குமார் சங்கக்காரவிற்கு ICC வழங்கிய கௌரம்:

June 13, 2021

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) குமார் சங்கக்காரவை ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் (ICC Hall of Fame) என்ற பட்டியலில் சேர்த்து கௌரவித்துள்ளது. 
சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கிய வீரர்களை ICC இந்த பட்டியலில் சேர்த்து கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் 1996 - 2015 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கிரிக்கெட் விளையாட்டுக்கு பெரும் பங்களிப்பை செய்த வீரர்களுக்கான ICC Hall of Fame பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்காரவை சேர்த்துள்ளது. இத்தகைய கௌரவத்தை பெறும் 2வது இலங்கை வீரர் இவராவார். 
 இதற்கு முன்னர் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குமார் சங்கக்காரவிற்கு ICC வழங்கிய கௌரம்: குமார் சங்கக்காரவிற்கு ICC வழங்கிய கௌரம்: Reviewed by irumbuthirai on June 13, 2021 Rating: 5

வாழ்வதற்கு உகந்த நகரங்கள்: உலகிலேயே முதலிடம் இதற்குத்தான்!

June 13, 2021

உலகிலேயே வாழ்வதற்கு உகந்த நகரங்களில் (most liveable cities) நியூஸிலாந்தின் ஒக்லாந்து (Auckland) நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 
Economist Intelligence Unit (EIU) இன் வருடாந்த தரவரிசையில் இது வெளியிடப்பட்டுள்ளது. நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவற்றின் நகரங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. 
நியூஸிலாந்தின் கொரோனா முடக்கநிலை நடவடிக்கைகள் அதன் எல்லைகளுக்குள் COVID-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தியுள்ளன. எனவே ஒக்லாந்து போன்ற நகரங்களில் உள்ள மக்களால் தொற்றுக்கு முந்தைய வாழ்க்கைமுறையை அனுபவிக்க முடிந்தது என்று EIU தெரிவித்துள்ளது.
வாழ்வதற்கு உகந்த நகரங்கள்: உலகிலேயே முதலிடம் இதற்குத்தான்! வாழ்வதற்கு உகந்த நகரங்கள்: உலகிலேயே முதலிடம் இதற்குத்தான்! Reviewed by irumbuthirai on June 13, 2021 Rating: 5

கப்பலின் பாதிப்பு 20 வருடங்களுக்கு.... மீன்கள் எவ்வளவு பிளாஸ்டிக்கை சாப்பிட்டுள்ளன என்பதும் தெரியாது - அமைச்சர்

June 13, 2021

X-Press கப்பலின் தீ விபத்தினால் இலங்கையின் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்குமென சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
ஏற்கனவே நாங்கள் நாடு முழுவதும் கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் துகள்களின், பெரிய குவியல்களை சேகரித்திருக்கிறோம். இதில் எத்தனை மில்லியன் துகள்களை 
மீன்கள் சாப்பிட்டுள்ளன என்பது தெரியாது. இச்சேதங்களை டொலர்களிலும் மதிப்பிட முடியாது. ஒவ்வொரு வருடமும் நாட்டிற்கு எவ்வளவு அதிகமான பிளாஸ்டிக் இறக்குமதி செய்யப்படுகிறது என்பதை நாம் இப்போது கற்பனை செய்து கொள்ளலாம். 10% க்கும் குறைவான பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்பட்டு மீதமுள்ளவை சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்படுகின்றன. எனவே இந்த கப்பலால் ஏற்பட்ட சேதம், ஈடு செய்யப்பட வேண்டும் என்பதுடன் பொறுப்பான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கப்பலின் பாதிப்பு 20 வருடங்களுக்கு.... மீன்கள் எவ்வளவு பிளாஸ்டிக்கை சாப்பிட்டுள்ளன என்பதும் தெரியாது - அமைச்சர் கப்பலின் பாதிப்பு 20 வருடங்களுக்கு.... மீன்கள் எவ்வளவு பிளாஸ்டிக்கை சாப்பிட்டுள்ளன என்பதும் தெரியாது - அமைச்சர்  Reviewed by irumbuthirai on June 13, 2021 Rating: 5

முன்பள்ளி ஆசிரியர்களின் கடனுக்கு சலுகைக் காலம்:

June 13, 2021

முன்பள்ளி ஆசிரியர்கள் தாம் பெற்றுள்ள கடனுக்கான மாதாந்த கட்டணத்தை செலுத்துவதற்கு சலுகைக் காலமொன்றை பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் தான் கலந்துரையாடவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் மேம்பாட்டு, முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி, பாடசாலை அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த தெரிவித்தார். 
 கடந்த 9ஆம் திகதி அமைச்சில் மாகாண கல்விப் பணிப்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர இவ்வாறு குறிப்பிட்டார். 
இந்த சந்திப்பின்போது முன்பள்ளி தேசிய கொள்கை சட்ட வரைவு தொடர்பாகவும் எதிர்காலத்தில் முன்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
முன்பள்ளி ஆசிரியர்களின் கடனுக்கு சலுகைக் காலம்: முன்பள்ளி ஆசிரியர்களின் கடனுக்கு சலுகைக் காலம்: Reviewed by irumbuthirai on June 13, 2021 Rating: 5

விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்ட போட்டிப் பரீட்சைகளின் விபரம்

June 13, 2021

அரச பதவி வெற்றிடங்களுக்கு இணைத்துக் கொள்வதற்குரிய போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதி நாள் எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பொது சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.ஏ.பீ.தயா செனரத்ன அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளார். 
அவ்வாறு விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்ட பரீட்சைகள் பின்வருமாறு: 
1. இலங்கை வெளிநாட்டு சேவையின் மூன்றாம் வகுப்புக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டித் பரீட்சை 2020 (2021) 
2. நில பயன்பாட்டு கொள்கை திட்டமிடல் திணைக்களத்தின் நிர்வாக சேவைகள் பிரிவின் தரம் III ஆம் வகுப்பு உதவி பணிப்பாளர் (மாவட்ட நில பயன்பாடு) பதவிக்கு வரையறுக்கப்பட்ட போட்டித் பரீட்சை 2018 (2021) 
3. வர்த்தக அமைச்சின், வர்த்தக திணைக்களத்தின் நிர்வாக சேவை பிரிவின் மூன்றாம் தரத்தில் வர்த்தக உதவி பணிப்பளார் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டித் பரீட்சை. - 2021 
4. தகுதி அடிப்படையில் மேலாண்மை சேவை அலுவலர் சேவையின் மிக உயர்ந்த தரத்திற்கு பதவி உயர்வு பெறுவதற்கான போட்டித் பரீட்சை 2019 (2020) 
5. மேலாண்மை சேவை அலுவலர் சேவையின் மிக உயர்ந்த தரத்திற்கு பதவி உயர்வுக்கான வரையறுக்கப்பட்ட போட்டித் பரீட்சை 2019 (2020)

Source: அததெரண.
விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்ட போட்டிப் பரீட்சைகளின் விபரம் விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்ட போட்டிப் பரீட்சைகளின் விபரம் Reviewed by irumbuthirai on June 13, 2021 Rating: 5

அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்துள்ளோரைப் பதிதல்: (வர்த்தமானியும் பதிவு செய்வதற்கான இணையத்தள லிங்கும் இணைப்பு)

June 13, 2021

நெல், அரிசி, சீனி, பால்மா மற்றும் சோளம் போன்றவற்றை களஞ்சியப்படுத்தி வைத்துள்ள இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள் 
மற்றும் விநியோகஸ்தர்கள் 7 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் தம்மைப் பதிவு செய்ய வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியானது. 
தேவைக்கு அதிகமாக களஞ்சியப்படுத்தி வைத்துள்ளவர்களை இனம் காணும் நோக்கிலேயே இது வெளியிடப்பட்டதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்திருந்தார். 
எனவே அந்த வர்த்தமானி அறிவித்தலையும் பதிவு செய்வதற்கான இணையதள முகவரியையும் இங்கு தருகிறோம். 
வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
பதிவு செய்வதற்கான இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்துள்ளோரைப் பதிதல்: (வர்த்தமானியும் பதிவு செய்வதற்கான இணையத்தள லிங்கும் இணைப்பு) அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்துள்ளோரைப் பதிதல்: (வர்த்தமானியும்  பதிவு செய்வதற்கான இணையத்தள லிங்கும் இணைப்பு) Reviewed by irumbuthirai on June 13, 2021 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: பிரதமருடனான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

June 12, 2021

கொவிட்-19 தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது நோய்கள் மற்றும் பிரச்சினைகளை கண்டறிய குழந்தை மருத்துவர்களின் உதவியை பெறுமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (11) பிற்பகல் கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். 
 பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொவிட் நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் 
கவனம் செலுத்தி அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். 
 கொவிட் தொற்று நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் உடனடியாக கட்டம் கட்டமாக பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதன் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டிய கௌரவ பிரதமர், ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை சுகாதார அமைச்சின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டினார். 
 குறித்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட குழந்தை மருத்துவர்களின் சங்கத்தின் பிரதிநிதிகள் பாடசாலைகளை மீள திறக்கும்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு தமது சங்கத்தின் ஆதரவை கல்வி வலய மட்டத்தில் பெற்றுக்கொடுக்க முடியும் என கௌரவ பிரதமர் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது. அதற்கமைய நாடு முழுவதும் உள்ள 99 கல்வி வலயங்களுக்கும் தமது சங்கத்தின் சார்பில் பிரதிநிதிகளை பெயரிட்டு மேற்படி நடவடிக்கையை முறையாக முன்னெடுப்பதாக சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். 
 பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தடுப்பூசி திட்டமொன்று செயற்படுத்தப்படின் அதன்போது தரம் 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் தெரிவித்தார். இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு சுமார் இரண்டு இலட்சத்து எழுபத்து ஒன்பது ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் சுமார் மூன்று இலட்சம் கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி வழங்குவதன் முக்கியத்துவமும் பேராசிரியர் கபில பெரேரா அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது. 
 நாட்டின் எதிர்கால சந்ததியினர் மற்றும் அவர்களை வழிகாட்டும் ஆசிரியர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எப்போதும் நடவடிக்கை மேற்கொள்ளும் என கௌரவ பிரதமர் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார். 
 பாடசாலை ஆரம்பிக்கும்போது மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பான 
முறையில் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவது தொடர்பான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும் என்று தெரிவித்த கௌரவ பிரதமர். பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கையின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார். 
 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள் பெற்றுக்கொடுத்த ஒத்துழைப்பு தொடர்பில் குழந்தை மருத்துவர்களின் சங்கம் நன்றிகளை தெரிவித்தது. 
 குறித்த கலந்துரையாடலில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பாடசாலை நடவடிக்கைகளுக்கான மேலதிக செயலாளர் எல்.எம்.டீ.தர்மசேன, பாடசாலை சுகாதார பிரிவின் பணிப்பாளர் கமனி குணரத்ன, வைத்தியர்களான டி.எல்.பீ.சோமதுங்க, மகேந்திர ஆர்னல்ட், ஷாமன் ரஜீந்திரஜித், சுரந்த பெரேரா, பேராசிரியர் சனத் லமாபதுசூரிய உள்ளிட்ட குழந்தை மருத்துவ வைத்தியர்கள் சங்கத்தின் வைத்தியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 பிரதமர் ஊடக பிரிவு

Source: அரசாங்க தகவல் திணைக்களம். (https://tamil.news.lk/news/politics/item/43494-2021-06-12-14-08-53)

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: பிரதமருடனான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: பிரதமருடனான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: Reviewed by irumbuthirai on June 12, 2021 Rating: 5

கிராம உத்தியோகத்தர் பதவி: விண்ணப்ப திகதி நீடிப்பும் ஏனைய திருத்தங்களும் (வர்த்தமானி இணைப்பு)

June 12, 2021

கிராம உத்தியோகத்தர் (Grama Niladhari) தரம் 111 ற்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டி பரீட்சை தொடர்பான திருத்தங்கள் 11-06-2021 வர்த்தமானி அறிவித்தலில் வெளிவந்துள்ளன. 
விண்ணப்ப முடிவு திகதி 2021-07-19 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
விண்ணப்பதாரியின் தகுதிகள் பூர்த்தி செய்ய வேண்டிய தினம் 2021-06-28 (இத்தினம் மாற்றப்படவில்லை) 
இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதில் பூரண அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இணையதள முகவரி https://www.doenets.lk/  
ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. 
குறித்த வர்த்தமானி அறிவித்தலை கீழே காணலாம் 


கிராம உத்தியோகத்தர் பதவி: விண்ணப்ப திகதி நீடிப்பும் ஏனைய திருத்தங்களும் (வர்த்தமானி இணைப்பு) கிராம உத்தியோகத்தர் பதவி: விண்ணப்ப திகதி நீடிப்பும் ஏனைய திருத்தங்களும் (வர்த்தமானி இணைப்பு) Reviewed by irumbuthirai on June 12, 2021 Rating: 5

கடலில் இறக்கப்பட்டன கைவிடப்பட்ட பஸ்கள்: காரணம் இதுதான்!

June 12, 2021

கைவிடப்பட்ட பஸ்களை கடலில் இறக்கும் திட்டத்தின் மற்றுமொரு கட்டம் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நேற்று (11) இடம்பெற்றது. 
செயற்கையான முறையில் கடல்வாழ் உயிரினங்களின் 
இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் நோக்கிலேயே இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. 
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் பிரகாரம், கடற்படையின் ஒத்துழைப்புடன் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினால் குறித்த செயற்றிட்டம் இடம்பெறுகிறது. 
இதன் முதற்கட்டமாக 30 பஸ்கள் கடலில் இறக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து சயுரு கப்பலின் மூலம் பஸ்கள் ஏற்றிச்செல்லப்பட்டு கடலில் இறக்கப்பட்டன. 
கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் நீரடிப் பாறைகளுக்கு நிகரான சூழலை செயற்கையான முறையில் உருவாக்கும் நோக்கிலேயே கடற்றொழில் அமைச்சினால் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடலில் இறக்கப்பட்டன கைவிடப்பட்ட பஸ்கள்: காரணம் இதுதான்! கடலில் இறக்கப்பட்டன கைவிடப்பட்ட பஸ்கள்: காரணம் இதுதான்! Reviewed by irumbuthirai on June 12, 2021 Rating: 5

11-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

June 12, 2021

11-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 11-06-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


கடந்த வார வர்த்தமானிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க:



Join our WhatsApp Groups:


Join Our Telegram Channel:

Like our FB Page:
11-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 11-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on June 12, 2021 Rating: 5

ஆட்டம்கண்டது இலங்கையின் சுகாதாரத்துறை! விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை!!

June 12, 2021

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்றைய தினம் (11) சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் 
நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுகாதார சேவைகளை ஸ்தம்பிதம் அடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நேற்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஐந்து மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மருத்துவ ஆய்வக நிபுணர்கள் சங்கம், அரச தாதியர் சங்கம், இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுமார் 35 சங்கங்கள் பங்குபற்றின.  
இதன் காரணமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் உட்பட பல சுகாதார சேவைகள் நேற்றைய தினம் பாதிப்படைந்தன. 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என்றும் வைத்தியர்களுக்கு மாத்திரம் 78% விசேட கொடுப்பனவு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஏனைய சுகாதார ஊழியர்களுக்கு எந்தவொரு அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இதன்போது தொழிற்சங்கங்கள் தெரிவித்திருந்தன. 
மேலும் தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிமடுக்கவில்லையாயின் நாடு தழுவிய ரீதியில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிவரும் எனவும் குறித்த தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்தன.
ஆட்டம்கண்டது இலங்கையின் சுகாதாரத்துறை! விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை!! ஆட்டம்கண்டது இலங்கையின் சுகாதாரத்துறை! விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை!! Reviewed by irumbuthirai on June 12, 2021 Rating: 5

Vacancy: System Operator (Commercial Bank of Ceylon Ltd)

June 12, 2021

Vacancy: System Operator (Commercial Bank of Ceylon Ltd) 
Closing date: 10 days from 6/6/2021. 
See the details below.
Source: Sunday Observer 6/6/2021.

Vacancy: System Operator (Commercial Bank of Ceylon Ltd) Vacancy: System Operator (Commercial Bank of Ceylon Ltd) Reviewed by irumbuthirai on June 12, 2021 Rating: 5

Vacancy: Lanka Sathosa Ltd.

June 12, 2021

Vacancy: Lanka Sathosa Ltd. 
Closing date: 21 days from 6/6/2021. 
See the details below.
Source: Sunday Observer 6/6/2021.

Vacancy: Lanka Sathosa Ltd. Vacancy: Lanka Sathosa Ltd. Reviewed by irumbuthirai on June 12, 2021 Rating: 5
Powered by Blogger.