கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கத்தின் தற்போதைய நிலை:

June 22, 2021

தென் கொரியாவில் இருந்து தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்ட 'தோர்' என்கின்ற சிங்கம் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில் இந்த சிங்கம் தற்போது பூரண குணமடைந்துள்ளதாக அமைச்சர் சீ.பி ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 
இதேவேளை மிருக காட்சிசாலையில் உள்ள மிருகங்களுக்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கத்தின் தற்போதைய நிலை:  கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கத்தின் தற்போதைய நிலை: Reviewed by irumbuthirai on June 22, 2021 Rating: 5

பட்டதாரிகளுக்கான அறிவித்தல்!

June 22, 2021

வெளிநாட்டு மொழிகளைக் கற்பிப்பதற்காக இலங்கை ஆசிரியர் சேவையின் 3-I(அ) தரத்துக்கு பட்டதாரிகளை தேசிய பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
இந்த விண்ணப்பங்களை 2021 ஜூன் 18 முதல் ஓகஸ்ட் 12, வரை சமர்ப்பிக்கலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
அதன்படி விண்ணப்பதாரிகள் பரீட்சை திணைக்களத்தின் இணையதளத்தில் ஒன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்கலாம். 
விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
பட்டதாரிகளுக்கான அறிவித்தல்! பட்டதாரிகளுக்கான அறிவித்தல்! Reviewed by irumbuthirai on June 22, 2021 Rating: 5

ஆசிரியர்களுக்கு Smartphone களை கொள்வனவு செய்ய விசேட கடன்

June 22, 2021

அரச பாடசாலை ஆசிரியர்களுக்கு டெப் அல்லது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை (Tab / Smart Phone) கொள்வனவு செய்ய கடன் ஒன்றை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதாகவும் இதற்காக சலுகை கடன் ஒன்றை வழங்குவது தொடர்பாக அரச வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார். 
இந்த சூழ்நிலையில் பெரும் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதனைக் கருத்திற்கொண்டே இத்தகைய விடயம் ஒன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை, இக்காலங்களில் ஒன்லைன் (Online) மூலமான கல்வி செயற்பாடுகளில் பயன்பெற முடியாத நிலையிலுள்ள மாணவர்களுக்காக விசேட செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கு Smartphone களை கொள்வனவு செய்ய விசேட கடன் ஆசிரியர்களுக்கு Smartphone களை கொள்வனவு செய்ய விசேட கடன் Reviewed by irumbuthirai on June 22, 2021 Rating: 5

ஈரானில் தெரிவான புதிய ஜனாதிபதி: அரசியல் அனுபவம் இல்லை ஆனால் மக்கள் செல்வாக்கு: எப்படி?

June 21, 2021

ஈரானின் தற்போதைய ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் உச்சபட்சமான 4 ஆண்டுகளுடன் கூடிய தொடர்ச்சியான இரு பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட்டில் முடிவடைவதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த 18ம் திகதி நடந்தது. 
இம்முறை வாக்குப்பதிவு குறைவாகவே காணப்பட்டது. அதாவது 2017 ஜனாதிபதித் தேர்தலில் 70% க்கும் அதிகமான வாக்குப்பதிவு இருந்த நிலையில் இம்முறை 60 வீதத்திற்கும் குறைவாகவே காணப்பட்டுள்ளது. 
இம்முறை தேர்தலில் போட்டியிட 40 பெண்கள் உள்ளிட்ட 592 பேர் பதிவு செய்திருந்த நிலையில், ஈரான் பாதுகாவலர் சபையினால் அப்பதவிக்கு போட்டியிட 7 ஆண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 
இதில் அந்நாட்டு உச்ச நீதிமன்றின் தலைமை நீதிபதி 
இப்ராஹிம் ரைசி வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 60 வயதான இவர் அரசியல் சார்ந்த அனுபவம் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 ஈரான் நாட்டில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர், 'ஏழைகளின் நாயகன்' என, 60 வயதான இப்ராஹிம் ரைசி புகழப்படுகிறார். 
ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களது பெயர் மற்றும் விவரங்களை மக்கள் முன்னிலையில் கூறி, அவர்கள் எந்த வித ஊழலில் ஈடுபட்டார்கள் என்று வெளிப்படையாக மேடைகளில் பேசி மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் இந்த இப்ராஹிம் ரைசி.
ஈரானில் தெரிவான புதிய ஜனாதிபதி: அரசியல் அனுபவம் இல்லை ஆனால் மக்கள் செல்வாக்கு: எப்படி? ஈரானில் தெரிவான புதிய ஜனாதிபதி: அரசியல் அனுபவம் இல்லை ஆனால் மக்கள் செல்வாக்கு: எப்படி? Reviewed by irumbuthirai on June 21, 2021 Rating: 5

கண்டுபிடிக்கப்பட்டது! கொரோனா இறப்பை குறைக்கும் புதிய சிகிச்சை முறை:

June 21, 2021

கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிக்கப்பட்டு சுமார் ஓராண்டுக்கு பிறகு மற்றுமொரு வகையான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஆன்டிபாடிக்கள் யாருடைய உடலில் தன்னிச்சையாக உருவாகவில்லையோ, அவர்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சை கொடுக்க முடியும். ஆனால் இந்த சிகிச்சை முறை தடுப்பூசியை விட செலவு அதிகமானது. 
ரீஜெனரான் என்ற மருந்து நிறுவனம் மோனோகுளோனல் ஆன்டிபாடி என்று அழைக்கப்படும் சிகிச்சை முறையை இதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிகிச்சை முறை காரணமாக 
கொரோனா வைரஸ்களால் மனித உடலில் இருக்கும் மற்ற செல்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது. இந்த சிகிச்சை முறையால் 100 நோயாளிகளில் 06 பேரின் உயிரைக் காப்பாற்றலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. பாதிக்கப்படுபவர்கள் இறக்கும் அபாயத்தை மூன்றில் ஒரு பங்கு வரை குறைக்கிறது என்றும் கூறப்படுகிறது. 
மேலும் இதுதொடர்பான பரிசோதனையின் இணை முதன்மை ஆய்வாளரான சர் மார்டின் லாண்ட்ரே கூறுகையில், 
10,000 பிரிட்டன் நோயாளிகளிடம் நடத்தப்பட்ட இந்த சிகிச்சை முறை பரிசோதனையில், மரண அபாயத்தை கணிசமாக குறைத்திருக்கிறது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் இருக்கும் காலத்தில் சராசரியாக 04 நாட்களைக் குறைத்திருக்கிறது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிக்க வென்டிலேட்டர் தேவைப்படுவதைக் குறைத்திருக்கிறது என்று கூறினார்.
கண்டுபிடிக்கப்பட்டது! கொரோனா இறப்பை குறைக்கும் புதிய சிகிச்சை முறை: கண்டுபிடிக்கப்பட்டது! கொரோனா இறப்பை குறைக்கும் புதிய சிகிச்சை முறை: Reviewed by irumbuthirai on June 21, 2021 Rating: 5

Courses: University of Moratuwa (Department of Civil Engineering)

June 20, 2021

Courses: University of Moratuwa (Department of Civil Engineering) 
Closing date: 22-07-2021. 
See the details below.
Source: Sunday Observer 20/6/2021.

Courses: University of Moratuwa (Department of Civil Engineering) Courses: University of Moratuwa (Department of Civil Engineering) Reviewed by irumbuthirai on June 20, 2021 Rating: 5

Vacancies: Sri Lanka Export Development Board

June 20, 2021

Vacancies: Sri Lanka Export Development Board
Closing date: 28-06-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies: Sri Lanka Export Development Board Vacancies: Sri Lanka Export Development Board Reviewed by irumbuthirai on June 20, 2021 Rating: 5

பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க தவறியோர்க்கான அறிவித்தல்!

June 20, 2021

பல்கலைக்கழக அனுமதிக்காக இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு மேலும் கால அவகாசத்தை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 
 நாட்டில் அமுல்படுத்தப்பட்ட பயணத் தடையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் 
21, 22, 23 ஆகிய தினங்களிலும் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க தவறியோர்க்கான அறிவித்தல்! பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க தவறியோர்க்கான அறிவித்தல்! Reviewed by irumbuthirai on June 20, 2021 Rating: 5

நான் ஏன் பாராளுமன்றம் வருகிறேன்? ரணில் விக்கிரமசிங்கவின் விளக்கம்!

June 20, 2021

தான் ஏன் பாராளுமன்றம் செல்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சமூக வலைத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். 
எனக்கு பாராளுமன்றம் செல்லும் எதிர்பார்ப்பு இருக்கவில்லை. ஆனால் பாராளுமன்றம் செல்லுமாறு பலரும் வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு காரணம் இந்த நாட்டில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதமான முறையான திட்டமும் அரசாங்கத்திடம்  இல்லை. எதிர்பார்த்ததைவிட மரணங்கள் அதிகரிக்கின்றன. இதுமாதிரியான சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தில் இதற்காக 
குரல் எழுப்பும் தேவை இருப்பதாக நான் உணர்ந்தேன். 
மற்றுமொரு காரணம் மிக வேகமாக அரசாங்கத்தின் செல்வாக்கு மக்களிடையே குறைந்து வருகிறது. இதற்குரிய மாற்றீடுகளோ பொருத்தமான திட்டங்களோ எதிர்க்கட்சியிடம் இல்லை. எனவே நான் பாராளுமன்றம் சென்றால் அங்கிருந்து எனது வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கலாம் என்று கூறினார்.
நான் ஏன் பாராளுமன்றம் வருகிறேன்? ரணில் விக்கிரமசிங்கவின் விளக்கம்! நான் ஏன் பாராளுமன்றம் வருகிறேன்? ரணில் விக்கிரமசிங்கவின் விளக்கம்! Reviewed by irumbuthirai on June 20, 2021 Rating: 5

பொலிஸாரினால் ஏற்படும் அநீதி தொடர்பில் அறிவிப்பபதற்கான இலக்கம்:

June 20, 2021

ஏதேனும் அநீதி செயற்பாடுகள் பொலிஸாரினால் இடம்பெறுமாயின் அதுதொடர்பாக பிரதேச உயர் பொலிஸ் அதிகாரிக்கு முறையிடலாம் அல்லது விசேட நிலைமைகளின் கீழ் இவ்வாறான அநீதி செயற்பாடுகள் இடம்பெற்றால் 
பொலிஸ் கட்டளைப் பிரிவின் 0112 85 48 80 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்கலாம் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
பொலிஸாரினால் ஏற்படும் அநீதி தொடர்பில் அறிவிப்பபதற்கான இலக்கம்: பொலிஸாரினால் ஏற்படும் அநீதி தொடர்பில் அறிவிப்பபதற்கான இலக்கம்: Reviewed by irumbuthirai on June 20, 2021 Rating: 5

செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு கோரிக்கை!

June 20, 2021

எவரேனும் ஒருவருக்கு சுகயீன நிலமை தென்பட்டால் அவர்களது செல்லப் பிராணிகளிடம் இருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும் என பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி டிலான் ஏ.சதரசிங்க தெரிவித்துள்ளார். 
தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கம் ஒன்றுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு கோரிக்கை! செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு கோரிக்கை! Reviewed by irumbuthirai on June 20, 2021 Rating: 5

உலகின் மூன்றாவது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிப்பு

June 20, 2021

1,098 காரட் அளவுடன் 73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம், 27 மில்லி மீட்டர் பருமன் கொண்டுள்ள உலகின் மூன்றாவது பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அது 3,106 காரட் அளவுடையதாகும். 
 2017 இல் இரண்டாவது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அது 1,109 காரட் அளவுடையது. 
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல கோடி ரூபா மதிப்புள்ள இந்த 3வது மிகப்பெரிய வைரக்கல்லை கொரோனா வைரஸ் காலம் முடிவடைந்த பின்னர் ஏலம் விட போட்ஸ்வானா அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் மூன்றாவது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிப்பு உலகின் மூன்றாவது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிப்பு Reviewed by irumbuthirai on June 20, 2021 Rating: 5

பொஸ்பேட் நிறுவனம் குறித்து விமலின் பேஸ்புக் பதிவு!

June 19, 2021

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவின் கீழ் இருந்த லங்கா பொஸ்பேட் என்ற நிறுவனத்தை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவின் கீழ் கொண்டு வரும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்றைய தினம் (19) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் வௌியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இது தொடர்பில் தனது பேஸ்புக் கணக்கில் அமைச்சர் பின்வருமாறு தெரிவித்துள்ளார். 
பல வருடங்களாக நட்டத்தில் இயங்கிய லங்கா பொஸ்பேட் நிறுவனத்தை தான் இலாபம் பெறும் நிலைக்கு மாற்றிய பின்னர் அது வேறு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொஸ்பேட் நிறுவனம் குறித்து விமலின் பேஸ்புக் பதிவு! பொஸ்பேட் நிறுவனம் குறித்து விமலின் பேஸ்புக் பதிவு! Reviewed by irumbuthirai on June 19, 2021 Rating: 5
Powered by Blogger.