தற்காலிக இடமாற்றம் (Attachment Transfer) பெற்ற ஆசிரியர்களுக்கான அறிவித்தல் (தேசிய பாடசாலை):
irumbuthirai
June 26, 2021
தற்காலிக இடமாற்றம் பெற்றுள்ள தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் போது தமது தற்காலிக இடமாற்ற காலம் முடிவடைந்திருந்தால் அவர்கள்
தமது நிரந்தர கடமையாற்றும் பாடசாலைக்கே சமூகமளித்தல் வேண்டும்.
இதேவேளை தற்காலிக இடமாற்ற காலத்தை மேலும் நீடிக்க விரும்பும் ஆசிரியர்கள் பாடசாலை மீள ஆரம்பித்ததும் தமது நிரந்தர கடமையாற்றும் பாடசாலை அதிபர் மூலமாக உரிய விண்ணப்பத்தை 'கல்விப் பணிப்பாளர் (ஆசிரியர் இடமாற்றம்) / Director of Education (Teacher Transfer) ற்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக இடமாற்றம் (Attachment Transfer) பெற்ற ஆசிரியர்களுக்கான அறிவித்தல் (தேசிய பாடசாலை):
Reviewed by irumbuthirai
on
June 26, 2021
Rating: