W & OP Re-Registration (Easy Guidelines in Three Languages / மும்மொழிகளிலும் இலகுவான வழிகாட்டல்)
irumbuthirai
June 28, 2021
விதவைகள், தபுதாரர் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத்தை மீள் பதிவு செய்தல் (W&OP Re-Registration) தொடர்பான முழுமையான வழிகாட்டல்களை கேள்வி-பதில் முறையில் இலகுவாக இங்கே தருகிறோம்.
(1) W & OP மீள்பதிவை யார் செய்ய வேண்டும்?
12-03-2015 ற்கு முன் நியமனம் பெற்றவர்கள்.
(2) இந்த திகதிக்கு பின் நியமனம் பெற்றவர்களின் நிலை?
இவர்கள் புதிய படிவத்தின் ஊடாக Online முறையிலேயே பதிவு செய்யப்படுகின்றனர்.
(3) இறுதியாக வெளியான சுற்றறிக்கையின் படி மீள் பதவிக்கான கடைசி திகதி?
31-07-2021.
(4) நீங்கள் Online பதிவு செய்து விட்டீர்களா என எவ்வாறு தெரிந்து கொள்வது?
இதைத் தெரிந்து கொள்ள http://203.115.24.110/wopcard/?q=node/21 என்ற லிங்கிற்கு சென்று உங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பதிவிட வேண்டும். முறையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால் உங்களது W & OP அட்டை திரையில் தெரியும். அவ்வாறு தெரிந்தால் மீள்பதிவு அவசியமில்லை.
குறிப்பு: அடையாள அட்டை எண்ணுடன் இறுதியாக ஆங்கில எழுத்து இருந்தால் அதே கெப்பிட்டல் எழுத்தாகவே (Capital Letter) வழங்க வேண்டும்.
(5) அவ்வாறு இதுவரை Re-registration செய்யாதவர்கள் அதை மேற்கொள்ள என்ன அவசியம்?
உங்களது W & OP இலக்கம் அவசியம். அது (82/....,F/....,M/....) என்ற வடிவத்தில் காணப்படும்.
(6) அந்த இலக்கம் தங்களுக்கு தெரியாவிட்டால் யாரிடம் கேட்க வேண்டும்?
உங்களுக்கு பொறுப்பான personal File Clerk இடம்.
(7) சரி இலக்கம் தெரிந்துவிட்டது. எங்கே மீள்பதிவு செய்ய வேண்டும்?
https://sathkara.pensions.gov.lk/wop_rereg/என்ற லிங்கிற்கு சென்று வலது பக்க மேல் மூலையில் உள்ள RE-REGISTER என்பதை அழுத்துவதன் மூலம் மீள் பதிவிற்கான விண்ணப்பம் தோன்றும். அதை நிரப்ப வேண்டும்.
(8) தகவல்கள் எந்த மொழியில் நிரப்பப்பட வேண்டும்?
ஆங்கிலத்தில்
(9) சிலரின் கையடக்க தொலைபேசிக்கு ஓய்வூதிய திணைக்களத்தில் இருந்து ஒரு SMS அனுப்பப்படுகிறது. அது என்ன?
பின்வருமாறு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது....
(10) ஏன் இவ்வாறு குறுஞ்செய்தி வருகிறது?
Online இல் மீள்பதிவிற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தும் இதுவரை உங்களுக்கு பொறுப்பான Personal File Clerk அதை உறுதிப்படுத்தாததன் காரணமாக இந்த SMS வருகிறது.
(11) இந்த SMS கிடைத்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?
தமக்கு பொறுப்பான Personal File Clerk இடம் இது தொடர்பில் தெரியப்படுத்தி உங்களது விபரங்களை உறுதிப்படுத்த சொல்லவேண்டும்.
(12) அவர் உறுதிப்படுத்தியதை எவ்வாறு அறிவது?
ஆரம்பத்தில் செய்ததை போன்று http://203.115.24.110/wopcard/?q=node/21 என்ற லிங்கிற்கு சென்று அடையாள அட்டை எண்ணை வழங்கி பரீட்சிக்க வேண்டும். உங்களது விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் உங்களது W & OP அட்டை இணையத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
(13) மேற்படி SMS வரும்போது ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும்?
எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள அவசியமில்லை.
(14) இது தொடர்பிலான மேலதிக விவரங்களை பெறுவதற்கான தொலைபேசி இலக்கங்கள் யாவை?
011-5920403 / 011-2320049.
Join our WhatsApp Groups:
Join our Telegram Channel:
Like our FB Page:
W & OP Re-Registration (Easy Guidelines in Three Languages / மும்மொழிகளிலும் இலகுவான வழிகாட்டல்)
Reviewed by irumbuthirai
on
June 28, 2021
Rating: