கோடுகள், புள்ளிகள், வளைவுகள் இல்லாமல் உலக சாதனை படைத்த நேஹா பாத்திமா:
irumbuthirai
June 29, 2021
கோடுகள், புள்ளிகள், வளைவுகள் என எதையும் பயன்படுத்தாமல் stencil word art ஓவியத்தை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளார் இந்தியா, கேரளா மாநிலம், கோழிக்கோடைச் சேர்ந்த மாணவி நேஹா பாத்திமா.
இவர் வரைந்தது சினிமாத்துறையில் பல சாதனைகளைப் படைத்து
உலகநாயகன் எனப் பெயர்பெற்ற கமலஹாசனை.
கமலின் மிகப் பெரிய stencil word art ஓவியத்தை கமலஹாசன் என்ற வார்த்தையை மட்டும் வைத்து, வெறும் இரண்டரை மணி நேரத்தில் வரைந்து இந்த உலக சாதனையைப்
படைத்துள்ளார் நேஹா பாத்திமா.
இந்த சாதனைக்காக இந்திய, ஆசிய, அமெரிக்க மற்றும் சர்வதேச சாதனைப் புத்தகங்களில் நேஹா பாத்திமா இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் கமலஹாசனின் Twitter பதிவை கீழே காணலாம்.
கோடுகள், புள்ளிகள், வளைவுகள் இல்லாமல் உலக சாதனை படைத்த நேஹா பாத்திமா:
Reviewed by irumbuthirai
on
June 29, 2021
Rating: