இலங்கையில் சிறுமியொருவர் இணையத்தினூடாக விற்பனை!
irumbuthirai
June 09, 2021
கல்கிசை பகுதியில் வாடகை வீடொன்றில் சிறுமியை தடுத்துவைத்து, சிறுமியின் படத்தை இணையத்தில்
பிரசுரித்து, பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தெல்கொட பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியை பாலியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தியவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை கைது செய்யப்பட்ட 35 வயதான சந்தேகநபர், மொறட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் சிறுமியொருவர் இணையத்தினூடாக விற்பனை!
Reviewed by irumbuthirai
on
June 09, 2021
Rating: