பல்கலைக்கழக விரிவுரையாளர் கொரோனாவுக்குப் பலி!
irumbuthirai
May 29, 2021
யாழ். பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவர் யாழ்ப்பாணம், அரியாலை பகுதியைச் சேர்ந்தவர். இவரது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா
தொற்று கண்டறியப்பட்ட நிலையில் , விரிவுரையாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போது அவருக்கு தொற்று உறுதியானது.
அதனைதொடர்ந்து இவர் யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (28) வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர் கொரோனாவுக்குப் பலி!
Reviewed by irumbuthirai
on
May 29, 2021
Rating: