உணவுப் பற்றாக்குறை: முதன்முறையாக ஏற்றுக்கொண்ட வடகொரிய ஜனாதிபதி:
irumbuthirai
June 18, 2021
நாட்டில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக முதன்முறையாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.
"நாட்டு மக்களுக்கான உணவு சூழல் தற்போது சிக்கலாகி வருகிறது” என மூத்த தலைவர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
வெள்ளம், சூறாவளி என்பவற்றால் விவசாய உற்பத்தி இலக்கை அடையவில்லை. உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துவிட்டது.
மேலும் கொரோனா காரணமாக வட கொரியா தனது எல்லைகளை மூடியது. இதன் காரணமாக சீனாவுடனான வர்த்தகம் சரிந்தது.
இதுமாத்திரமன்றி வட கொரியாவின் அணு திட்டங்களால் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகளாலும் அது கஷ்டங்களை அனுபவித்து வருகிறது.
உணவுப் பற்றாக்குறை: முதன்முறையாக ஏற்றுக்கொண்ட வடகொரிய ஜனாதிபதி:
Reviewed by irumbuthirai
on
June 18, 2021
Rating: