மூன்று மாதத்திற்குள் சகலருக்கும் தடுப்பூசி!
irumbuthirai
May 31, 2021
தடுப்பூசியை கொள்வனவு செய்ய போதியளவு பணம் இல்லை என சிலர் முன்வைக்கின்ற கருத்துக்களை நிராகரிப்பதாகவும் தேவையான சகலருக்கும் எதிர்வரும் 03 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் என்று வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (29) மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற கொரோனா கட்டுப்பாடு மற்றும் முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் பின்னர் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகில் கிட்டத்தட்ட 50 நாடுகள் எந்தவொரு தடுப்பூசியையும் கொள்வனவு செய்ய முடியாமலுள்ள சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு முடியுமாக இருப்பது எமக்குக் கிடைத்த பெரும் வெற்றி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூன்று மாதத்திற்குள் சகலருக்கும் தடுப்பூசி!
Reviewed by irumbuthirai
on
May 31, 2021
Rating: