பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!

June 08, 2021

பலர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருவதாக குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப்பிரிவு இவ்வாறான செயல் பிடியாணை இன்றி கைது செய்யப்படக்கூடியதொரு குற்றமாகும் என தெரிவித்துள்ளது. 
அறிக்கை ஒன்றை வெளியிட்டே பொலிஸ் ஊடகப் பிரிவு இவ்வாறு தெரிவித்துள்ளது. 
இது போன்ற போலியான தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும், கொரோனா பரவலை தடுப்பதற்கான வேலைத் திட்டங்களுக்கு இடையூறாகவும் அமைவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை! பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை! Reviewed by irumbuthirai on June 08, 2021 Rating: 5

தரம் 1 ற்கான அனுமதி: நீடிக்கப்பட்டது விண்ணப்ப முடிவு திகதி:

June 08, 2021

2022 ம் வருடத்திற்காக தரம் - 01ற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி இந்த மாதம் (ஜூன்) 30ஆம் திகதி ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது. 
அந்த விண்ணப்ப முடிவுத் திகதி மேலும் ஒரு மாதத்தால் நீடிக்கப்படுவதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
தற்போது நிலவுகின்ற கொரோனா பரவல் மற்றும் பயணத் தடை காரணமாக பெற்றோர்களுக்கு இதில் உள்ள சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தரம் 1 ற்கான அனுமதி: நீடிக்கப்பட்டது விண்ணப்ப முடிவு திகதி: தரம் 1 ற்கான அனுமதி: நீடிக்கப்பட்டது விண்ணப்ப முடிவு திகதி: Reviewed by irumbuthirai on June 08, 2021 Rating: 5

அரசுடமையாக்கப்பட்ட பொருட்கள் மூலம் மக்களுக்கு சலுகை: அரசாங்கத்தின் புதிய முயற்சி:

June 08, 2021

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் தடையின்றி வழங்க அரசாங்கம் புதுவகையான முயற்சியை மேற்கொண்டுள்ளது. 
இதுதொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை கீழே தருகிறோம். 
தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலைமையால் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை சலுகை விலையில் பற்றாக்குறையின்றி விநியோகிக்கும் பொறிமுறையொன்று தற்போது லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. 
குறித்த பொறிமுறையை தொடர்ந்தும் மேற்கொண்டு செல்வதற்கு இயலுமான வகையில் இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் இலங்கை சுங்கத்தால் அரச உடமையாக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை லங்கா சதொச நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வர்த்தக அமைச்சரும் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் அவர்களும் சமர்ப்பித்த கூட்டாக சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எனவே அந்த வகையில் அரசுடமையாக்கப்பட்ட பொருட்களை சதொச மூலம் இவ்வாறு குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு பொதுமக்களுக்கு கிடைத்திருக்கிறது.
அரசுடமையாக்கப்பட்ட பொருட்கள் மூலம் மக்களுக்கு சலுகை: அரசாங்கத்தின் புதிய முயற்சி: அரசுடமையாக்கப்பட்ட பொருட்கள் மூலம் மக்களுக்கு சலுகை: அரசாங்கத்தின் புதிய முயற்சி: Reviewed by irumbuthirai on June 08, 2021 Rating: 5

இணையவழிக் கல்விக்காக மலையேறும் மாணவர்கள்:

June 08, 2021

நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளமையால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒருபக்கம் அரசாங்கம் மாணவர்களுக்கு வளவாளர்களைக் கொண்டு தொலைக்காட்சி ஊடாக பாடங்களை நடாத்துகின்றது. 
இன்னொருபுறம் ஆசிரியர்களினால் அதிகளவில் இணையவழி ஊடாக கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முன்பள்ளி முதல் உயர்தரம் வரை சகல கற்பித்தல் நடவடிக்கைகளும் இணையவழி ஊடாகவும் நடைபெறுகின்றன. 
 இணையவழி மூலம் கற்பதில் மாணவர்கள் பெரும் சிரமங்களை 
எதிர்நோக்கி வருவதாக அவ்வப்போது பல செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. 
அந்தவகையில் கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முருத்தெட்டுவ, யோகம உட்பட 06 கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு இணைய வசதியை பெற்றுக்கொள்ளக்கூடிய வலையமைப்பு வசதிகள் இன்மையால் தமது இருப்பிடத்திலிருந்து உயர்ந்த இறப்பர் மலைப்பிரதேசங்களுக்கு சென்று இணைய வழியில் கல்வியை தொடர்கின்றனர். 
இதற்காக இவர்கள் காட்டுவழியின் ஊடாகவே பயணிக்கவேண்டும். தற்பொழுது தொடர்ந்து மழை பெய்துவருவதால் மலை உச்சியில் கூடாரம் அமைத்து கல்வி கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாணவர்களும் பெற்றோர்களும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழிக் கல்விக்காக மலையேறும் மாணவர்கள்: இணையவழிக் கல்விக்காக மலையேறும் மாணவர்கள்: Reviewed by irumbuthirai on June 08, 2021 Rating: 5

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (ஆங்கிலம்)

June 08, 2021

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய ஆங்கிலம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 
Meaning of words - 1,2.
Meaning of sentences 
Read the poster 
Picture description - 1,2,3,4
Let's learn "There is / There are" 
what is it famous for? 
Festivals 
Present Tense & Past Tense 
Foods 
Sports 
Let's Make Words 
Read sentences 
Check Spellings 
What are they doing? 
Who are we? 
Let's Make Sentences போன்ற பாட உள்ளடக்கங்கள் காணப்படுகின்றன.

மாணவர்கள் சுயமாக கற்கும் வகையில் வடிவமைப்பு 

இலகுவான எளிமையான விளக்கங்கள் 

படங்கள் மற்றும் வீடியோ முறையிலும் விளக்கங்கள் 

பயிற்சிகளை சுயமாக செய்து பார்க்கும் வசதி 

குறித்த பாடத்தை முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

English - Gr. 5

தொடர்புடைய ஏனைய இணைப்புகள்:

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்)

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (கணிதம்)

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (தமிழ் மொழி)


Join our WhatsApp Groups:

https://chat.whatsapp.com/J3Psc05pUyA73ka1VhP8Po

https://chat.whatsapp.com/DD0J0JMYyTlJvyaSpjkujt

Join our Telegram Channel:

https://t.me/irumbuthirainews

Like our FB Page:

https://www.facebook.com/Best-News-Network-103571800995785/

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (ஆங்கிலம்) தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (ஆங்கிலம்) Reviewed by irumbuthirai on June 08, 2021 Rating: 5

71 கண்ணிவெடிகளை நீக்கிய எலி: உயர் விருதுடன் ஓய்வையும் பெற்றது:

June 08, 2021

71 கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்த பெருமையைப் பெற்ற மகாவா என்ற பெயருடைய எலி தனது 05 வருட பணிக்கு பின்னர் ஓய்வு பெறுகிறது. 
கம்போடியாவலேயே குறித்த எலி இந்தே சாதனையை செய்துள்ளது. மகாவா, முதன்முதலில் 
அபோபோ எனும் அற நிறுவனத்தால் கண்ணிவெடிகளின் இரசாயனத்தைக் கண்டறிய பயிற்சிபெற்றது. கண்ணிவெடிகள் இருப்பதை மாகவா நுகர்ந்தால் அது நிலத்தைக் கீறும். எனவே அதன்வழி கண்ணிவெடிகள் இருப்பதை ஊழியர்களும் அறிந்து அதனை அகற்றுவர். 
மகாவாவுக்குக் கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது வழங்கப்பட்டது. 77 வருடங்களில் அந்த விருதைப் பெற்ற முதல் எலி இதுவாகும்.
71 கண்ணிவெடிகளை நீக்கிய எலி: உயர் விருதுடன் ஓய்வையும் பெற்றது: 71 கண்ணிவெடிகளை நீக்கிய எலி: உயர் விருதுடன் ஓய்வையும் பெற்றது: Reviewed by irumbuthirai on June 08, 2021 Rating: 5

டொனால்ட் டிரம்பின் ஃபேஸ்புக்: விதிக்கப்பட்டது இரு வருட தடை:

June 08, 2021

அமெரிக்காவில் கடந்த வருடம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த டொனால்ட் டிரம்ப், சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவுகள் அங்கு வன்முறையைத் தூண்டியது. 
எனவே  டிரம்பின் பேஸ்புக் பக்கம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை அதாவது இரண்டு வருடங்கள் முடக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களுக்கு பின்னர் பொதுமக்கள் 
பாதுகாப்பிற்கு எந்த பிரச்சினைகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே மீண்டும் டிரம்பின் FB கணக்கை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 
இதேவேளை இந்த தடை குறித்து டொனால்ட் டிரம்ப் கூறுகையில், “2 ஆண்டுகள் தனது பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது தனக்கு வாக்களித்த மக்களுக்கு கிடைத்த அவமரியாதை” என தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்பின் ஃபேஸ்புக்: விதிக்கப்பட்டது இரு வருட தடை: டொனால்ட் டிரம்பின் ஃபேஸ்புக்: விதிக்கப்பட்டது இரு வருட தடை: Reviewed by irumbuthirai on June 08, 2021 Rating: 5

கப்பலை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு! விசாரணைக்கு 5 குழுக்கள்!

June 07, 2021

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் கடலில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக ஐந்து குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 
இதேவேளை கப்பல் தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடற்படைத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளது. கப்பலின் வீடியோ தரவு பதிவகத்தையும் விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களம் பெற்றுள்ளது. 
இதேவேளை இந்த கப்பல் தீ விபத்துக்குள்ளாகி கடலுக்குள் மூழ்கியதால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அதற்கான இழப்பீடுகளை பெற்றுக் கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (7) நீதி அமைச்சில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கப்பலை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு! விசாரணைக்கு 5 குழுக்கள்! கப்பலை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு! விசாரணைக்கு 5 குழுக்கள்! Reviewed by irumbuthirai on June 07, 2021 Rating: 5

வெகுஜன ஊடக அமைச்சில் பதவிக்கான ஆட்சேர்ப்பு:

June 07, 2021

வெகுஜன ஊடக அமைச்சில் நிலவழி தொலைக்காட்சி (Analog) ஒளிபரப்பினை எண்ணியல் (Digital) மயப்படுத்தும் திட்டத்தின் கீழ் பின்வரும் திட்டமிடல் பணிப்பாளர் பதவிக்கான விண்ணம் கோரப்பட்டுள்ளது: 
விண்ணப்ப முடிவு திகதி: 18-06-2021. 
முழுமையான விபரங்களை கீழே காணலாம்.



வெகுஜன ஊடக அமைச்சில் பதவிக்கான ஆட்சேர்ப்பு: வெகுஜன ஊடக அமைச்சில் பதவிக்கான ஆட்சேர்ப்பு: Reviewed by irumbuthirai on June 07, 2021 Rating: 5

ஒரே உடலில் 32 முறை உருமாறிய கொரோனா!

June 07, 2021

தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த 36 வயது பெண்ணுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 
அவரின் உடலில் 216 நாட்களாக கொரோனா வைரஸ் 32 வகைகளாக உருமாறியுள்ளதாக ஆய்வாளா்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் பிரிட்டன், தென் ஆபிரிக்கா வகைகளும் அடங்கும் என தெரிவித்துள்ளனா். 
2006 ஆம் ஆண்டு முதல் HIV-ஆல் பாதிக்கப்பட்டுள்ள குறித்த பெண்ணுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகக் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரே உடலில் 32 முறை உருமாறிய கொரோனா! ஒரே உடலில் 32 முறை உருமாறிய கொரோனா! Reviewed by irumbuthirai on June 07, 2021 Rating: 5

நாளை (7) முதல் வாகனங்களுக்கு 11 வகையான ஸ்டிக்கர்கள்...

June 07, 2021

அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிப்பதற்கு நாளை முதல் விஷேட 11 ஸ்டிகர்கள் அறிமுகப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 
பயண கட்டுப்பாடு இருக்கும் வரை இது செல்லுபடியாகும் என அவர் தெரிவித்துள்ளார். 
அதன் விபரங்கள் வருமாறு: 
பச்சை நிறம் - சுகாதார பிரிவினர். 
இளம் நீல நிறம் - முப்படை மற்றும் பொலிஸார். 
ஊதா நிறம் - அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்போர். 
இளம் பழுப்பு நிறம் - இறக்குமதி, ஏற்றுமதி, உற்பத்தி மற்றும் தொழிற்சாலை துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு. 
மஞ்சள் நிறம் - அத்தியவசிய பொருட்கள் விநியோகத்திற்கு. 
செம்மஞ்சள் நிறம் - ஊடக துறையினர். 
வௌ்ளை நிறம் - வௌிநாடுகளுக்கு செல்ல பயணிப்போருக்கு. 
கருப்பு நிறம் - இறுதி சடங்கு, மருத்துவ பரிசோதனை போன்றவற்றிற்கு. 
சாம்பல் நிறம் - உணவுகளை விநியோகிப்பதற்கு.

  • Health Services – Green
  • Tri-Force/Police – Blue
  • Essential items distribution – Red
  • Essential services supplies – Yellow
  • Import/Export – Brown
  • Food delivery – Grey
  • Private sector – Purple
  • Media – Orange
  • Airport travel – White
  • Emergency – Black
நாளை (7) முதல் வாகனங்களுக்கு 11 வகையான ஸ்டிக்கர்கள்... நாளை (7) முதல் வாகனங்களுக்கு 11 வகையான ஸ்டிக்கர்கள்... Reviewed by irumbuthirai on June 07, 2021 Rating: 5

புதிதாக தெரிவு செய்யப்பட்ட தேசிய பாடசாலைகளின் நிதிப் பிரயோகம் (சுற்றறிக்கை இணைப்பு)

June 06, 2021

அரசாங்கத்தின் 1000 தேசிய பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் புதிதாக தெரிவு செய்யப்பட்ட தேசிய பாடசாலைகளுக்கு வழங்கப்படும் நிதி மற்றும் அவற்றை எவ்வாறு பிரயோகிக்க வேண்டும் என்பன தொடர்பான அறிவுறுத்தல்கள், விளக்கங்கள் தொடர்பான சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 
குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.



Join our WhatsApp Groups:



Join our Telegram Channel:


Like our FB Page:



புதிதாக தெரிவு செய்யப்பட்ட தேசிய பாடசாலைகளின் நிதிப் பிரயோகம் (சுற்றறிக்கை இணைப்பு) புதிதாக தெரிவு செய்யப்பட்ட தேசிய பாடசாலைகளின் நிதிப் பிரயோகம் (சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on June 06, 2021 Rating: 5

வழங்கப்பட்டது நீர் கட்டடணத்திற்கான சலுகைக் காலம்!

June 06, 2021

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பலருக்கு கட்டணம் செலுத்த முடியாமல் போயுள்ளதால் நீர் கட்டணம் செலுத்துவதற்காக சலுகை காலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 
அந்தவகையில் அவ்வாறானவர்களுக்கு ஒரு மாத காலம் சலுகை வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வழங்கப்பட்டது நீர் கட்டடணத்திற்கான சலுகைக் காலம்! வழங்கப்பட்டது நீர் கட்டடணத்திற்கான சலுகைக் காலம்! Reviewed by irumbuthirai on June 06, 2021 Rating: 5
Powered by Blogger.