முதன்முறையாக விலங்குகளுக்காக கொரோனா தடுப்பு மருந்து தயாரித்த நாடு

May 28, 2021

உலகம் பூராவும் கொரோனாவானது மனிதர்களுக்கிடையே தீவிரமாக பரவிய கொண்டிருக்கும் நிலையில் அதற்கான தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் பல முன்னணி நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தன. 
அந்த போட்டி முடிவடைந்து தற்போது பலவகையான கொரோனா தடுப்பு மருந்துகள் பாவனையில் உள்ள நிலையில் தற்போது விலங்குகளுக்கான கொரோனா தடுப்பு மருந்தையும் ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. 
உலகிலேயே விலங்குகளுக்கென உருவாக்கப்பட்ட முதல் கொரோனா தொற்றுத் தடுப்புமருந்து இதுவாகும். 
அந்த மருந்து மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்டதோடு 
தற்போது விலங்குகளுக்கு அந்த மருந்தை செலுத்தும் பணியையும் ரஷ்யா தொடங்கியுள்ளது. 
நாய், பூனை, நரி உள்ளிட்ட விலங்குகளிடம் குறித்த மருந்து சோதனை செய்யப்பட்டபோது, நோய் எதிர்ப்புத்தன்மை உருவானதாகத் தெரிவிக்கப்பட்டது. 
ஒரு முறை இந்த மருந்தை போட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி 6 மாதத்திற்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது. 
உலகெங்கும் பல விலங்குகளிடம் கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டபோதும் அது நோய் காவியாக செயற்படுவதற்கு எந்த ஆதரமும் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக விலங்குகளுக்காக கொரோனா தடுப்பு மருந்து தயாரித்த நாடு முதன்முறையாக விலங்குகளுக்காக கொரோனா தடுப்பு மருந்து தயாரித்த நாடு Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

அதிக விலைக்கு விற்றால் அனுமதிப்பத்திரம் ரத்து: வேறு கடைக்கு அனுமதிப்பத்திரம்:

May 28, 2021

பயண கட்டுப்பாடு அமுலில் உள்ள காலகட்டத்தில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் பொருட்களை விற்பனை செய்ய இரு கடைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. 
எனவே அவ்வாறான வியாபார நிலையங்கள் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால் அவர்களின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படுவதோடு அந்த ஊரில் உள்ள வேறு கடைக்கு அந்த அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் என கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். 
கொண்டுசென்று விற்றல், வீட்டுக்கு வீடு பொருள் விநியோகம், ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் இரு கடைகளைத் திறத்தல் என பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களைப் பெறுவதற்கு வசதியாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதிக விலைக்கு பொருட்களை விற்பது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை(Hotline 1977) பெறும் முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதிக விலைக்கு விற்றால் அனுமதிப்பத்திரம் ரத்து: வேறு கடைக்கு அனுமதிப்பத்திரம்: அதிக விலைக்கு விற்றால் அனுமதிப்பத்திரம் ரத்து: வேறு கடைக்கு அனுமதிப்பத்திரம்: Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுமா? வெளியானது அரசாங்கத்தின் முடிவு!

May 28, 2021

தற்போது அமுலில் உள்ள பயண கட்டுப்பாட்டை தளர்த்துவது தொடர்பான கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. 
 அந்தவகையில் எதிர்வரும் 31 மற்றும் ஜூன் 4 ஆகிய தினங்களில் பயண கட்டுப்பாடு தளர்த்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். 
மக்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் மற்றும் மருந்து வகைகள் என்பவற்றை மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலாளர்கள் மூலம் அனுமதிக்கப்பட்ட நடமாடும் வியாபார நிலையங்களில் கொள்வனவு செய்யலாம் எனவும் தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுமா? வெளியானது அரசாங்கத்தின் முடிவு! பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுமா? வெளியானது அரசாங்கத்தின் முடிவு! Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (தமிழ் மொழி)

May 28, 2021

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய தமிழ் மொழி என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 
சொற்களைத் தெரிவோம். 
விரிவான சொற்களுக்குரிய சுருக்க எழுத்துக்களை அறிவோம். 
அலுவலக ரீதியான கடிதம் ஒன்றில் கடிதத்தின் வடிவமைப்பு. 
உவமான உவமேயங்களைக் கற்றுக் கொள்வோம். 
சுவரொட்டி தயாரிப்போம். 
உறுப்பமைய எழுதுவோம். 
வாக்கியம் அமைத்தல். 
போன்ற விடயங்கள் பயிற்சிகளுடன் தரப்பட்டுள்ளன. 
மாணவர்கள் கற்றுக் கொள்வதோடு உடனுக்குடன் பயிற்சிகளை செய்து சரிபார்த்துக் கொள்ளவும் முடியும். 
குறித்த விடயங்களை முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (தமிழ் மொழி) தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (தமிழ் மொழி) Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

தரம்:05 புலமைப்பரிசில் பரீட்சை (40 ற்கும் மேற்பட்ட மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்)

May 28, 2021

தரம்:05 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள்களை இங்கு தருகிறோம். 
இதில், 
40 ற்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் (பகுதி- 1 & 11) 
அவற்றிற்குரிய புள்ளி வழங்கும் திட்டம் 
போன்றன முறையாக தரப்பட்டுள்ளன. 
பெற்றோர்களும் புள்ளி வழங்கும் திட்டத்தை பார்வையிட்டு முறையாக வழிகாட்டலாம்.
குறித்த வினாத்தாள்களையும் புள்ளி வழங்கும் திட்டத்தையும் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
தரம்:05 புலமைப்பரிசில் பரீட்சை (40 ற்கும் மேற்பட்ட மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்) தரம்:05 புலமைப்பரிசில் பரீட்சை (40 ற்கும் மேற்பட்ட மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்) Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

400 நாட்களின் பின் உறவினர்களுடன் உரையாடிய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்!

May 28, 2021

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 
400 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ், நேற்று (27) தனது உறவினர்களுடன் வெலிக்கடை சிறையிலிருந்து வீடியோ தொழில்நுட்பம் ஊடாக உரையாடியுள்ளார். 
இதற்குரிய ஏற்பாடுகளை வெலிக்கடை சிறைச்சாலை நிர்வாகம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
400 நாட்களின் பின் உறவினர்களுடன் உரையாடிய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்! 400 நாட்களின் பின் உறவினர்களுடன் உரையாடிய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்! Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

Grade: 05 Scholarship Examination (Performance of Candidates - 2020) / புலமைப்பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகள்

May 28, 2021

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் (2020) மாணவர்களின் அடைவுகள் பல்வேறு அடிப்படையில் ஒப்பீடு செய்து பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை இங்கு தருகிறோம். 
பல்வேறு அடிப்படையில் பெறுபேறுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, ஒப்பீடு செய்யப்பட்டு புள்ளிவிபர ரீதியாக இதில் தரப்பட்டுள்ளது. 
குறித்த அறிக்கையை முழுமையாகப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
Grade: 05 Scholarship Examination (Performance of Candidates - 2020) / புலமைப்பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகள் Grade: 05 Scholarship Examination (Performance of Candidates - 2020) / புலமைப்பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகள் Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி! வெளியாகுமா கொரோனாவின் மர்மம்?

May 27, 2021

அமெரிக்க புலனாய்வு அமைப்புகளிற்கு ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். 
அதாவது கொரோனா வைரஸ் எப்படி உருவானது? வுஹான் ஆய்வுகூடத்திற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா? என்று கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதுவும் 90 நாட்களுக்குள் 
அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளார். இதற்காக தங்களுடைய முயற்சிகளை இரட்டிபாக்கி பணியாற்றுங்கள்," என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
இது தொடர்பாக ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிபராக பதவி ஏற்றவுடனேயே இதுதொடர்பாக அறிக்கை கோரியிருந்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கை தற்போது அவருக்கு அளிக்கப்பட்டதன் பின்னணியிலேயே தற்போது கூடுதலாக விரிவான அறிக்கையை 90 நாட்களுக்குள் அதிபர் கோரியுள்ளார். 
தற்போது வழங்கப்பட்டுள்ள அறிக்கைகளில், சில புலனாய்வு அமைப்புகள் வைரஸானது விலங்கிடம் இருந்து பரவியது என்ற 
நிலைப்பாட்டிலும் இன்னும் சில புலனாய்வு அமைப்புகள் வைரஸானது ஆய்வு கூடத்தில் இருந்து பரவியிருக்கலாம் என்ற நிலைப்பாட்டிலும் உள்ளன. ஆனால் இரண்டிற்கும் உறுதியான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. 
எனவேதான் தற்போது மீண்டும் விரிவான விசாரணை ஒன்றுக்கு அதுவும் 90 நாட்களுக்குள் அறிக்கை வேண்டும் என்று ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 
இந்த விசாரணைகளில் வைரஸிற்கும் ஆய்வுகூடத்திற்கும் தொடர்பு உள்ளது என்று நிரூபிக்கப்பட்டால் அமெரிக்கா - சீனா உறவு மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி! வெளியாகுமா கொரோனாவின் மர்மம்? அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி! வெளியாகுமா கொரோனாவின் மர்மம்? Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

தடுப்பூசி வரலாற்றிலேயே சீனா செய்த சாதனை!

May 27, 2021

தடுப்பூசி வரலாற்றிலேயே சீனா புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. 
அதாவது நேற்றைய தினம் (26) 20 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தடுப்பூசி வரலாற்றில் ஒரே நாளில் செலுத்தப்பட்ட அதி கூடிய தடுப்பூசி எண்ணிக்கை இதுவாகும். 
இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை வரை 546 மில்லியனுக்கும் மேற்பட்ட சீன மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி வரலாற்றிலேயே சீனா செய்த சாதனை! தடுப்பூசி வரலாற்றிலேயே சீனா செய்த சாதனை! Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

வெளியானது விசேட வர்த்தமானி! கிராம உத்தியோகத்தர் சேவை உட்பட பல விடயங்கள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்: (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு)

May 27, 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அதிவிசேட வர்த்தமானி இன்று வௌியிடப்பட்டுள்ளது. 
அதாவது எவ்வித இடையூறுகளுமின்றி மக்களின் நாளாந்த வாழ்க்கையை முன்னெடுக்கும் நோக்கில் சில துறைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியே இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் பணிகள், 
 
சகல விதமான எரிபொருள் விநியோகம்,  

துறைமுகங்களில் உள்ள கப்பல்களுக்குரிய சேவை,  

பொது போக்குவரத்து சேவை, 
 
இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவைகள்,  

உள்ளூராட்சி மன்றங்களினால் மேற்கொள்ளப்படும் கழிவுப் பொருள் முகாமைத்துவ சேவை, 
 
மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர் உட்பட இன்னும் பலரது சேவைகள்... 
 
இது தொடர்பான முழுமையான விவரங்கள் அடங்கிய தமிழ் மொழிமூல வர்த்தமானிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கில மொழிமூல வர்த்தமானிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க 
சிங்கள மொழி மூல வர்த்தமானிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
வெளியானது விசேட வர்த்தமானி! கிராம உத்தியோகத்தர் சேவை உட்பட பல விடயங்கள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்: (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு) வெளியானது விசேட வர்த்தமானி! கிராம உத்தியோகத்தர் சேவை உட்பட பல விடயங்கள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்: (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு) Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

எச்சரிக்கை!! 6 நாட்களில் 54 பேர் வீடுகளில் மரணம்:

May 27, 2021

கொரோனா தொற்றின் காரணமாக வீடுகளிலேயே மரணிப்பவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கடந்த 06 தினங்களில் மாத்திரம் 54 பேர் இவ்வாறு மரணித்துள்ளனர். அதாவது இம்மாதம் 
20 தொடக்கம் 26 ஆம் தேதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அதிலும் கடந்த இரு தினங்களில் (25 & 26) மாத்திரம் 22 பேர் வீடுகளில் மரணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலைமை அபாயகரமான நிலைமை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை மற்றுமொரு இந்தியாவாக மாறுமா என்ற அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.
எச்சரிக்கை!! 6 நாட்களில் 54 பேர் வீடுகளில் மரணம்:  எச்சரிக்கை!! 6 நாட்களில் 54 பேர் வீடுகளில் மரணம்: Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

Aptitude Test (B.Sc Honours in Sports Science & Management / B. Sc Honours in Physical Education)

May 27, 2021

Aptitude Test (B.Sc Honours in Sports Science & Management / B. Sc Honours in Physical Education) 
Closing date: 10-06-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Aptitude Test (B.Sc Honours in Sports Science & Management / B. Sc Honours in Physical Education) Aptitude Test (B.Sc Honours in Sports Science & Management / B. Sc Honours in Physical Education)  Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

External Degrees - Online (Rajarata University of Sri Lanka)

May 27, 2021

Applications called for online external degrees from Rajarata university of Sri Lanka. 
Closing date: 15-06-2021. 
Click the link below for Application forms and further information: 
See the paper advertisement below.
Source: Sunday Observer.


External Degrees - Online (Rajarata University of Sri Lanka) External Degrees - Online (Rajarata University of Sri Lanka) Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5
Powered by Blogger.