இஸ்ரேல்! முடிவுக்கு வந்த 12 வருட ஆட்சியும் புது முறையில் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கமும்:

June 15, 2021

2009 தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை இஸ்ரேலின் நீண்டகால பிரதமராக பெஞ்சமின் நெதன்யாஹு தொடர்ச்சியாக பதவியில் இருந்து வந்தார். அங்கு கடந்த 02 ஆண்டுகளாக 04 தடவைகள் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றும் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. 
கடந்த மார்ச் 23 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 120 இடங்களில் பெஞ்சமின் நெதன்யாஹு கட்சி 30 இடங்களையே கைப்பற்றியது. அவரால் கூட்டணி அரசைக் கூட அமைக்க முடியவில்லை. 
இதனிடையே, அங்கு 8 எதிர்க்கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்க இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் சுழற்சி முறையில் பிரதமர் பதவி வழங்கப்படுமெனவும் முதலில் யமினா கட்சியின் தலைவரான நப்தாலி-பென்னட் பிரதமர் பதவியை ஏற்பார் எனவும் யேஷ் அதிட் கட்சியின் தலைவர் யெயிர் லாப்பிட் அறிவித்தார். 
இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை நடைபெறாத ஒன்றாய், 
அரபு எம்பிக்களின் ஆதரவு பெற்ற தீவிர வலது மற்றும் இடது கொள்கைகள் கொண்ட பல கட்சிகள் ஒன்றாக சேர்ந்த `மாற்று ஆட்சி`யை உருவாக்கியது விஷேட அம்சமாகும். 
அந்தவகையில் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் நப்தாலி பென்னட் வெற்றி பெற்று பிரதமராக தெரிவானார். அவரது அமைச்சரவையில் 27 பேர். அதில் 9 பெண்கள். 
Naftali Bennett எதிர்வரும் 2023 செப்டெம்பர் வரை இஸ்ரேலின் பிரதமராக செயற்படவுள்ளதோடு அதன்பின்னர் 02 ஆண்டுகளுக்கான பிரதமர் பதவியை எதிர்க்கட்சித் தலைவர் யயர் லபிட்டிடம் (Yair Lapid) ஏற்கவுள்ளார். 
இதேவேளை புதிய பிரதமருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல்! முடிவுக்கு வந்த 12 வருட ஆட்சியும் புது முறையில் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கமும்: இஸ்ரேல்! முடிவுக்கு வந்த 12 வருட ஆட்சியும் புது முறையில் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கமும்: Reviewed by irumbuthirai on June 15, 2021 Rating: 5

மற்றுமொரு தடுப்பூசியை தயாரித்து அசத்திய அமெரிக்கா!

June 15, 2021

அமெரிக்காவில் ஏற்கனவே Pfizer, Johnson & Johnson மற்றும் Moderna ஆகிய 03 கொரோனா தடுப்பூசிகள் அவசரகால பாவனையில் உள்ளது. 
இந்நிலைவில் மற்றுமொரு தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை Novavax என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 இது 100% பாதுகாப்பானது என்றும் 90.4% செயற்திறன் கொண்டது என்றும் உருமாறிய கொரோனாவிற்கு 
எதிராக சிறப்பாக செயற்படுகிறது எனவும் Novavax நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசியை களஞ்சியப்படுத்தி வைப்பதும் எடுத்து செல்வதும் சுலபம் எனவும் நோவாவேக்ஸ் தெரிவித்துள்ளது. 
எவ்வாறாயினும் அமெரிக்காவில் தடுப்பூசிக்கான தேவை பலமடங்கு குறைந்துள்ளது என்றும் அங்கு கொரோனா தடுப்பூசிகள் கோடிக்கணக்கில் காலாவதி திகதியை அண்மித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எனவே, அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு சபையின் அனுமதி பெறப்பட்டவுடன், வளர்ந்து வரும் நாடுகளுக்கு மேலதிக தடுப்பூசிகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசியை இந்தியாவில் Serum நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மற்றுமொரு தடுப்பூசியை தயாரித்து அசத்திய அமெரிக்கா! மற்றுமொரு தடுப்பூசியை தயாரித்து அசத்திய அமெரிக்கா! Reviewed by irumbuthirai on June 15, 2021 Rating: 5

கொரோனா மரணங்களை அறிவிக்கும் புதிய முறை!

June 15, 2021

கொவிட் மரணங்களை அறிவிக்கும் போது நேற்று (14) முதல் புதிய முறை பின்பற்றப்படுகிறது. 
இது தொடர்பில் நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவிக்கையில், 
நாள் ஒன்றில் ஏற்படும் சகல கொவிட் மரணங்களையும் அன்றைய தினமே வௌியிட புதிய பொறிமுறையொன்றை தயாரித்துள்ளோம். இதற்கமைய கடந்த 48 மற்றும் 24 மணித்தியாலங்களினுள் இடம்பெறும் கொவிட் மரணங்களை அன்றைய தினத்திலேயே அறிக்கையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா மரணங்களை அறிவிக்கும் புதிய முறை! கொரோனா மரணங்களை அறிவிக்கும் புதிய முறை! Reviewed by irumbuthirai on June 15, 2021 Rating: 5

Application for the Aptitude Test- 2020/21. (University of Moratuwa)

June 14, 2021

Applications are invited for the aptitude test for following degree programs. 
Architecture degree 
Design degree 
Landscape Architecture degree 
Fashion design & Product development degree 
Information technology & Management 
Closing date: 25-06-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Application for the Aptitude Test- 2020/21. (University of Moratuwa) Application for the Aptitude Test- 2020/21. (University of Moratuwa) Reviewed by irumbuthirai on June 14, 2021 Rating: 5

கண்டுபிடிக்கப்பட்டது 1000 வருடங்கள் பழமையான கோழி முட்டை!

June 13, 2021

1000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை ஒன்று இஸ்ரேலின் யவ்னே என்ற நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
குறித்த பகுதியில் இடம்பெறும் அகழ்வாராய்ச்சியின் போது கழிவுநீர் தொட்டியில் இருந்து இந்த கோழி முட்டை உடையாமல் எடுக்கப்பட்டுள்ளது. 
சுமார் 1,000 வருடங்களைக் கடந்த பின்னரும் கோழி முட்டை உடையாமல் இருப்பது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்டது 1000 வருடங்கள் பழமையான கோழி முட்டை! கண்டுபிடிக்கப்பட்டது 1000 வருடங்கள் பழமையான கோழி முட்டை! Reviewed by irumbuthirai on June 13, 2021 Rating: 5

பிரான்ஸ் ஜனாதிபதியை கன்னத்தில் அறைந்தவருக்கு வழங்கப்பட்ட தண்டனை:

June 13, 2021

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டெய்ன் எல் ஹெர்மிடேஜ் நகரில் உள்ள ஒரு பாடசாலையை ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தபோது அவரை வரவேற்க பாடசாலைக்கு வெளியே காத்திருந்த பொதுமக்கள் கூட்டத்திலிருந்த டேமியன் தாரெல் என்கிற இளைஞன் ஜனாதிபதியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். 
இதையடுத்து குறித்த இளைஞரையும் இதை செல்போனில் படம் பிடித்த நபரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 
இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது அதிபரை கன்னத்தில் அறைந்ததை ஒப்புக்கொண்ட டேமியன் தாரெல், எல்லோரும் 
தன்னை கவனிக்க வேண்டும் என்கிற நோக்கில் அதை செய்ததாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதிகள், அதில் 14 மாதங்களை இரத்து செய்துவிட்டு 4 மாதங்கள் சிறையில் கழிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அந்த வகையில் அவருக்கு தற்போது 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை அந்த இளைஞர் தனது கன்னத்தில் அறைந்த விடயத்தைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை என கூறிய‌ மெக்ரோன், தனிப்பட்ட முறையில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதியை கன்னத்தில் அறைந்தவருக்கு வழங்கப்பட்ட தண்டனை: பிரான்ஸ் ஜனாதிபதியை கன்னத்தில் அறைந்தவருக்கு வழங்கப்பட்ட தண்டனை: Reviewed by irumbuthirai on June 13, 2021 Rating: 5

குமார் சங்கக்காரவிற்கு ICC வழங்கிய கௌரம்:

June 13, 2021

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) குமார் சங்கக்காரவை ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் (ICC Hall of Fame) என்ற பட்டியலில் சேர்த்து கௌரவித்துள்ளது. 
சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கிய வீரர்களை ICC இந்த பட்டியலில் சேர்த்து கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் 1996 - 2015 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கிரிக்கெட் விளையாட்டுக்கு பெரும் பங்களிப்பை செய்த வீரர்களுக்கான ICC Hall of Fame பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்காரவை சேர்த்துள்ளது. இத்தகைய கௌரவத்தை பெறும் 2வது இலங்கை வீரர் இவராவார். 
 இதற்கு முன்னர் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குமார் சங்கக்காரவிற்கு ICC வழங்கிய கௌரம்: குமார் சங்கக்காரவிற்கு ICC வழங்கிய கௌரம்: Reviewed by irumbuthirai on June 13, 2021 Rating: 5

வாழ்வதற்கு உகந்த நகரங்கள்: உலகிலேயே முதலிடம் இதற்குத்தான்!

June 13, 2021

உலகிலேயே வாழ்வதற்கு உகந்த நகரங்களில் (most liveable cities) நியூஸிலாந்தின் ஒக்லாந்து (Auckland) நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 
Economist Intelligence Unit (EIU) இன் வருடாந்த தரவரிசையில் இது வெளியிடப்பட்டுள்ளது. நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவற்றின் நகரங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. 
நியூஸிலாந்தின் கொரோனா முடக்கநிலை நடவடிக்கைகள் அதன் எல்லைகளுக்குள் COVID-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தியுள்ளன. எனவே ஒக்லாந்து போன்ற நகரங்களில் உள்ள மக்களால் தொற்றுக்கு முந்தைய வாழ்க்கைமுறையை அனுபவிக்க முடிந்தது என்று EIU தெரிவித்துள்ளது.
வாழ்வதற்கு உகந்த நகரங்கள்: உலகிலேயே முதலிடம் இதற்குத்தான்! வாழ்வதற்கு உகந்த நகரங்கள்: உலகிலேயே முதலிடம் இதற்குத்தான்! Reviewed by irumbuthirai on June 13, 2021 Rating: 5

கப்பலின் பாதிப்பு 20 வருடங்களுக்கு.... மீன்கள் எவ்வளவு பிளாஸ்டிக்கை சாப்பிட்டுள்ளன என்பதும் தெரியாது - அமைச்சர்

June 13, 2021

X-Press கப்பலின் தீ விபத்தினால் இலங்கையின் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்குமென சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
ஏற்கனவே நாங்கள் நாடு முழுவதும் கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் துகள்களின், பெரிய குவியல்களை சேகரித்திருக்கிறோம். இதில் எத்தனை மில்லியன் துகள்களை 
மீன்கள் சாப்பிட்டுள்ளன என்பது தெரியாது. இச்சேதங்களை டொலர்களிலும் மதிப்பிட முடியாது. ஒவ்வொரு வருடமும் நாட்டிற்கு எவ்வளவு அதிகமான பிளாஸ்டிக் இறக்குமதி செய்யப்படுகிறது என்பதை நாம் இப்போது கற்பனை செய்து கொள்ளலாம். 10% க்கும் குறைவான பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்பட்டு மீதமுள்ளவை சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்படுகின்றன. எனவே இந்த கப்பலால் ஏற்பட்ட சேதம், ஈடு செய்யப்பட வேண்டும் என்பதுடன் பொறுப்பான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கப்பலின் பாதிப்பு 20 வருடங்களுக்கு.... மீன்கள் எவ்வளவு பிளாஸ்டிக்கை சாப்பிட்டுள்ளன என்பதும் தெரியாது - அமைச்சர் கப்பலின் பாதிப்பு 20 வருடங்களுக்கு.... மீன்கள் எவ்வளவு பிளாஸ்டிக்கை சாப்பிட்டுள்ளன என்பதும் தெரியாது - அமைச்சர்  Reviewed by irumbuthirai on June 13, 2021 Rating: 5

முன்பள்ளி ஆசிரியர்களின் கடனுக்கு சலுகைக் காலம்:

June 13, 2021

முன்பள்ளி ஆசிரியர்கள் தாம் பெற்றுள்ள கடனுக்கான மாதாந்த கட்டணத்தை செலுத்துவதற்கு சலுகைக் காலமொன்றை பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் தான் கலந்துரையாடவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் மேம்பாட்டு, முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி, பாடசாலை அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த தெரிவித்தார். 
 கடந்த 9ஆம் திகதி அமைச்சில் மாகாண கல்விப் பணிப்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர இவ்வாறு குறிப்பிட்டார். 
இந்த சந்திப்பின்போது முன்பள்ளி தேசிய கொள்கை சட்ட வரைவு தொடர்பாகவும் எதிர்காலத்தில் முன்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
முன்பள்ளி ஆசிரியர்களின் கடனுக்கு சலுகைக் காலம்: முன்பள்ளி ஆசிரியர்களின் கடனுக்கு சலுகைக் காலம்: Reviewed by irumbuthirai on June 13, 2021 Rating: 5

விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்ட போட்டிப் பரீட்சைகளின் விபரம்

June 13, 2021

அரச பதவி வெற்றிடங்களுக்கு இணைத்துக் கொள்வதற்குரிய போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதி நாள் எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பொது சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.ஏ.பீ.தயா செனரத்ன அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளார். 
அவ்வாறு விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்ட பரீட்சைகள் பின்வருமாறு: 
1. இலங்கை வெளிநாட்டு சேவையின் மூன்றாம் வகுப்புக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டித் பரீட்சை 2020 (2021) 
2. நில பயன்பாட்டு கொள்கை திட்டமிடல் திணைக்களத்தின் நிர்வாக சேவைகள் பிரிவின் தரம் III ஆம் வகுப்பு உதவி பணிப்பாளர் (மாவட்ட நில பயன்பாடு) பதவிக்கு வரையறுக்கப்பட்ட போட்டித் பரீட்சை 2018 (2021) 
3. வர்த்தக அமைச்சின், வர்த்தக திணைக்களத்தின் நிர்வாக சேவை பிரிவின் மூன்றாம் தரத்தில் வர்த்தக உதவி பணிப்பளார் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டித் பரீட்சை. - 2021 
4. தகுதி அடிப்படையில் மேலாண்மை சேவை அலுவலர் சேவையின் மிக உயர்ந்த தரத்திற்கு பதவி உயர்வு பெறுவதற்கான போட்டித் பரீட்சை 2019 (2020) 
5. மேலாண்மை சேவை அலுவலர் சேவையின் மிக உயர்ந்த தரத்திற்கு பதவி உயர்வுக்கான வரையறுக்கப்பட்ட போட்டித் பரீட்சை 2019 (2020)

Source: அததெரண.
விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்ட போட்டிப் பரீட்சைகளின் விபரம் விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்ட போட்டிப் பரீட்சைகளின் விபரம் Reviewed by irumbuthirai on June 13, 2021 Rating: 5

அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்துள்ளோரைப் பதிதல்: (வர்த்தமானியும் பதிவு செய்வதற்கான இணையத்தள லிங்கும் இணைப்பு)

June 13, 2021

நெல், அரிசி, சீனி, பால்மா மற்றும் சோளம் போன்றவற்றை களஞ்சியப்படுத்தி வைத்துள்ள இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள் 
மற்றும் விநியோகஸ்தர்கள் 7 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் தம்மைப் பதிவு செய்ய வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியானது. 
தேவைக்கு அதிகமாக களஞ்சியப்படுத்தி வைத்துள்ளவர்களை இனம் காணும் நோக்கிலேயே இது வெளியிடப்பட்டதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்திருந்தார். 
எனவே அந்த வர்த்தமானி அறிவித்தலையும் பதிவு செய்வதற்கான இணையதள முகவரியையும் இங்கு தருகிறோம். 
வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
பதிவு செய்வதற்கான இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்துள்ளோரைப் பதிதல்: (வர்த்தமானியும் பதிவு செய்வதற்கான இணையத்தள லிங்கும் இணைப்பு) அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்துள்ளோரைப் பதிதல்: (வர்த்தமானியும்  பதிவு செய்வதற்கான இணையத்தள லிங்கும் இணைப்பு) Reviewed by irumbuthirai on June 13, 2021 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: பிரதமருடனான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

June 12, 2021

கொவிட்-19 தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது நோய்கள் மற்றும் பிரச்சினைகளை கண்டறிய குழந்தை மருத்துவர்களின் உதவியை பெறுமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (11) பிற்பகல் கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். 
 பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொவிட் நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் 
கவனம் செலுத்தி அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். 
 கொவிட் தொற்று நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் உடனடியாக கட்டம் கட்டமாக பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதன் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டிய கௌரவ பிரதமர், ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை சுகாதார அமைச்சின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டினார். 
 குறித்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட குழந்தை மருத்துவர்களின் சங்கத்தின் பிரதிநிதிகள் பாடசாலைகளை மீள திறக்கும்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு தமது சங்கத்தின் ஆதரவை கல்வி வலய மட்டத்தில் பெற்றுக்கொடுக்க முடியும் என கௌரவ பிரதமர் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது. அதற்கமைய நாடு முழுவதும் உள்ள 99 கல்வி வலயங்களுக்கும் தமது சங்கத்தின் சார்பில் பிரதிநிதிகளை பெயரிட்டு மேற்படி நடவடிக்கையை முறையாக முன்னெடுப்பதாக சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். 
 பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தடுப்பூசி திட்டமொன்று செயற்படுத்தப்படின் அதன்போது தரம் 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் தெரிவித்தார். இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு சுமார் இரண்டு இலட்சத்து எழுபத்து ஒன்பது ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் சுமார் மூன்று இலட்சம் கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி வழங்குவதன் முக்கியத்துவமும் பேராசிரியர் கபில பெரேரா அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது. 
 நாட்டின் எதிர்கால சந்ததியினர் மற்றும் அவர்களை வழிகாட்டும் ஆசிரியர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எப்போதும் நடவடிக்கை மேற்கொள்ளும் என கௌரவ பிரதமர் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார். 
 பாடசாலை ஆரம்பிக்கும்போது மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பான 
முறையில் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவது தொடர்பான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும் என்று தெரிவித்த கௌரவ பிரதமர். பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கையின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார். 
 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள் பெற்றுக்கொடுத்த ஒத்துழைப்பு தொடர்பில் குழந்தை மருத்துவர்களின் சங்கம் நன்றிகளை தெரிவித்தது. 
 குறித்த கலந்துரையாடலில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பாடசாலை நடவடிக்கைகளுக்கான மேலதிக செயலாளர் எல்.எம்.டீ.தர்மசேன, பாடசாலை சுகாதார பிரிவின் பணிப்பாளர் கமனி குணரத்ன, வைத்தியர்களான டி.எல்.பீ.சோமதுங்க, மகேந்திர ஆர்னல்ட், ஷாமன் ரஜீந்திரஜித், சுரந்த பெரேரா, பேராசிரியர் சனத் லமாபதுசூரிய உள்ளிட்ட குழந்தை மருத்துவ வைத்தியர்கள் சங்கத்தின் வைத்தியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 பிரதமர் ஊடக பிரிவு

Source: அரசாங்க தகவல் திணைக்களம். (https://tamil.news.lk/news/politics/item/43494-2021-06-12-14-08-53)

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: பிரதமருடனான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: பிரதமருடனான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: Reviewed by irumbuthirai on June 12, 2021 Rating: 5
Powered by Blogger.