முகக் கவசம் அணியவில்லை: பிரேசில் ஜனாதிபதிக்கு கிடைத்த தண்டனை:
irumbuthirai
June 15, 2021
பிரேசிலின் 'ஸா பாலோ' பகுதியில் சுமார் 1000 பேர் கலந்துகொண்ட பேரணி ஒன்றில் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோராவும் கலந்துகொண்டார். அதில் அவர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை.
எனவே பொதுவெளியில் முகக்கவசம் அணியாத பிரேசில் ஜனாதிபதிக்கு
100 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம், தனிமைப்படுத்துதல் தேவையில்லாத ஒன்று என்று பிரேசில் ஜனாதிபதி தெரிவிக்கின்றமையால் கடும் விமர்சனங்களை எதிர்கொள்கிறார்.
இதேவேளை பிரேசிலில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பொது வெளியில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்ற ஆலோசனை பரிசீலனையில் உள்ள நிலையில், ஜனாதிபதிக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முகக் கவசம் அணியவில்லை: பிரேசில் ஜனாதிபதிக்கு கிடைத்த தண்டனை:
Reviewed by irumbuthirai
on
June 15, 2021
Rating: