மீண்டும் ஐ.நா. பொதுச் செயலாளராக தெரிவானார் ஆன்டனியோ குட்டரெஸ்!

June 10, 2021

போர்த்துக்கல் முன்னாள் பிரதமரான ஆன்டனியோ குட்டரெஸ் (வயது 72) ஐ.நா.வின் 9-வது பொதுச்செயலாளராக கடந்த 2017-01-01ம் திகதி முதல் பதவி வகித்து வருகிறார். 
இவரது பதவிக்காலம் இந்த வருடம் டிசம்பர் 31-ம் திகதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், 
ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆன்டனியோ குட்டரெசையே மீண்டும் பொதுச் செயலாளராக்குவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
இதைத் தொடர்ந்து எதிர்வரும் 18-ம் திகதி நடைபெறும் ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்தில் முறைப்படி அவர் தேர்வு செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அவரது பதவிக்காலம் அடுத்த 2022 ஜனவரி 1 முதல் 2026-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் திகதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஐ.நா. பொதுச் செயலாளராக தெரிவானார் ஆன்டனியோ குட்டரெஸ்! மீண்டும் ஐ.நா. பொதுச் செயலாளராக தெரிவானார் ஆன்டனியோ குட்டரெஸ்! Reviewed by irumbuthirai on June 10, 2021 Rating: 5

உலகில் முதன்முறையாக சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பெற்ற Bitcoin நாணயம்!

June 10, 2021

உலகில் முதன்முறையாக பிட்காயின் (Bitcoin) நாணயத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. 
மத்திய அமெரிக்க நாடான 
எல் சால்வடாா் என்று நாடே இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக ராய்ட்டஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது. 
வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றும் தொழிலாளா்கள் அனுப்பும் பணத்தை அடிப்படையாகக் கொண்டே எல் சால்வடாரின் பொருளாதாரம் தங்கி உள்ளது. 
இந்த நிலையில், நாட்டை மேம்படுத்த இதுபோன்ற மெய்நிகா் நாணயங்கள் உதவும் என்று அதிபா் நயீப் புகேலே கூறி வந்த நிலையில் பிட்காயினை சட்டப்பூா்வ நாணயமாக அங்கீகரிக்கும் மசோதாவை அவா் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாா். இந்த மசோதாவை ஆதரித்து பெரும்பான்மையான எம்.பி.க்கள் வாக்களித்தனா். 
இதையடுத்து, எல் சால்வடாரில் நாளாந்தம் பயன்படுத்தக்கூடிய சட்டப்பூா்வ நாணயமாக பிட்காயின் (Bitcoin) அங்கீகாரம் பெற்றுள்ளது. 
இத்தகைய அங்கீகாரத்தை பிட்காயின் பெற்றுள்ளது இதுவே முதல்முறையாகும் என்று ராய்ட்டா் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
உலகில் முதன்முறையாக சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பெற்ற Bitcoin நாணயம்! உலகில் முதன்முறையாக சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பெற்ற Bitcoin நாணயம்! Reviewed by irumbuthirai on June 10, 2021 Rating: 5

தடுப்பூசி போட்டுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா!

June 10, 2021

நேற்று (9) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க சென்ற அமைச்சர்கள், பாராளுமன்ளற உறுப்பினர்களிடம் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டது. 
அதில். 
வன்னிப் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்கனவே ஏற்றியுள்ளமையும் குறிபப்பிடத்தக்கது.
தடுப்பூசி போட்டுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா! தடுப்பூசி போட்டுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா! Reviewed by irumbuthirai on June 10, 2021 Rating: 5

திட்டமிட்ட படி சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறுமா? அமைச்சரின் அறிவிப்பு.

June 10, 2021

கொவிட் 19 பெருந்தொற்று நிலைமைகள் நீடித்தாலும் பரீட்சைகளை நடத்துவது கைவிடப்படமாட்டாது. சகல பரீட்சைகளும் திட்டமிட்டவாறு நடத்தப்படும் என கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை என்பன இந்த ஆண்டிலும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2022) ஜனவரி மாதத்திலும் நடத்தப்படும், என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிட்ட படி சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறுமா? அமைச்சரின் அறிவிப்பு. திட்டமிட்ட படி சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறுமா? அமைச்சரின் அறிவிப்பு. Reviewed by irumbuthirai on June 10, 2021 Rating: 5

ஜப்பானில் தொழில்வாய்ப்பு மற்றும் கல்வி தொடர்பான வழிகாட்டல் செயற்றிட்டம்:

June 10, 2021

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கிணங்க ஜப்பானில் உள்ள இலங்கை தூதுவர் சஞ்சீவ குணசேகர வின் ஆலோசனையின் கீழ் "ஜப்பான் கல்வி மற்றும் புலமைப் பரிசில் வாய்ப்பு" என்ற தலைப்பிலான மூன்றாவது வழிகாட்டல் செயற்றிட்டம் கடந்த 6ஆம் திகதி நடைபெற்றது. 
ஜப்பானில் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு விரும்பும் இலங்கை மாணவர்களை இலக்காகக் கொண்டு 
இந்த வழிகாட்டல் செயல்திட்டம் நடைபெற்றது. 
ஜப்பானிய மொழி பாடசாலை, தொழிற்பயிற்சி பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் பட்டப்பின் படிப்பு பாடசாலையுடன் இணைந்து இவ்வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
முகநூல் (FB) மற்றும் யூடியூப் (youtube) மூலம் 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டிருந்தனர். 
இதில் உரையாற்றிய தூதுவர் சஞ்சீவ குணசேகர , ஜப்பான் பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலைகளில் கற்பதன் முக்கியத்துவம் விசேடத்துவம் தொடர்பிலும் அதன் எதிர்கால பிரதிபலன்கள் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்தார்.
ஜப்பானில் தொழில்வாய்ப்பு மற்றும் கல்வி தொடர்பான வழிகாட்டல் செயற்றிட்டம்: ஜப்பானில் தொழில்வாய்ப்பு மற்றும் கல்வி தொடர்பான வழிகாட்டல் செயற்றிட்டம்: Reviewed by irumbuthirai on June 10, 2021 Rating: 5

தரம் - 1 மாணவர் அனுமதி: தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு:

June 10, 2021

2022 ஆம் வருடத்திற்காக தரம் 1ற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு தேவையான தேர்தல் பட்டியல் தகவல்களை உரிய கிராம உத்தியோகத்தரிடமிருந்து அல்லது 
தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 
இதேவேளை முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு தேவையான 2016, 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கான தேர்தல் பட்டியல் தகவல்களை இவ்வாறு இணையத்திலிருந்து பெற்றுக் கொண்டதன் பின்னர் அவற்றை கிராம உத்தியோகத்தரிடமோ அல்லது வேறு அதிகாரிகளிடமோ உறுதிப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
தரம் - 1 மாணவர் அனுமதி: தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு: தரம் - 1 மாணவர் அனுமதி: தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு: Reviewed by irumbuthirai on June 10, 2021 Rating: 5

பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு தொடர்பாகவும் கைநூலை பெறுதல் தொடர்பாகவும் வெளியான அறிக்கை!

June 09, 2021

பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான திகதி 18-6-2021 வரை நீடிப்பது தொடர்பாகவும் மாணவர் வழிகாட்டி நூலை எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
அந்த அறிக்கையை கீழே காணலாம்.


பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு தொடர்பாகவும் கைநூலை பெறுதல் தொடர்பாகவும் வெளியான அறிக்கை! பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு தொடர்பாகவும் கைநூலை பெறுதல் தொடர்பாகவும் வெளியான அறிக்கை! Reviewed by irumbuthirai on June 09, 2021 Rating: 5

இலங்கையில் சிறுமியொருவர் இணையத்தினூடாக விற்பனை!

June 09, 2021

இணையத் தளத்தினூடாக சிறுமியொருவரை விற்பனை செய்த ஒருவர் கல்கிசை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 
கல்கிசை பகுதியில் வாடகை வீடொன்றில் சிறுமியை தடுத்துவைத்து, சிறுமியின் படத்தை இணையத்தில் 
பிரசுரித்து, பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 
தெல்கொட பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குறித்த சிறுமியை பாலியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தியவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். 
இதேவேளை கைது செய்யப்பட்ட 35 வயதான சந்தேகநபர், மொறட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் சிறுமியொருவர் இணையத்தினூடாக விற்பனை! இலங்கையில் சிறுமியொருவர் இணையத்தினூடாக விற்பனை! Reviewed by irumbuthirai on June 09, 2021 Rating: 5

மக்ரோன் ஒழிக! கன்னத்தில் அறை வாங்கிய ஜனாதிபதி:

June 09, 2021

பிரான்சின் தென்கிழக்கு பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் முகத்தில் நபர் ஒருவர் ஓங்கி அறைந்துள்ளார். 
இதனை சற்றும் எதிர்பாராத பாதுகாப்பு அதிகாரிகள் உடனே சுதாரித்துக்கொண்டு ஜனாதிபதியை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர். 
 பச்சை நிறடீசேர்ட் அணிந்த அந்த நபர் "மக்ரோன் ஒழிக" என்று சத்தமிட்டு கொண்டு அறைந்துள்ளார். இது தொடர்பில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 
இந்த சம்பவம் உலகம் பூராவும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மக்ரோன் ஒழிக! கன்னத்தில் அறை வாங்கிய ஜனாதிபதி: மக்ரோன் ஒழிக! கன்னத்தில் அறை வாங்கிய ஜனாதிபதி: Reviewed by irumbuthirai on June 09, 2021 Rating: 5

உதயமானது புதிய பல்கலைக்கழகம்! ஆகஸ்ட் 1 முதல் புதிய பெயர்!

June 09, 2021

இலங்கையில் மற்றுமொரு புதிய பல்கலைக்கழகம் உதயமாகியுள்ளது. கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் இன் கையொப்பத்துடன் இதற்கான அதிவிசேட வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 
அதாவது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 
உள்நாட்டு மூலவள அடிப்படையினுள் விழுமியத்தை உருவாக்குதல் பற்றி மாணவர்களுக்குக் கல்வி புகட்டுவதன்மீது, இந்தப் பல்கலைக்கழகம் கூடுதலான அழுத்தத்தைக் கொண்டிருத்தல் வேண்டும் என்று அந்த வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்ற தற்போதைய பெயர், எதிர்வரும் 
யூலை மாதம் 31 ஆம் திகதியுடன் நீக்கப்பட்டு, ஓகஸ்ட் மாதம் 1ம் திகதி முதல், இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என்ற பெயர் அமுலாகும் என வர்த்தமானியில் குறிப்பிப்படப்பட்டுள்ளது.
உதயமானது புதிய பல்கலைக்கழகம்! ஆகஸ்ட் 1 முதல் புதிய பெயர்! உதயமானது புதிய பல்கலைக்கழகம்! ஆகஸ்ட் 1 முதல் புதிய பெயர்! Reviewed by irumbuthirai on June 09, 2021 Rating: 5

இன்று ஆரம்பமானது கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி திட்டம்!

June 09, 2021

கர்ப்பிணிகளுக்காக கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
தற்போது 2 லட்சத்து 76 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்கள் நாடு முழுவதிலும் உள்ளனர். அவர்களுக்கான தடுப்பூசி படிப்படியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பமானது கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி திட்டம்! இன்று ஆரம்பமானது கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி திட்டம்! Reviewed by irumbuthirai on June 09, 2021 Rating: 5

விசித்திரமான பயணத்தடை இது!

June 09, 2021

நாட்டில் பயணத்தடை விதிக்கப்படுவதாக புதிய சொல்லொன்று பாவிக்கப்படுகிறது. இது முடக்கமும் அல்ல, இதுவொரு ஊரடங்கு சட்டமும் அல்ல. செல்வாக்குள்ளவர்கள் பயணம் செய்யக் கூடிய வகையில் தான் அந்த பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார். 
நாடாளுமன்றில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 
ஒரு பக்கம் மண்சரிவு, மழை வெள்ளம். அதிலே மக்கள் இறந்திருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இன்னொரு புறத்தில் நாட்டில் வாழும் மக்கள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான உணவு மற்றும் அவர்கள் வாழ்வதற்கான வசதிகள் எதுவும் செய்யப்படாத சூழல் நிலவுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
விசித்திரமான பயணத்தடை இது! விசித்திரமான பயணத்தடை இது! Reviewed by irumbuthirai on June 09, 2021 Rating: 5

ரணில் வருகின்றார்: ஐக்கிய மக்கள்சக்தி இரண்டாகும்:

June 09, 2021

ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வாரம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதை தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாக உடையும், ஐக்கிய மக்கள்சக்தியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை சந்தித்துள்ளனர் என அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 
அதைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கவே எதிர்கட்சி தலைவராக மாறுவார் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரணில் வருகின்றார்: ஐக்கிய மக்கள்சக்தி இரண்டாகும்: ரணில் வருகின்றார்: ஐக்கிய மக்கள்சக்தி இரண்டாகும்: Reviewed by irumbuthirai on June 09, 2021 Rating: 5
Powered by Blogger.