ஜூன் 8முதல் சிவப்பு பட்டியலுக்கு வரும் இலங்கை!
irumbuthirai
June 04, 2021
எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல் இங்கிலாந்தின் சிவப்புப் பட்டியலில் இலங்கை இடம்பெறும் என இங்கிலாந்து போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் வாழ்வோர் சிவப்புப் பட்டியல் நாடுகள் அல்லது பிரதேசங்களுக்கு பயணிக்கக் கூடாது. அத்தியாவசிய பயணத்துக்கு மட்டுமே சிவப்பு பட்டியல் நாடுகளுக்கு அனுமதிக்கப்படுவர். மேலும் சிவப்பு பட்டியல் நாடொன்றிலிருந்து திரும்பும் எந்தவொரு இங்கிலாந்து குடியிருப்பாளரும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
ஜூன் 8முதல் சிவப்பு பட்டியலுக்கு வரும் இலங்கை!
Reviewed by irumbuthirai
on
June 04, 2021
Rating: