மாணவர்கள் வாரத்திற்கு ஒரு தடவை Home Based Activity செய்ய வேண்டும்: அறிமுகமாகும் புதிய திட்டம்!

July 02, 2021

எனது பார்வையில் இந்தக் Online கல்வி முறையானது ஆரம்ப பிரிவுகளுக்கு பொருத்தமான விடயமாக இல்லை. ஏனெனில் தரம் 1 மற்றும் 2 என்பவற்றை எடுத்துக்கொண்டால் பிள்ளைகள் எழுத்தையும் எண்ணையும் பழகும் பருவமாகும். அது வகுப்பறையில் நடைபெறும் 
செயற்பாட்டு ரீதியான கற்றல் கற்பித்தல் முறையிலேயே சாத்தியம். ஆனால் இந்த Online முறையில் அது அவ்வளவு இலகுவானதல்ல என்று கல்வி சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக் கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 
நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 
எனவே இது போன்ற விடயங்களைக் கருத்திற்கொண்டு பிரயோக ரீதியான வேலைத்திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். அது Home Based Activity எனப்படும். ஒரு பாடத்திற்கு கிழமைக்கு ஒரு தடவை 
மாணவர்கள் கணிப்பீடு/ஒப்படை செய்ய வேண்டும். அதை ஒவ்வொரு கிழமையும்பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். இதை உரிய ஆசிரியர்கள் அதிபர் ஊடாக வீட்டுக்கு பெற்றுக்கொள்ளவோ அல்லது பாடசாலைக்குச் சென்று பெற்றுக் கொள்ளவோ முடியும். அவர்கள் அதை திருத்தி பாடசாலை ஊடாக மீண்டும் பிள்ளைகளுக்கு கிடைக்க செய்வார்கள் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Join our WhatsApp groups:

Join our Telegram channel:

Like our FB page:
மாணவர்கள் வாரத்திற்கு ஒரு தடவை Home Based Activity செய்ய வேண்டும்: அறிமுகமாகும் புதிய திட்டம்! மாணவர்கள் வாரத்திற்கு ஒரு தடவை Home Based Activity செய்ய வேண்டும்: அறிமுகமாகும் புதிய திட்டம்! Reviewed by irumbuthirai on July 02, 2021 Rating: 5

டெல்டாவுக்கு எதிராக சிறப்பாக செயற்படும் தடுப்பூசி இதுதான்! வெளியானது ஆய்வின் முடிவு!

July 01, 2021

இந்தியாவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட டெல்டா கொரோனா திரிபுக்கு எதிராக அமெரிக்காவின் கொவிட் 19 தடுப்பூசியான மொடர்னா (Moderna) வினைத்திறனுடன் செயற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
புதிய ஆய்வுகள் ஊடாக இது தெரியவந்திருப்பதாக மொடர்னா நிறுவனம் அறிவித்துள்ளது. 
டெல்டா (Delta) திரிபுக்கு எதிராக சிறப்பான எதிர்ப்பாற்றலை இந்த தடுப்பூசி பிறப்பிப்பதாக அமெரிக்க சுகாதார துறைசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
எவ்வாறாயினும் இந்த தடுப்பூசியானது தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக இனங்காணப்பட்ட பீட்டா (Beta) திரிபுக்கு எதிராக வினைத்திறனாக செயற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join our WhatsApp groups:

Join our Telegram channel:

Like our FB Page:
டெல்டாவுக்கு எதிராக சிறப்பாக செயற்படும் தடுப்பூசி இதுதான்! வெளியானது ஆய்வின் முடிவு! டெல்டாவுக்கு எதிராக சிறப்பாக செயற்படும் தடுப்பூசி இதுதான்! வெளியானது ஆய்வின் முடிவு!  Reviewed by irumbuthirai on July 01, 2021 Rating: 5

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை மேலும் நீடிப்பு! விஷேட வர்த்தமானியும் வெளியானது!

July 01, 2021

அரச வைத்தியர்கள் ஓய்வு பெற வேண்டிய கட்டாய வயதெல்லை மேலும் நீடிக்கப்பட்டு பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சால் நேற்றைய தினம் (30) அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. 
அந்த வகையில் இந்த வயதெல்லை 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளது. 
 அரச மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீட்டிக்க ஓய்வூதிய சட்டத்தில் திருத்தம் செய்ய கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. 
இதேவேளை ஏற்கனவே 60 ஆக இருந்த ஓய்வு பெறும் வயதெல்லை கடந்த வருடம் 61 வரை நீிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை மேலும் நீடிப்பு! விஷேட வர்த்தமானியும் வெளியானது! வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை மேலும் நீடிப்பு! விஷேட வர்த்தமானியும் வெளியானது! Reviewed by irumbuthirai on July 01, 2021 Rating: 5

15 வயது இலங்கை மாணவனின் சாதனை! WhatsApp மற்றும் Viber க்கு நிகரான புதிய கண்டுபிடிப்பு:

June 30, 2021

மென்பொருள் விஞ்ஞானியாக வர வேண்டும் என்று சிறுவயதிலிருந்தே தனது கல்வியைத் தொடர்ந்த, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் நக்கீரன் மகழினியன் என்ற 15 வயது மாணவன், வாட்ஸ் எப் (WhatsApp) மற்றும் வைபர் (Viber) ஆகிய செயலிகளுக்கு இணையான புதிய வகை செயலி ஒன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். 
mSQUAD என்ற பெயருடைய இந்த செயலி தொலைத் தொடர்பாடல் துறையில் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு மாத காலமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத் தடையினை 
சிறப்பாகப் பயன்படுத்தி வீட்டில் இருந்தே இந்த புதிய செயலியை கண்டுபிடித்துள்ளார். 
படங்கள், வீடியோக்கள் மற்றும் தரவுகளை இதனூடாக பகிர்ந்து கொள்ள முடியும் என்பதுடன் இந்த App மிகவும் விரைவு தன்மை கொண்டதாகவும் காணப்படுகின்றது. 
60 MB அளவு மெகாபைட் கொண்ட இந்த மென்பொருளினை இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


Join our WhatsApp groups:

Join our Telegram channel:

Like our FB page:
15 வயது இலங்கை மாணவனின் சாதனை! WhatsApp மற்றும் Viber க்கு நிகரான புதிய கண்டுபிடிப்பு: 15 வயது இலங்கை மாணவனின் சாதனை! WhatsApp மற்றும் Viber க்கு நிகரான புதிய கண்டுபிடிப்பு: Reviewed by irumbuthirai on June 30, 2021 Rating: 5

Australian Volunteers Program (Program Manager)

June 30, 2021
Australian Volunteers Program (Program Manager) Australian Volunteers Program (Program Manager) Reviewed by irumbuthirai on June 30, 2021 Rating: 5

சந்தையில் பெருமளவில் தரமற்ற முகக்கவசங்கள்: அரசாங்கம் எடுத்த நடவடிக்கை:

June 30, 2021

தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அணியப்படும் முகக்கவசத்திற்கு தரச்சான்றிதழ் கட்டாயமாகும். ஆனால் இந்நாட்களில் சந்தைகளில் தரமற்ற முகக்கவசங்களே பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே அவ்வாறான தரமற்ற 
முகக்கவசங்களை சந்தையிலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் ஷாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். 
மேலும் இவ்வாறு தரமற்ற முககவசங்களை விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Join our WhatsApp Groups:

Join our Telegram Channel:

Like our FB Page:
சந்தையில் பெருமளவில் தரமற்ற முகக்கவசங்கள்: அரசாங்கம் எடுத்த நடவடிக்கை: சந்தையில் பெருமளவில் தரமற்ற முகக்கவசங்கள்: அரசாங்கம் எடுத்த நடவடிக்கை: Reviewed by irumbuthirai on June 30, 2021 Rating: 5

தடுப்பூசி ஆலோசனைக் குழுவிலிருந்து பேராசிரியை நீலிகா மாளவிகேயும் விலகினார்!

June 30, 2021

தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (National Medicinal Regulatory Authority - NMRA). சுயாதீன தடுப்பூசி ஆலோசனை நிபுணர் குழுவிலிருந்து பேராசிரியை நீலிகா மாளவிகேயும் விலகியுள்ளார். 
இவர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மூலக்கூறு மருத்துவ துறையில் நுண்ணுயிரியல் பேராசிரியராக உள்ளார். 
முன்னதாக, களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் ஏ.பத்மேஸ்வரனும் இந்தக் குழுவிலிருந்து ராஜினாமா செய்தார். 
இவர்கள் தமது ராஜினாமாவுக்கான காரணங்களாக 'தனிப்பட்ட மற்றும் வேலைப்பளு' என்பவற்றையே குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
தடுப்பூசி ஆலோசனைக் குழுவிலிருந்து பேராசிரியை நீலிகா மாளவிகேயும் விலகினார்! தடுப்பூசி ஆலோசனைக் குழுவிலிருந்து பேராசிரியை நீலிகா மாளவிகேயும் விலகினார்! Reviewed by irumbuthirai on June 30, 2021 Rating: 5

பாடசாலைகளைப் போன்றே நடத்தப்படும் தொலைக்காட்சி சேவைகள்: அரசின் புதிய திட்டம்:

June 30, 2021

தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சுனாமி போன்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளின் போதும் ஈடு கொடுக்கக் கூடிய வகையில் பாடசாலைகளைப் போன்றே மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30மணிவரை தொலைகாட்சி அலைவரிசை ஊடாக நடாத்தும் திட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
 தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு 20 தொலைகாட்சி அலைவரிசைகளின் ஊடாக மாணவர்களுக்கு 
வீடுகளிலிருந்தே கற்பதற்கான வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. 
மேலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைக்கு முன்னுரிமையளித்து, பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு எதிர்கால நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்.
பாடசாலைகளைப் போன்றே நடத்தப்படும் தொலைக்காட்சி சேவைகள்: அரசின் புதிய திட்டம்: பாடசாலைகளைப் போன்றே நடத்தப்படும் தொலைக்காட்சி சேவைகள்: அரசின் புதிய திட்டம்: Reviewed by irumbuthirai on June 30, 2021 Rating: 5

பல்கலைக்கழக உபவேந்தர்கள் கல்வி அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கைகள்

June 30, 2021

கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பல்கலைக்கழக உபவேந்தர்கள் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அதாவது பல்கலைக்கழக மாணவர்கள் சகலருக்கும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறு கோரியுள்ளனர். இது மாத்திரமன்றி பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் சுகாதார பரிந்துரைகளுக்கமைய விரைவாக பல்கலைக்கழக கல்வியை ஆரம்பிப்பதற்கான 
நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இந்த கலந்துரையாடலின்போது, பல்கலைக்கழக மாணவர்களுக்கு தற்போது முன்னெடுக்கப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட கற்பித்தல் செயற்பாடுகளில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள பரீட்சைகளை சுகாதார முறையில் முன்னெடுப்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டது.
பல்கலைக்கழக உபவேந்தர்கள் கல்வி அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கைகள் பல்கலைக்கழக உபவேந்தர்கள் கல்வி அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கைகள் Reviewed by irumbuthirai on June 30, 2021 Rating: 5

கோடுகள், புள்ளிகள், வளைவுகள் இல்லாமல் உலக சாதனை படைத்த நேஹா பாத்திமா:

June 29, 2021

கோடுகள், புள்ளிகள், வளைவுகள் என எதையும் பயன்படுத்தாமல் stencil word art ஓவியத்தை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளார் இந்தியா, கேரளா மாநிலம், கோழிக்கோடைச் சேர்ந்த மாணவி நேஹா பாத்திமா. 
இவர் வரைந்தது சினிமாத்துறையில் பல சாதனைகளைப் படைத்து 
உலகநாயகன் எனப் பெயர்பெற்ற கமலஹாசனை. 
கமலின் மிகப் பெரிய stencil word art ஓவியத்தை கமலஹாசன் என்ற வார்த்தையை மட்டும் வைத்து, வெறும் இரண்டரை மணி நேரத்தில் வரைந்து இந்த உலக சாதனையைப் படைத்துள்ளார் நேஹா பாத்திமா. 
இந்த சாதனைக்காக இந்திய, ஆசிய, அமெரிக்க மற்றும் சர்வதேச சாதனைப் புத்தகங்களில் நேஹா பாத்திமா இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் கமலஹாசனின் Twitter பதிவை கீழே காணலாம்.


கோடுகள், புள்ளிகள், வளைவுகள் இல்லாமல் உலக சாதனை படைத்த நேஹா பாத்திமா: கோடுகள், புள்ளிகள், வளைவுகள் இல்லாமல் உலக சாதனை படைத்த நேஹா பாத்திமா: Reviewed by irumbuthirai on June 29, 2021 Rating: 5

Online கல்வி முறைமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

June 29, 2021

Online கல்வி முறைமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்றைய தினம் (28) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தினாலேயே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 
அதாவது சகல மாணவர்களுக்கும் Online கல்வி 
சம அளவில் கிடைக்காமையால் மாணவர்களின் உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்தே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 மேலும் மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கான சந்தர்ப்பம் 02 வருடங்களாக இல்லாமல் போனமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் தனது முறைப்பாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளது. 
இந்த முறைப்பாடு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ உள்ளிட்ட சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுராதபுரம் அலுவலகத்தில் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Online கல்வி முறைமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு! Online கல்வி முறைமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு! Reviewed by irumbuthirai on June 29, 2021 Rating: 5

Vacancy: USAID (United States Agency for International Development)

June 29, 2021

The United States Agency for International Development (USAID) in Colombo seeks suitable candidates for the position as Project Management Specialist. 
The job holder serves as a Project Management Specialist for the office of Economic Growth (OEG) in USAID / Sri Lanka & Maldives. 
Annual salary: Rs. 4,017,389 - 6,649,174
Closing date: 20-07-2021 (05:30 PM) 
See the details below.

Source: Sunday Observer.


Join our WhatsApp group.

Join our Telegram channel.

Like our FB page:
Vacancy: USAID (United States Agency for International Development) Vacancy: USAID (United States Agency for International Development) Reviewed by irumbuthirai on June 29, 2021 Rating: 5

வீட்டிலிருக்கும் கொரோனா தொற்றாளர்கள் பற்றி அறிய புதிய தொலைபேசி இலக்கம்

June 29, 2021

வீடுகளில் கொரோனா நோயாளர்களை பராமரிக்கும் விசேட செய்திட்டம் நேற்று (28) சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
இதற்கமைய, 1390 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இதன் மூலம் வீடுகளில் வைத்து பராமரிப்பதற்கான கொரோனா நோயாளிகளை தெரிவுசெய்வதற்காக, விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட வைத்தியர் குழுவினால் தினமும் தொலைபேசியூடாக ஆராயப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 
இந்த புதிய திட்டத்தின் மூலம் நோய் அறிகுறி உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட நோயாளர்கள் மற்றும் ஆபத்து ஏற்படக்கூடிய சாத்தியமுள்ள நோயாளர்களுக்கு வைத்தியசாலைகளில் அனுமதிக்கும்போது முன்னுரிமையளிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வீட்டிலிருக்கும் கொரோனா தொற்றாளர்கள் பற்றி அறிய புதிய தொலைபேசி இலக்கம் வீட்டிலிருக்கும் கொரோனா தொற்றாளர்கள் பற்றி அறிய புதிய தொலைபேசி இலக்கம் Reviewed by irumbuthirai on June 29, 2021 Rating: 5
Powered by Blogger.