நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?
irumbuthirai
June 02, 2021
தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் கடல் நீருக்கு பல்வேறு இரசாயன பொருட்கள் சேர்வதன் விளைவாக, இலங்கையின் உப்பு உற்பத்திக்கு பாதிக்கப்படும் எனவும் எனவே பொதுமக்கள் உப்பை களஞ்சியப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் பல்வேறு செய்திகள் பரவி வருவதோடு மக்களும் ஆங்காங்கே உப்பை அதிகளவில் கொள்வனவு செய்வதை காண முடிகிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அம்பாந்தோட்டை, இலங்கை உப்பு நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி நிஷாந்த் சந்தபரண,
கப்பல் தீப்பற்றியதன் காரணமாக கடல்நீரில் எந்த இரசாயனப் பொருள் சேர்க்கப்பட்டாலும், அதிக வெப்பத்தைப் பயன்படுத்தி உப்பு உற்பத்தியின் ஆவியாதல் மூலம் தேவையற்ற பொருட்கள் அனைத்தும் அகற்றப்படுகின்றன. மீதமுள்ள சோடியம் குளோரைட் மாத்திரமே உப்பு தயாரிக்க பயன்படுகிறது. ஏனைய அனைத்து இரசாயனக் கூறுகளும் ஆவியாதல் மூலம் அகற்றப்படுகின்றன. மனித நுகர்வுக்கு பொருந்தாத எதுவும் இங்கு சேர்வதில்லை என தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடல் நீரில் எதைச் சேர்த்தாலும் அது உப்பு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த கப்பல் மூலம் மட்டுமல்லாமல்,
பிற வழிகளிலும் கடல் நீரில் பல்வேறு பதார்த்தங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஆவியாதல் மூலம் பிரித்தெடுக்கப்படுகின்றன.
நாட்டின் தேவையில் 40% அம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்தால் வழங்கப்படுகின்றது. தற்போது எங்களிடம் 125,000 மெட்ரிக் டொன்களுக்கும் அதிகமான உப்பு கையிருப்பில் உள்ளது. அத்துடன் இன்னும் பல நிறுவனங்களினூடாகவும் உப்பு உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் உப்பின் விலை ஒருபோதும் உயராது. எனவே தேவையற்ற முறையில் பயப்பட வேண்டாம், உப்பு சேகரிக்க வேண்டாம் என்று நாம் மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?
Reviewed by irumbuthirai
on
June 02, 2021
Rating: