கொரோனா தடுப்பூசியை தயாரித்த பாகிஸ்தான்! புரட்சி என வர்ணிப்பு!
irumbuthirai
June 03, 2021
கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் நாடுகளுக்கிடையே போட்டி நிலை இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பாகிஸ்தான் சீனாவின் உதவியுடன் தடுப்பூசியை தயாரித்துள்ளது. பாக் வேக் (PAK VAC) என்ற பெயரிலான இந்த தடுப்பூசி கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனை 'இன்குலாப்' என பாகிஸ்தான் மத்திய திட்ட அமைச்சர்
அசத் உமர் வர்ணித்துள்ளார். அதாவது ஒரு புரட்சிக்கு குறைவானது அல்ல என்று வர்ணித்துள்ளார்.
தடுப்பூசி உற்பத்தி செய்ய உதவிய பாகிஸ்தானின் சுகாதார குழுக்களுக்கும், சீனாவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
எல்லா தடுப்பூசிகளின் பெயர்களும் இருந்து ஆய்வை நாங்கள் மேற்கொண்டோம். ஆனால் பாகிஸ்தான் முழுவதிலும் மக்களின் முதல் தேர்வு சீனாவின் சினோஃபார்ம்தான். அவர்களிடம் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிதான் இருக்கிறது என்று சொன்னால் திரும்பிச் செல்கிறார்கள். ஆனால் நாங்கள் 'பாக்வேக்'கையும் ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில் நாங்கள் அதை கூட்டாக தயார் செய்துள்ளோம். இது ஒரு புரட்சி," என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசியை தயாரித்த பாகிஸ்தான்! புரட்சி என வர்ணிப்பு!
Reviewed by irumbuthirai
on
June 03, 2021
Rating: