வெளியானது எரிபொருள்களின் புதிய விலைபட்டியல்! நள்ளிரவு முதல் அமுல்!

June 11, 2021

எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அதிகரிக்கப்பட்ட புதிய விலைகள் லீற்றர் 1 க்கு வருமாறு: 
Petrol Octane 92 (பெற்றோல் 92) - 157/- 
Petrol Ocatne 95 (பெற்றோல் 95) -184/- 
Auto Diesel (ஒடோ டீசல்)- 111/- 
Super Diesel (சுபர் டீசல்)- 144/- 
Kerosene (மண்ணெண்ணெய்) - 77/-
மேலும் இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியானது எரிபொருள்களின் புதிய விலைபட்டியல்! நள்ளிரவு முதல் அமுல்! வெளியானது எரிபொருள்களின் புதிய விலைபட்டியல்! நள்ளிரவு முதல் அமுல்! Reviewed by irumbuthirai on June 11, 2021 Rating: 5

முதன்முறையாக CID யின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பெண்!

June 11, 2021

இலங்கையில் முதன்முறையாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பெண்ணொருவர் உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதிப் பணிப்பாளர் பதவிக்கே இவ்வாறு நியமிக்கப்பட்டவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முதுமால என்பவராகும். 
இவர் 2007.11.03 ஆம் ஆண்டு பயிற்சி உதவி பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இணைந்துக் கொண்ட நிலையில் 14 வருடங்கள் சேவைக் காலத்தினை கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக CID யின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பெண்! முதன்முறையாக CID யின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பெண்! Reviewed by irumbuthirai on June 11, 2021 Rating: 5

Vacancy: International Organization for Migration (IOM)

June 11, 2021

Vacancy: International Organization for Migration (IOM) 
 Monthly Salary: Rs. 152,747.70 
Closing date: 20-06-2021. 
 See the details below.
Source : Sunday Observer.

Vacancy: International Organization for Migration (IOM) Vacancy: International Organization for Migration (IOM) Reviewed by irumbuthirai on June 11, 2021 Rating: 5

Vacancy: Commercial Bank of Ceylon PLC.

June 11, 2021

Vacancy: Commercial Bank of Ceylon PLC. 
Post: Information Security Engineer. 
Closing date: 10 days from 6/6/2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancy: Commercial Bank of Ceylon PLC. Vacancy: Commercial Bank of Ceylon PLC. Reviewed by irumbuthirai on June 11, 2021 Rating: 5

Vacancy: National Medicine Regulatory Authority

June 11, 2021

Vacancy: National Medicine Regulatory Authority 
Closing date: 19-06-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancy: National Medicine Regulatory Authority Vacancy: National Medicine Regulatory Authority Reviewed by irumbuthirai on June 11, 2021 Rating: 5

தடுப்பூசியின் மூன்றாவது டோசிற்கும் தயாராகுங்கள் - ஜனாதிபதி

June 11, 2021

சுகாதாரப் பரிந்துரைகளின்படி, உலகளாவிய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, தடுப்பூசி ஏற்றுவதில் 3வது டோஸ் தேவைப்டுமாக இருந்தால், அதனை 
இப்போதே பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். 
உலகின் பல முன்னணி நாடுகள் மூன்றாவது டோஸுக்கான தடுப்பூசிகளை தற்போது கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளன. இலங்கையும் இது குறித்து விசேட கவனம் செலுத்தி மூன்றாவது டோஸ் வழங்குவதற்கான அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
தடுப்பூசியின் மூன்றாவது டோசிற்கும் தயாராகுங்கள் - ஜனாதிபதி தடுப்பூசியின் மூன்றாவது டோசிற்கும் தயாராகுங்கள் - ஜனாதிபதி Reviewed by irumbuthirai on June 11, 2021 Rating: 5

சீரற்ற காலநிலை: இதுவரை இழப்பீடு பெறாதவர்களுக்கான அறிவித்தல்!

June 11, 2021

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. 
இதுவரை 21 பேர் மரணித்ததுடன் 172000 ற்கும் மேற்பட்டோர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
எனவே இந்த பேரழிவு காரணமாக உயிர் மற்றும் சொத்து இழப்புக்களுக்கு இழப்பீடு பெறுவதில் ஏதேனும் சிக்கல் 
இருப்பின் 117 என்ற இலக்கத்திற்கு அல்லது குறித்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அழைப்பு விடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
மரணித்த ஒருவருக்கு 250,000 இழப்பீட்டுத் தொகையும், சேதமடைந்த வீடுகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் முதல் 25 லட்சம் வரையிலான இழப்பீட்டுத் தொகை மதிப்பீட்டு அறிக்கைக்கு அமைய வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை: இதுவரை இழப்பீடு பெறாதவர்களுக்கான அறிவித்தல்! சீரற்ற காலநிலை: இதுவரை இழப்பீடு பெறாதவர்களுக்கான அறிவித்தல்! Reviewed by irumbuthirai on June 11, 2021 Rating: 5

சிறுவர்கள் முகக்கவசம் அணிவது பிரச்சினையா?

June 11, 2021

சிறுவர்கள் முகக் கவசம் அணிவதைப் போன்று இரு கைகளையும் கழுவி சுத்தம் செய்வதற்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குழந்தை வைத்தியர் பேராசிரியர் குவனி லியனகே தெரிவித்தார். 
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று முன்தினம் (09) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
மேலும், பெற்றோர்களின் கண்காணிப்பின் கீழ் சிறுவர்கள் 
முகக்கவசம் அணிவதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிறுவர்கள் முகக்கவசம் அணிவது பிரச்சினையா? சிறுவர்கள் முகக்கவசம் அணிவது பிரச்சினையா? Reviewed by irumbuthirai on June 11, 2021 Rating: 5

ஆகஸ்ட் முதல் புதுவகையான கற்றல் முறை: வெளியானது அமைச்சரின் அறிவிப்பு:

June 11, 2021

இணைய வழியூடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்கள் அதே வழியில் திறனை வளர்த்துக் கொள்கிறார்களா என்ற பிரச்சினையின் காரணமாக வீட்டிலிருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மிக நெருக்கமடையச் செய்யும் 
புதிய கற்றல் முறையொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 
நேற்று முன்தினம் (9) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 
இந்த புதிய முறையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் வேலைத்திட்டமொன்றை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆகஸ்ட் முதல் புதுவகையான கற்றல் முறை: வெளியானது அமைச்சரின் அறிவிப்பு: ஆகஸ்ட் முதல் புதுவகையான கற்றல் முறை: வெளியானது அமைச்சரின் அறிவிப்பு: Reviewed by irumbuthirai on June 11, 2021 Rating: 5

இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கான மாணவர் அனுமதி - 2021 (25 ற்கும் மேற்பட்ட பட்டதாரி கற்கைநெறிகள்) / New Admission for Sri Lanka Technological Campus

June 10, 2021

இலங்கை தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்கு 2021 வருடத்திற்காக மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
25க்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு கற்கை நெறிகள் காணப்படுகின்றன. 
இது தொடர்பான முழுமையான விபரங்களை கீழே காணலாம்.
Source: Sunday Observer 6/6/2021.

இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கான மாணவர் அனுமதி - 2021 (25 ற்கும் மேற்பட்ட பட்டதாரி கற்கைநெறிகள்) / New Admission for Sri Lanka Technological Campus இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கான மாணவர் அனுமதி - 2021 (25 ற்கும் மேற்பட்ட பட்டதாரி கற்கைநெறிகள்) / New Admission for Sri Lanka Technological Campus Reviewed by irumbuthirai on June 10, 2021 Rating: 5

மீண்டும் ஐ.நா. பொதுச் செயலாளராக தெரிவானார் ஆன்டனியோ குட்டரெஸ்!

June 10, 2021

போர்த்துக்கல் முன்னாள் பிரதமரான ஆன்டனியோ குட்டரெஸ் (வயது 72) ஐ.நா.வின் 9-வது பொதுச்செயலாளராக கடந்த 2017-01-01ம் திகதி முதல் பதவி வகித்து வருகிறார். 
இவரது பதவிக்காலம் இந்த வருடம் டிசம்பர் 31-ம் திகதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், 
ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆன்டனியோ குட்டரெசையே மீண்டும் பொதுச் செயலாளராக்குவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
இதைத் தொடர்ந்து எதிர்வரும் 18-ம் திகதி நடைபெறும் ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்தில் முறைப்படி அவர் தேர்வு செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அவரது பதவிக்காலம் அடுத்த 2022 ஜனவரி 1 முதல் 2026-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் திகதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஐ.நா. பொதுச் செயலாளராக தெரிவானார் ஆன்டனியோ குட்டரெஸ்! மீண்டும் ஐ.நா. பொதுச் செயலாளராக தெரிவானார் ஆன்டனியோ குட்டரெஸ்! Reviewed by irumbuthirai on June 10, 2021 Rating: 5

உலகில் முதன்முறையாக சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பெற்ற Bitcoin நாணயம்!

June 10, 2021

உலகில் முதன்முறையாக பிட்காயின் (Bitcoin) நாணயத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. 
மத்திய அமெரிக்க நாடான 
எல் சால்வடாா் என்று நாடே இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக ராய்ட்டஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது. 
வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றும் தொழிலாளா்கள் அனுப்பும் பணத்தை அடிப்படையாகக் கொண்டே எல் சால்வடாரின் பொருளாதாரம் தங்கி உள்ளது. 
இந்த நிலையில், நாட்டை மேம்படுத்த இதுபோன்ற மெய்நிகா் நாணயங்கள் உதவும் என்று அதிபா் நயீப் புகேலே கூறி வந்த நிலையில் பிட்காயினை சட்டப்பூா்வ நாணயமாக அங்கீகரிக்கும் மசோதாவை அவா் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாா். இந்த மசோதாவை ஆதரித்து பெரும்பான்மையான எம்.பி.க்கள் வாக்களித்தனா். 
இதையடுத்து, எல் சால்வடாரில் நாளாந்தம் பயன்படுத்தக்கூடிய சட்டப்பூா்வ நாணயமாக பிட்காயின் (Bitcoin) அங்கீகாரம் பெற்றுள்ளது. 
இத்தகைய அங்கீகாரத்தை பிட்காயின் பெற்றுள்ளது இதுவே முதல்முறையாகும் என்று ராய்ட்டா் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
உலகில் முதன்முறையாக சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பெற்ற Bitcoin நாணயம்! உலகில் முதன்முறையாக சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பெற்ற Bitcoin நாணயம்! Reviewed by irumbuthirai on June 10, 2021 Rating: 5

தடுப்பூசி போட்டுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா!

June 10, 2021

நேற்று (9) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க சென்ற அமைச்சர்கள், பாராளுமன்ளற உறுப்பினர்களிடம் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டது. 
அதில். 
வன்னிப் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்கனவே ஏற்றியுள்ளமையும் குறிபப்பிடத்தக்கது.
தடுப்பூசி போட்டுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா! தடுப்பூசி போட்டுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா! Reviewed by irumbuthirai on June 10, 2021 Rating: 5
Powered by Blogger.