பாடசாலைகளைத் திறப்பது தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு!

June 06, 2021

சுகாதார பிரிவின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் பரிந்துரையை கருத்திற்கொண்டு பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
எவ்வாறாயினும் ஜூன் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலைகளைத் திறப்பது தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு! பாடசாலைகளைத் திறப்பது தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு! Reviewed by irumbuthirai on June 06, 2021 Rating: 5

04-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

June 06, 2021

04-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.
Official gazette released on 04-06-2021 (In three languages) 
இதில், பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.






Join our WhatsApp Groups:




Join Our Telegram Channel:


Like our FB Page:





04-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 04-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on June 06, 2021 Rating: 5

இலங்கையில் 2 லட்சத்தை தாண்டிய தொற்று: இன்று வரையான விபரங்கள் சுருக்கமாக...

June 05, 2021

இலங்கையில் கொரோனா ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரையான விபரங்களை சுருக்கமாகத் தருகிறோம். 
அந்த வகையில் இன்று (5/6/2021) இரவு 8:15 வரையான தகவல்களின்படி இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.
அதாவது 202,357 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 166,132. இன்னும் சிகிச்சை பெறுவோர் 34,569. மரணித்தோர் 1656. 
அதேபோல் இதுவரை கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை பெற்றவர்கள் 1,920,810. இரண்டாவது டோசையும் பெற்றவர்கள் 353894 ஆகும்.
இலங்கையில் 2 லட்சத்தை தாண்டிய தொற்று: இன்று வரையான விபரங்கள் சுருக்கமாக... இலங்கையில் 2 லட்சத்தை தாண்டிய தொற்று: இன்று வரையான விபரங்கள் சுருக்கமாக...  Reviewed by irumbuthirai on June 05, 2021 Rating: 5

ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) செல்லவுள்ள பயணிகளுக்கான அறிவிப்பு

June 05, 2021

ஐக்கிய இராச்சியத்திற்குள் நுழையும் நாடுகளின் சிவப்பு பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த மாதம் 8 ஆம் திகதி முதல் இலங்கையர்களுக்கு ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. 
எவ்வாறாயினும் 5, 6, 7 ஆகிய திகதிகளில் லண்டனுக்கு விமானங்களை முன்பதிவு செய்த பயணிகளுக்கு இந்த தடை பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) செல்லவுள்ள பயணிகளுக்கான அறிவிப்பு ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) செல்லவுள்ள பயணிகளுக்கான அறிவிப்பு Reviewed by irumbuthirai on June 05, 2021 Rating: 5

பரிசோதனை தேவை என்கிறது வைத்திய அதிகாரிகள் சங்கம்!

June 05, 2021

கொரோனா தடுப்பூசியிலே, கொவிஷீல்ட் எஸ்ரா செனகா (Astra Zeneca) தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டவர்களுக்கு 2வது டோஸாக ஸ்புட்னிக் V (Sputnik V) தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் பரிசோதனை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். 
எஸ்ரா செனகா தடுப்பூசிகளை நாட்டிற்கு கொண்டுவர அரசு பாரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவ்வாறு அதனை பெற முடியாது போனால் ஸ்புட்னிக் V தடுப்பூசியை செலுத்துவது தொடர்பில் பரிசோதனை ஒன்றை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பரிசோதனை தேவை என்கிறது வைத்திய அதிகாரிகள் சங்கம்! பரிசோதனை தேவை என்கிறது வைத்திய அதிகாரிகள் சங்கம்! Reviewed by irumbuthirai on June 05, 2021 Rating: 5

மாகாண மட்டத்தில் ஆங்கில மொழி மூல பாடசாலைகள் - கல்வியமைச்சு

June 05, 2021

ஆங்கில மொழி மூலம் கற்பிக்கும் பாடசாலைகளை மாகாண மட்டத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பாக ஆராய்வதற்கு என நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அமைய எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. 
இதன் முதல் கட்டமாக நுகெகோட, விஜயராம கல்லூரி ஆங்கில மொழி மூலம் கல்வி கற்கும் பாடசாலையாக மேம்படுத்தப்படவுள்ளன. 
சர்வதேச பாடசாலைகளுக்குச் செல்லும் பெரும்பாலான மாணவர்கள் மாதாந்த கட்டணத்தை 
கூட செலுத்த முடியாமல் நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றமை உட்பட அவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
மாகாண மட்டத்தில் ஆங்கில மொழி மூல பாடசாலைகள் - கல்வியமைச்சு மாகாண மட்டத்தில் ஆங்கில மொழி மூல பாடசாலைகள் - கல்வியமைச்சு Reviewed by irumbuthirai on June 05, 2021 Rating: 5

மாணவர்களே வீடியோ அனுப்புங்கள்: சுத்தத்திற்கு பரிசு 5000 ரூபா:

June 05, 2021

இன்று (05) உலக சுற்றாடல் தினம் என்பதனால், சகல வீடுகளிலும் இன்று (05) மற்றும் நாளை(06) டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்களை மேற்கொள்ளுமாறு சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
தற்போது நிலவுகின்ற கொரோனோ தொற்று பரவல் நிலைமை காரணமாக, சுற்றாடல் தின நிகழ்வுகள் கொண்டாடப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார். 
இதேவேளை 5ம் மற்றும் 6ம் திகதிகளில் தமது வீட்டுச் சூழலை சுத்தப்படுத்தும் முறையை வீடியோ செய்து 
சுற்றாடல் அமைச்சுக்கு அனுப்புமாறு பாடசாலை மாணவர்களைக் கேட்டுக் கொள்வதாகவும், இந்த இரு நாட்களிலும் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கு ஒருமுறை 3 குடும்பங்களை தெரிவுசெய்து தலா ரூ. 5000 வீதம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களே வீடியோ அனுப்புங்கள்: சுத்தத்திற்கு பரிசு 5000 ரூபா: மாணவர்களே வீடியோ அனுப்புங்கள்: சுத்தத்திற்கு பரிசு 5000 ரூபா:  Reviewed by irumbuthirai on June 05, 2021 Rating: 5

இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோரிய கப்பல் நிறுவனம்!

June 05, 2021

சிங்கப்பூரின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எக்ஸ்பிரஸ் பீடர் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஷூமெல் யோஸ்கொவிடிஸ், 
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் சம்பவம் காரணமாக இலங்கை மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் நிறுவனம் சார்பாக தமது மன்னிப்பையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். 
கப்பலில் இருந்து இதுவரை எண்ணெய் கசிவு ஏற்படவில்லை. கப்பல் காப்புறுதி செய்யப்பட்டுள்ளதால் எமது நிறுவனத்திற்கு ஏற்படும் நிதி இழப்பு மிகவும் குறைவு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோரிய கப்பல் நிறுவனம்! இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோரிய கப்பல் நிறுவனம்! Reviewed by irumbuthirai on June 05, 2021 Rating: 5

வீடுகளுக்கு சென்று சிகிச்சையளித்த போலி கொரோனா வைத்தியர் கைது!

June 05, 2021

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கும் நபர்களை குணப்படுத்துவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் போலி டாக்டர் மற்றும் அவருக்கு உதவி வழங்கிய நபரும் கெஸ்பேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹபொல பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 
இவர்கள் முகநூலில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணப்படுத்துவதற்கு தங்களால் முடியுமென்று பதிவேற்றியுள்ளதுடன், அதனூடாக தங்களை தொடர்பு கொள்ளும் நபர்களிடமே இவ்வாறு பண மோசடிகளை செய்துள்ளதுடன் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சைக்காக தம்மை தொடர்புகொள்பவர்களது 
வீடுகளுக்கே சென்றுள்ளனர். சிகிச்சைக்காக ஒருவரிடமிருந்து தலா 12,000 ரூபா வரை அறவிட்டுள்ளனர். சந்தேக நபர்கள் பயன்படுத்திய வேனையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து பல வகையான மருந்துப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வீடுகளுக்கு சென்று சிகிச்சையளித்த போலி கொரோனா வைத்தியர் கைது! வீடுகளுக்கு சென்று சிகிச்சையளித்த போலி கொரோனா வைத்தியர் கைது! Reviewed by irumbuthirai on June 05, 2021 Rating: 5

சகல முன்பள்ளிகளுக்கும் ரூபா. 6 இலட்சம்!

June 04, 2021

முன்பள்ளிப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் விசேட வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக முன்பள்ளி பாடசாலைகளில் உரிய வசதிகள் கொண்ட வகுப்பறைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. 
இதற்காக ஒவ்வொரு முன்பள்ளிப் பாடசாலைக்கும் 
6 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டமை பாரிய வெற்றியாகும் என்று இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். 
இதேவேளை, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2,500 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படுகின்றமை மற்றுமொரு வெற்றியாகும். முன்பள்ளிப் பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கென விசேட தேசிய கொள்கையொன்றும் வகுக்கப்படுகின்றது எனவும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மேலும் தெரிவித்தார்.
சகல முன்பள்ளிகளுக்கும் ரூபா. 6 இலட்சம்! சகல முன்பள்ளிகளுக்கும் ரூபா. 6 இலட்சம்! Reviewed by irumbuthirai on June 04, 2021 Rating: 5

31-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

June 04, 2021

31-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.



31-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 31-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on June 04, 2021 Rating: 5

ஜூன் 8முதல் சிவப்பு பட்டியலுக்கு வரும் இலங்கை!

June 04, 2021

எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல் இங்கிலாந்தின் சிவப்புப் பட்டியலில் இலங்கை இடம்பெறும் என இங்கிலாந்து போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 
இங்கிலாந்தில் வாழ்வோர் சிவப்புப் பட்டியல் நாடுகள் அல்லது பிரதேசங்களுக்கு பயணிக்கக் கூடாது. அத்தியாவசிய பயணத்துக்கு மட்டுமே சிவப்பு பட்டியல் நாடுகளுக்கு அனுமதிக்கப்படுவர். மேலும் சிவப்பு பட்டியல் நாடொன்றிலிருந்து திரும்பும் எந்தவொரு இங்கிலாந்து குடியிருப்பாளரும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
ஜூன் 8முதல் சிவப்பு பட்டியலுக்கு வரும் இலங்கை! ஜூன் 8முதல் சிவப்பு பட்டியலுக்கு வரும் இலங்கை! Reviewed by irumbuthirai on June 04, 2021 Rating: 5

செம்மஞ்சள் நிற வெளவால்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு!

June 03, 2021

மாத்தறை பிடபெத்தர, மஹபொதுவில பிரதேசத்தில் தேயிலை மரம் ஒன்றில் இருந்து செம்மஞ்சள் நிறத்திலான இரண்டு வௌவால்கள் பீ.கே.பிரேமசிறி என்ற நபரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
இது தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்ததை தொடர்ந்து அரிய வகை விலங்காக கருதி அவற்றை தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மஞ்சள் நிற வெளவால்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு! செம்மஞ்சள் நிற வெளவால்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு! Reviewed by irumbuthirai on June 03, 2021 Rating: 5
Powered by Blogger.