களில் பகிர்ந்தது. 
Irumbuthirainews இன் செய்தியைப் பார்த்த குறித்த அமைப்பின் அம்பாறை 
மாவட்ட இணைப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திய நபர் ஒருவர் நம்மை தொடர்பு கொண்டு தமது நிறுவனம் தொடர்பாகவும் குறித்த செய்தியின் பின்னணி தொடர்பாகவும் விளக்கங்களை வழங்கினார். அதற்குரிய ஆதாரங்களையும் அனுப்பி வைத்தார். 
அதனை அடிப்படையாகக் கொண்டும் பொறுப்பான ஊடகம் என்ற வகையிலும் இதன் தெளிவுபடுத்தல்களை நாம் முன்வைக்கிறோம். 
(01) குறித்த அமைப்பு அமைச்சருக்கு அனுப்பிய விளக்கக் கடிதம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி மூலம் (இந்தக் கடிதத்தில் அமைப்பு தொடர்பான விளக்கமும் அதன் செயற்பாடுகளின் தன்மையும் கூறப்பட்டுள்ளதோடு அமைச்சர் தொடர்பு கொண்டபோது ஏன் பதிலளிக்க முடியவில்லை என்ற காரணமும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது) 




(02) இதன் பிறகு அமைச்சர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதற்கமைய தெரிவித்த ஃபேஸ்புக் பதிவு. 


(03) அமைச்சர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதற்கு குறித்த அமைப்பு நன்றி தெரிவித்த பதிவு. 


குறிப்பு:- Sri Lanka Unites தொடர்பான முழு விபரங்களையும் அவர்களது இணையத்தளத்தில் பார்வையிடலாம். இணையத்தள முகவரி கீழே தரப்பட்டுள்ளது.
"SriLanka unites" தொடர்பில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார் அமைச்சர் சுதர்ஷினி! நடந்தது என்ன? "SriLanka unites" தொடர்பில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார் அமைச்சர் சுதர்ஷினி! நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

இதுவரையான கொரோனா மரணங்களில் பதிவான வயது கூடிய மரணம்!

May 25, 2021

இலங்கையில் இதுவரை இடம்பெற்ற கொரோனா மரணங்களில் நேற்றைய தினம் (24) அறிவிக்கப்பட்ட மரணங்களில் அதிகூடிய வயதுடைய மரணம் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது. 
அதாவது நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட 33 மரணங்களில் காலி, கினிமல்லகஹ (Ginimallagaha) என்ற இடத்தைச் சேர்ந்த 104 வயதுடைய பெண்ணின் மரணமே இவ்வாறு வயது கூடிய 
கொரோனா மரணமாக இலங்கையில் பதிவாகியுள்ளது. 
இவர் இம்மாதம் 22ஆம் திகதி தனது வீட்டில் மரணமானது குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை 33 மரணங்களில் 05 மரணங்கள் மாத்திரமே நேற்றைய தினம் இடம்பெற்றதாகும். ஏனைய 28 ம் இம்மாதம் 17 - 23 வரை இடம்பெற்றதாகும். 
இதேவேளை நேற்று அறிவிக்கப்பட்ட 33 மரணங்களில் 11 மரணங்கள் வீட்டிலேயே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மொத்த மரணங்கள் 1243 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையான கொரோனா மரணங்களில் பதிவான வயது கூடிய மரணம்! இதுவரையான கொரோனா மரணங்களில் பதிவான வயது கூடிய மரணம்! Reviewed by irumbuthirai on May 25, 2021 Rating: 5
Powered by Blogger.