கிராம சேவையாளர் பதவிக்கான விண்ணப்பம் / Application for the post of Grama Niladhari - 2020 (2021)
irumbuthirai
May 28, 2021
கிராம உத்தியோகத்தர் பதவிக்குரிய போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாடளாவிய ரீதியில் கோரப்பட்டுள்ளன. 28/5/2021 அன்று வெளியான வர்த்தமானியில் இது தொடர்பான அறிவித்தல் வெளியாகியுள்ளது.
பரீட்சைக்குரிய மொழிமூலம்: தமிழ்/சிங்களம்/ஆங்கிலம்.
பரீட்சைக்குரிய பாடங்கள்:
(1) மொழித் திறம (2) பொது அறிவு, உளச்சார்பு.
நேரம்: ஒவ்வொரு பாடமும் 1 1/2 மணித்தியாலங்கள்.
பெறவேண்டிய ஆகக்குறைந்த புள்ளிகள்: 40 (ஒவ்வொரு பாடத்திலும் 40 புள்ளிகள்)
பரீட்சைக்குரிய உத்தேச காலம்: 2021 செப்டம்பர்.
வயது எல்லை: 21-35
விண்ணப்ப முடிவு திகதி: 28-06-2021.
தெரிவு செய்யப்படுபவர்களுக்கு 3 மாத பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின்போது மாதாந்தம் 3000 ரூபா கொடுப்பணவாக வழங்கப்படும்.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இது தொடர்பான முழுமையான வர்த்தமானி அறிவித்தலை பார்வையிடுக. (சிங்கள மொழி மூல வர்த்தமானி மாத்திரமே தற்போதைய நிலையில் பதிவேற்றப்பட்டுள்ளது)
Latest Update (29/5/2021):
இன்றைய தினம் ஏனைய இரு மொழிகளிலும் (தமிழ், ஆங்கிலம்) வர்த்தமானிகள் பதிவேற்றப்பட்டுள்ளன. எனவே கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து மும்மொழிகளிலும் வர்த்தமானிகளைப் பார்வையிடுக.
28-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)
கிராம சேவையாளர் பதவிக்கான விண்ணப்பம் / Application for the post of Grama Niladhari - 2020 (2021)
Reviewed by irumbuthirai
on
May 28, 2021
Rating: