Online கல்வி முறைமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

June 29, 2021

Online கல்வி முறைமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்றைய தினம் (28) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தினாலேயே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 
அதாவது சகல மாணவர்களுக்கும் Online கல்வி 
சம அளவில் கிடைக்காமையால் மாணவர்களின் உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்தே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 மேலும் மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கான சந்தர்ப்பம் 02 வருடங்களாக இல்லாமல் போனமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் தனது முறைப்பாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளது. 
இந்த முறைப்பாடு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ உள்ளிட்ட சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுராதபுரம் அலுவலகத்தில் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Online கல்வி முறைமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு! Online கல்வி முறைமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு! Reviewed by irumbuthirai on June 29, 2021 Rating: 5

Vacancy: USAID (United States Agency for International Development)

June 29, 2021

The United States Agency for International Development (USAID) in Colombo seeks suitable candidates for the position as Project Management Specialist. 
The job holder serves as a Project Management Specialist for the office of Economic Growth (OEG) in USAID / Sri Lanka & Maldives. 
Annual salary: Rs. 4,017,389 - 6,649,174
Closing date: 20-07-2021 (05:30 PM) 
See the details below.

Source: Sunday Observer.


Join our WhatsApp group.

Join our Telegram channel.

Like our FB page:
Vacancy: USAID (United States Agency for International Development) Vacancy: USAID (United States Agency for International Development) Reviewed by irumbuthirai on June 29, 2021 Rating: 5

வீட்டிலிருக்கும் கொரோனா தொற்றாளர்கள் பற்றி அறிய புதிய தொலைபேசி இலக்கம்

June 29, 2021

வீடுகளில் கொரோனா நோயாளர்களை பராமரிக்கும் விசேட செய்திட்டம் நேற்று (28) சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
இதற்கமைய, 1390 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இதன் மூலம் வீடுகளில் வைத்து பராமரிப்பதற்கான கொரோனா நோயாளிகளை தெரிவுசெய்வதற்காக, விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட வைத்தியர் குழுவினால் தினமும் தொலைபேசியூடாக ஆராயப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 
இந்த புதிய திட்டத்தின் மூலம் நோய் அறிகுறி உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட நோயாளர்கள் மற்றும் ஆபத்து ஏற்படக்கூடிய சாத்தியமுள்ள நோயாளர்களுக்கு வைத்தியசாலைகளில் அனுமதிக்கும்போது முன்னுரிமையளிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வீட்டிலிருக்கும் கொரோனா தொற்றாளர்கள் பற்றி அறிய புதிய தொலைபேசி இலக்கம் வீட்டிலிருக்கும் கொரோனா தொற்றாளர்கள் பற்றி அறிய புதிய தொலைபேசி இலக்கம் Reviewed by irumbuthirai on June 29, 2021 Rating: 5

மன்னிப்பிற்கான பரிந்துரை செய்யமாட்டோம்: சிறைச்சாலை திணைக்களத்தின் அதிரடி:

June 29, 2021

சிறைச்சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்து சிறைச்சாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் எந்த ஒரு கைதிக்கும் மன்னிப்பு வழங்குவதற்கு பரிந்துரை செய்யாதிருக்க சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். 
இவ்வாறான முறையில் செயற்பட்டு சிறைச்சாலை சொத்துக்களை சேதப்படுத்தும் கைதிகள் குறித்து சிறைச்சாலை திணைக்களம் கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மன்னிப்பிற்கான பரிந்துரை செய்யமாட்டோம்: சிறைச்சாலை திணைக்களத்தின் அதிரடி: மன்னிப்பிற்கான பரிந்துரை செய்யமாட்டோம்: சிறைச்சாலை திணைக்களத்தின் அதிரடி: Reviewed by irumbuthirai on June 29, 2021 Rating: 5

மாணவர்களுக்கு ஜப்பான் செல்லும் வாய்ப்பை வழங்கும் போட்டி (விண்ணப்பம் மற்றும் முழுமையான விபரங்கள் இணைப்பு)

June 28, 2021

ஜப்பானின் Kao Corporation சர்வதேச ரீதியாக மாணவர்களிடையே வருடாவருடம் நடத்தும் Kao International Painting Contest for Children என்ற போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
இந்த போட்டி 2010 ஆம் ஆண்டு முதல் வருடாவருடம் நடத்தப்படுகிறது. 

வயது எல்லை: 06-15 (31-08-2021ற்கு) 

கருப்பொருள்: Let's Make Our Environment Sustainable Together (எமது சூழலை ஒன்றாக நிலைநிறுத்துவோம்)

அளவு: 392MM x 542 MM. 

வர்ண வகை: எந்த ஒரு வகையான வர்ணத்தையும் பயன்படுத்தலாம். (Pencil colour, water colour, oil paint, etc..) 

ஒருவருக்கு ஒரு சித்திரத்தை மாத்திரமே அனுப்பலாம். 
பரிசளிப்பு: ஜப்பானின் டோக்கியோ நகரில் 

வெற்றிபெறும் மாணவருடன் செல்வதற்கு இன்னொருவருக்கும் வாய்ப்பு. (போய் வருவதற்கான செலவுகள் முற்றிலும் இலவசம்) 

ஆக்கங்களை தனியாகவோ குழுவாகவோ சமர்ப்பிக்கலாம். 

முடிவு திகதி: 06 - 09- 2021. 

அனுப்ப வேண்டிய முகவரி: 
Kao International Environment Painting Contest for Children.  
8-3-29 Tajima, 
Sakura - Ku, 
Saltama 338-0837. 
JAPAN. 

இது தொடர்பான முழுமையான விபரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் என்பவற்றை பெற்றுக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

Join our WhatsApp Groups.

Join our Telegram Channel:

Like our FB Page:



மாணவர்களுக்கு ஜப்பான் செல்லும் வாய்ப்பை வழங்கும் போட்டி (விண்ணப்பம் மற்றும் முழுமையான விபரங்கள் இணைப்பு) மாணவர்களுக்கு ஜப்பான் செல்லும் வாய்ப்பை வழங்கும் போட்டி (விண்ணப்பம் மற்றும் முழுமையான விபரங்கள் இணைப்பு) Reviewed by irumbuthirai on June 28, 2021 Rating: 5

W & OP Re-Registration (Easy Guidelines in Three Languages / மும்மொழிகளிலும் இலகுவான வழிகாட்டல்)

June 28, 2021

விதவைகள், தபுதாரர் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத்தை மீள் பதிவு செய்தல் (W&OP Re-Registration) தொடர்பான முழுமையான வழிகாட்டல்களை கேள்வி-பதில் முறையில் இலகுவாக இங்கே தருகிறோம். 

(1) W & OP மீள்பதிவை யார் செய்ய வேண்டும்? 
12-03-2015 ற்கு முன் நியமனம் பெற்றவர்கள். 

(2) இந்த திகதிக்கு பின் நியமனம் பெற்றவர்களின் நிலை? 
இவர்கள் புதிய படிவத்தின் ஊடாக Online முறையிலேயே பதிவு செய்யப்படுகின்றனர். 

(3) இறுதியாக வெளியான சுற்றறிக்கையின் படி மீள் பதவிக்கான கடைசி திகதி? 
31-07-2021. 

(4) நீங்கள் Online பதிவு செய்து விட்டீர்களா என எவ்வாறு தெரிந்து கொள்வது? 
இதைத் தெரிந்து கொள்ள http://203.115.24.110/wopcard/?q=node/21 என்ற லிங்கிற்கு சென்று உங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பதிவிட வேண்டும். முறையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால் உங்களது W & OP அட்டை திரையில் தெரியும். அவ்வாறு தெரிந்தால் மீள்பதிவு அவசியமில்லை. 
குறிப்பு: அடையாள அட்டை எண்ணுடன் இறுதியாக ஆங்கில எழுத்து இருந்தால் அதே கெப்பிட்டல் எழுத்தாகவே (Capital Letter) வழங்க வேண்டும். 

(5) அவ்வாறு இதுவரை Re-registration செய்யாதவர்கள் அதை மேற்கொள்ள என்ன அவசியம்? 
உங்களது W & OP இலக்கம் அவசியம். அது (82/....,F/....,M/....) என்ற வடிவத்தில் காணப்படும். 

(6) அந்த இலக்கம் தங்களுக்கு தெரியாவிட்டால் யாரிடம் கேட்க வேண்டும்? 
உங்களுக்கு பொறுப்பான personal File Clerk இடம். 

(7) சரி இலக்கம் தெரிந்துவிட்டது. எங்கே மீள்பதிவு செய்ய வேண்டும்? 
https://sathkara.pensions.gov.lk/wop_rereg/என்ற லிங்கிற்கு சென்று வலது பக்க மேல் மூலையில் உள்ள RE-REGISTER என்பதை அழுத்துவதன் மூலம் மீள் பதிவிற்கான விண்ணப்பம் தோன்றும். அதை நிரப்ப வேண்டும். 

(8) தகவல்கள் எந்த மொழியில் நிரப்பப்பட வேண்டும்? 
ஆங்கிலத்தில் 

(9) சிலரின் கையடக்க தொலைபேசிக்கு ஓய்வூதிய திணைக்களத்தில் இருந்து ஒரு SMS அனுப்பப்படுகிறது. அது என்ன? 
பின்வருமாறு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது....

(10) ஏன் இவ்வாறு குறுஞ்செய்தி வருகிறது? 
Online இல் மீள்பதிவிற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தும் இதுவரை உங்களுக்கு பொறுப்பான Personal File Clerk அதை உறுதிப்படுத்தாததன் காரணமாக இந்த SMS வருகிறது. 

(11) இந்த SMS கிடைத்தவர்கள் என்ன செய்ய வேண்டும்? 
தமக்கு பொறுப்பான Personal File Clerk இடம் இது தொடர்பில் தெரியப்படுத்தி உங்களது விபரங்களை உறுதிப்படுத்த சொல்லவேண்டும். 

(12) அவர் உறுதிப்படுத்தியதை எவ்வாறு அறிவது? 
ஆரம்பத்தில் செய்ததை போன்று http://203.115.24.110/wopcard/?q=node/21 என்ற லிங்கிற்கு சென்று அடையாள அட்டை எண்ணை வழங்கி பரீட்சிக்க வேண்டும். உங்களது விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் உங்களது W & OP அட்டை இணையத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். 

(13) மேற்படி SMS வரும்போது ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும்?
எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள அவசியமில்லை. 

(14) இது தொடர்பிலான மேலதிக விவரங்களை பெறுவதற்கான தொலைபேசி இலக்கங்கள் யாவை? 
011-5920403 / 011-2320049.


Join our WhatsApp Groups:

Join our Telegram Channel:

Like our FB Page:













W & OP Re-Registration (Easy Guidelines in Three Languages / மும்மொழிகளிலும் இலகுவான வழிகாட்டல்) W & OP Re-Registration (Easy Guidelines in Three Languages / மும்மொழிகளிலும் இலகுவான வழிகாட்டல்) Reviewed by irumbuthirai on June 28, 2021 Rating: 5

25-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

June 27, 2021

25-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 25-06-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


கடந்த வார வர்த்தமானிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க:



Join our WhatsApp Groups:

Join Our Telegram Channel:

Like our FB Page:


25-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 25-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on June 27, 2021 Rating: 5

கண்டுபிடிக்கப்பட்டது 'டெல்டா பிளஸ்' வைரஸ்: முதலாவது மரணமும் பதிவு:

June 26, 2021

இந்தியாவில் உருமாற்றம் அடைந்து உருவான கொரோனா வைரஸ் திரிபே ‘டெல்டா' எனப்படுகிறது. 2வது அலையில் பல இலட்சம் பேரை இது கொன்றுள்ளது. இந்த வைரஸ் தற்போது மேலும் உருமாற்றம் அடைந்து, அதை விட வீரியமிக்கதாக உருவாகி தாக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு, ‘டெல்டா பிளஸ்’ என பெயரிடப்பட்டு உள்ளது. 
 இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் கொரோனாவால் மரணமான பெண்ணின் மீது நடத்தப்பட்ட மரபணு பரிசோதனையில் அவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கி இருப்பது உறுதியாகி இருக்கிறது. எனவே டெல்டா ப்ளஸ் காரணமாக இடம்பெற்ற முதலாவது மரணமாக இது பார்க்கப்படுகிறது.
கண்டுபிடிக்கப்பட்டது 'டெல்டா பிளஸ்' வைரஸ்: முதலாவது மரணமும் பதிவு: கண்டுபிடிக்கப்பட்டது 'டெல்டா பிளஸ்' வைரஸ்: முதலாவது மரணமும் பதிவு: Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

பசிலுக்காக ஆசனங்களை விட்டுக்கொடுக்க தயாராகும் 04 பேர்!

June 26, 2021
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷவிற்காக தமது ஆசனங்களை விட்டுக்கொடுக்க நான்கு பேர் தயாராக உள்ளதாக கட்சியின் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. 
அந்த வகையில் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், ஜயந்த கெட்டகொட, 
மர்ஜான் பளீல், பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோரே இவ்வாறு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 
எனவே எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற அமர்வு வாரத்தின் போது பசில் ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பசிலுக்காக ஆசனங்களை விட்டுக்கொடுக்க தயாராகும் 04 பேர்! பசிலுக்காக ஆசனங்களை விட்டுக்கொடுக்க தயாராகும் 04 பேர்!  Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

இலங்கையில் வெளவால்களுக்கு கொரோனா! நீடித்த மர்மங்களுக்கு விடை கிடைக்குமா?

June 26, 2021

இலங்கையிலுள்ள வெளவால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவக் கூடிய வைரஸ் தொடர்பில் இலங்கையில் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜேர்மனியின் ரொபர்ட் கோக் நிறுவனம் இணைந்து இந்த ஆய்வை நடத்தின. இதற்காக கொஸ்லந்தை பிரதேசத்திலமைந்துள்ள வெளவால் குகையை அடிப்படையாக கொண்டு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வுக்குழு உறுப்பினரான கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜேர்மனியின் ரொபர்ட் கோக் நிறுவனத்தின் பேராசிரியரான தேஜானி பெரேரா தெரிவித்துள்ளார். 
இந்த ஆராய்ச்சியின்போது மனிதர்களுக்கு பரவும் எல்பா மற்றும் பீட்டா ஆகிய கொவிட்19 மாறுபாடுகள் கொண்ட 
இரண்டு வகை விசேட வெளவால்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட எல்பா மற்றும் பீட்டா கொவிட்19 வைரஸ் மாறுபாடு தற்போது பல நாடுகளில் பரவும் பிரிட்டன் எல்பா அல்லது தென்னாப்பிரிக்காவின் பீட்டாவின் துணை வகைகள் அல்ல. ஆனால் இவை கொவிட்19 வைரஸின் நான்கு முதன்மை மாறுபாடுகளில் இரண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த மாறுபாடுகள் மனிதர்களின் உடலில் பரவி கொவிட் 19 வைரஸ் வரை கொண்டு செல்லுமா? என்பது இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும் மக்கள் வௌவால்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்த வேண்டாமென பேராசிரியர் தேஜானி பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் வெளவால்களுக்கு கொரோனா! நீடித்த மர்மங்களுக்கு விடை கிடைக்குமா? இலங்கையில் வெளவால்களுக்கு கொரோனா! நீடித்த மர்மங்களுக்கு விடை கிடைக்குமா? Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

அடையாள அட்டையை மாத்திரம் கொண்டு வாருங்கள்: 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான அறிவித்தல்:

June 26, 2021

60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியினை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக அனைத்து பிரதான வைத்தியசாலைகளிலும் தடுப்பூசி மத்திய நிலையம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். மேலும் இது தினசரி மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டம். இதற்காக அடையாள அட்டை மட்டுமே தேவைப்படுகிறது. நாம் விண்ணப்ப படிவம் ஒன்றை வௌியிட்டுள்ளோம். குறித்த விண்ணப்ப படிவத்தை வீட்டிலேயே நிரப்பி வந்தால் தடுப்பூசியை மிக விரைவாக பெற்றுக்கொடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அடையாள அட்டையை மாத்திரம் கொண்டு வாருங்கள்: 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான அறிவித்தல்: அடையாள அட்டையை மாத்திரம் கொண்டு வாருங்கள்: 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான அறிவித்தல்:  Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

வீட்டில் மரணிப்போர் தொடர்பில் வெளியானது சுற்றுநிருபம்: இலகுவாக்கப்பட்டது அடக்கம் செய்யும் நடைமுறை: (சுற்றறிக்கை இணைப்பு)

June 26, 2021

வீட்டில் மரணிப்போர் தொடர்பில் புதிய நடைமுறைகள் அடங்கிய சுற்றுநிறுபம் ஒன்றை நேற்றைய தினம் (25/6/2021) சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. 
இதன் பிரகாரம், 
வீட்டில் ஏற்படும் திடீர் மரணங்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல் அந்த மரணங்களை முன்னர் போன்று நல்லடக்கம் செய்யும் அனுமதியை, அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் மற்றும் மரணப் பரிசோதகர் ஆகிய இருவரும் இணைந்து மரணச் சான்றிதழ் வழங்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 
குறித்த சுற்று நிருபத்தை கீழே காணலாம்.


வீட்டில் மரணிப்போர் தொடர்பில் வெளியானது சுற்றுநிருபம்: இலகுவாக்கப்பட்டது அடக்கம் செய்யும் நடைமுறை: (சுற்றறிக்கை இணைப்பு) வீட்டில் மரணிப்போர் தொடர்பில் வெளியானது சுற்றுநிருபம்: இலகுவாக்கப்பட்டது அடக்கம் செய்யும் நடைமுறை: (சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

நாட்டில் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெளியானது!

June 26, 2021

தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டு சபை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நாட்டில் சுமார் நான்கரை மில்லியன் (45 இலட்சம்) மக்கள் ஹெரோயின் மற்றும் கஞ்சாவைப் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. 
இன்று (26) சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் ஆகும். இதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க குறித்த சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெளியானது! நாட்டில் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெளியானது! Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5
Powered by Blogger.