பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தனியார் வகுப்புகள் எப்போது ஆரம்பம்?

July 04, 2021

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். 
அதாவது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களை திறப்பதற்கான திகதி 
இதுவரை அறிவிக்கப்படவில்லை. அது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. 
இது மாத்திரமன்றி பாடசாலைகளை திறக்க வேண்டும் என்றால் அதற்கு முன்னர் ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க வேண்டும். மேலும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தனியார் வகுப்புகள் எப்போது ஆரம்பம்? பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தனியார் வகுப்புகள் எப்போது ஆரம்பம்? Reviewed by irumbuthirai on July 04, 2021 Rating: 5

2021 ற்கான உ. தர பரீட்சை: Online மூலம் மாத்திரம் விண்ணப்பம் கோரல்:

July 04, 2021

இவ்வருடம் (2021) உயர்தரப் பரீட்சை எழுதவிருக்கும் பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளிடமிருந்து பரீட்சை திணைக்களம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. 
விண்ணப்பங்களை Online மூலம் மாத்திரமே சமர்ப்பிக்கலாம். 
இதற்கான விண்ணப்பங்கள் நாளை (5) முதல் இம்மாதம் 30ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
2021 ற்கான உ. தர பரீட்சை: Online மூலம் மாத்திரம் விண்ணப்பம் கோரல்: 2021 ற்கான உ. தர பரீட்சை: Online மூலம் மாத்திரம் விண்ணப்பம் கோரல்: Reviewed by irumbuthirai on July 04, 2021 Rating: 5

Online கல்விக்கு எதிராக நாடுபூராகவும் தொடரும் முறைப்பாடுகள்! அமைச்சரை பதவி விலகவும் கோரிக்கை!

July 04, 2021

Online கல்வி முறையில் மாணவர்களின் கல்விக்கான வாய்ப்பு சம அளவில் கிடைப்பதில்லை என தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யும் முறைப்பாடு நாடுபூராகவும் தொடர்கிறது. 
 இந்தக் கல்வி முறையில் கல்விக்கான சம உரிமை கிடைப்பதில்லை என்றும் சகல மாணவர்களுக்கும் சமமான கல்வி உரிமையை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் சுமார் இரண்டு வருடங்களாக நாட்டின் 60% மான மாணவர்களின் கல்வி இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே இந்த முறைப்பாடு செய்யப்படுகிறது. 
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுராதபுர மாவட்ட கிளையில் 
இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் முதன்முதலாக முறைப்பாடு செய்யப்பட்டது. 
அதன்பின்னர் புத்தளம், பதுளை, கண்டி, மட்டக்களப்பு போன்ற மாவட்ட கிளைகளிலும் கொழும்பில் உள்ள பிரதான அலுவலகத்திலும் இதுவரை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை தமது பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றாத கல்வி அமைச்சர் G.L. பீரிஸ், அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் குறித்த சங்கம் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Online கல்விக்கு எதிராக நாடுபூராகவும் தொடரும் முறைப்பாடுகள்! அமைச்சரை பதவி விலகவும் கோரிக்கை! Online கல்விக்கு எதிராக நாடுபூராகவும் தொடரும் முறைப்பாடுகள்! அமைச்சரை பதவி விலகவும் கோரிக்கை! Reviewed by irumbuthirai on July 04, 2021 Rating: 5

108 Vacancies: State Ministry of Provincial Councils & Local Government Affairs

July 04, 2021

108 பதவிகளுக்கான வெற்றிடங்கள் (மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற விவகார இராஜாங்க அமைச்சு) 

108 Vacancies available in the State Ministry of Provincial Councils & Local Government Affairs. 
Closing date: 12-07-2021 (03:00 PM) 
See the details below.
Source: Sunday Observer.


Join our Telegram channel:

Like our FB page:
108 Vacancies: State Ministry of Provincial Councils & Local Government Affairs 108 Vacancies: State Ministry of Provincial Councils & Local Government Affairs  Reviewed by irumbuthirai on July 04, 2021 Rating: 5

ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கான (ஆரம்பக் கல்வி - ஆங்கிலம்) போட்டிப் பரீட்சை - 2021 (வட மாகாணம்) / Competition Exam for English Teaching Appointments - 2021 (Northern Province)

July 03, 2021

வடக்கு மாகாண தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆரம்ப கல்வி (ஆங்கிலம்) ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு 1 (இ) தரத்திற்கு ஆங்கில டிப்ளோமாதாதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2021 

வெற்றிடங்கள்: தமிழ் மொழி மூலம் 97, சிங்கள மொழி மூலம் 11 மொத்தம் 108 வெற்றிடங்கள். 

பதவி நிரந்தரமானது. மேலும் ஓய்வூதிய உரித்துடையதுமாகும். 

தகுதிகாண் காலம்:  03 வருடங்கள். 

வதிவிடத்தை உறுதிப்படுத்தல் (தமிழ் மொழிமூல விண்ணப்பதாரர்களுக்கு):
குறித்த விண்ணப்பதாரி வடமாகாணத்தில் தொடர்ச்சியாக 03 வருடம் வசித்திருத்தல். 
அல்லது 
விண்ணப்பதாரரின் பெற்றோர் வடமாகாணத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதோடு அவர்கள் தொடர்ச்சியாக 05 வருடங்களேனும் வடமாகாணத்தில் வசித்திருத்தல் வேண்டும். 

வயதெல்லை: 18 - 44. 

கல்வித் தகைமை: சாதாரண தரத்தில் சிங்களம் அல்லது தமிழ் மொழி சித்தியுடன் இரண்டு வருடத்திற்கு குறையாத NVQ - 6 மட்டத்தை கொண்டு ஆங்கில டிப்ளோமா பாடநெறி. 

போட்டி பரீட்சையில் ஒவ்வொரு வினாப்பத்திரத்திற்கும் குறைந்தது 
40% புள்ளிகளைப் பெற்றுக்கொள்பவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர். 

விண்ணப்பத்தின் நிழற்பட பிரதியை தம்வசம் வைத்துக் கொள்வது நல்லது. 

பரீட்சைக் கட்டணம்: ரூபா 500.00 

பரீட்சைக்குரிய பாடங்கள்: நுண்ணறிவு மற்றும் பொது அறிவு. 

வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் பரீட்சை நடாத்தப்படும். 

பரீட்சை பெறுபேறுகள் வடக்கு மாகாணசபை இணையதளத்தில் வெளியிடப்படும். அதன் பின்னர் பரீட்சார்த்திகளுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும். 

விண்ணப்ப முடிவு திகதி: 26-07-2021. 

இது தொடர்பான முழுமையான விபரங்களுக்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
விண்ணப்ப படிவத்தை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


Join our Telegram channel:

Like our FB page:

Join our WhatsApp groups :
ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கான (ஆரம்பக் கல்வி - ஆங்கிலம்) போட்டிப் பரீட்சை - 2021 (வட மாகாணம்) / Competition Exam for English Teaching Appointments - 2021 (Northern Province) ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கான (ஆரம்பக் கல்வி - ஆங்கிலம்) போட்டிப் பரீட்சை - 2021 (வட மாகாணம்) / Competition Exam for English Teaching Appointments - 2021 (Northern Province) Reviewed by irumbuthirai on July 03, 2021 Rating: 5

28-06-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

July 03, 2021

28-06-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எட்டப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில் 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


கடந்தவார அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களுக்கு செல்ல இங்கே கிளிக் செய்க.


Join our WhatsApp groups:

Join our Telegram channel:

Like our FB page:
28-06-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 28-06-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on July 03, 2021 Rating: 5

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்: வெளியானது கல்வி அமைச்சரின் அறிவிப்பு:

July 02, 2021

சுகாதார துறையினரின் முழுமையான பரிந்துரைகளுக்கு அமைவாக 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இந்த மாதம் (ஜூலை) ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இன்று (2) கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
இந்நாட்டினுள் 50 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட 1,439 பாடசாலைகளும், 51-100 மாணவர்களை கொண்ட 
1,523 பாடசாலைகளும் காணப்படுகின்றன. எவ்வாறாயினும் பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயமானதாகும் என ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டது. மேலும் முதற்கட்டமாக 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஆரம்பித்த பின்னர் ஏனைய பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்: வெளியானது கல்வி அமைச்சரின் அறிவிப்பு: பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்: வெளியானது கல்வி அமைச்சரின் அறிவிப்பு: Reviewed by irumbuthirai on July 02, 2021 Rating: 5

உயர்கல்விக்கு வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

July 02, 2021

உயர் கல்வி நிமித்தம் வௌிநாடு செல்லும் மாணவர்களுக்காக கொரோனா தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ், சினோபார்ம் (Sinopharm) தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 
இந்த விடயம் தொடர்பான மேலதிக விபரங்களை இலங்கை இராணுவத்தின் இணையத்தளத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். 
குறித்த இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
உயர்கல்விக்கு வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல் உயர்கல்விக்கு வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல் Reviewed by irumbuthirai on July 02, 2021 Rating: 5

அடுத்த வாரத்திலிருந்து சகல ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி - ஜனாதிபதி பணிப்பு.

July 02, 2021

நாட்டிலுள்ள சகல ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை எதிர்வரும் வாரத்திலிருந்து ஆரம்பிக்கும்படி ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 
இதேவேளை தடுப்பூசி வழங்கும் பொருட்டு ஆசிரியர்களின் விவரங்களை பெறும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join our WhatsApp groups:

Join our Telegram channel

Like our FB page:
அடுத்த வாரத்திலிருந்து சகல ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி - ஜனாதிபதி பணிப்பு. அடுத்த வாரத்திலிருந்து சகல ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி - ஜனாதிபதி பணிப்பு. Reviewed by irumbuthirai on July 02, 2021 Rating: 5

மாணவர்கள் வாரத்திற்கு ஒரு தடவை Home Based Activity செய்ய வேண்டும்: அறிமுகமாகும் புதிய திட்டம்!

July 02, 2021

எனது பார்வையில் இந்தக் Online கல்வி முறையானது ஆரம்ப பிரிவுகளுக்கு பொருத்தமான விடயமாக இல்லை. ஏனெனில் தரம் 1 மற்றும் 2 என்பவற்றை எடுத்துக்கொண்டால் பிள்ளைகள் எழுத்தையும் எண்ணையும் பழகும் பருவமாகும். அது வகுப்பறையில் நடைபெறும் 
செயற்பாட்டு ரீதியான கற்றல் கற்பித்தல் முறையிலேயே சாத்தியம். ஆனால் இந்த Online முறையில் அது அவ்வளவு இலகுவானதல்ல என்று கல்வி சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக் கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 
நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 
எனவே இது போன்ற விடயங்களைக் கருத்திற்கொண்டு பிரயோக ரீதியான வேலைத்திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். அது Home Based Activity எனப்படும். ஒரு பாடத்திற்கு கிழமைக்கு ஒரு தடவை 
மாணவர்கள் கணிப்பீடு/ஒப்படை செய்ய வேண்டும். அதை ஒவ்வொரு கிழமையும்பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். இதை உரிய ஆசிரியர்கள் அதிபர் ஊடாக வீட்டுக்கு பெற்றுக்கொள்ளவோ அல்லது பாடசாலைக்குச் சென்று பெற்றுக் கொள்ளவோ முடியும். அவர்கள் அதை திருத்தி பாடசாலை ஊடாக மீண்டும் பிள்ளைகளுக்கு கிடைக்க செய்வார்கள் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Join our WhatsApp groups:

Join our Telegram channel:

Like our FB page:
மாணவர்கள் வாரத்திற்கு ஒரு தடவை Home Based Activity செய்ய வேண்டும்: அறிமுகமாகும் புதிய திட்டம்! மாணவர்கள் வாரத்திற்கு ஒரு தடவை Home Based Activity செய்ய வேண்டும்: அறிமுகமாகும் புதிய திட்டம்! Reviewed by irumbuthirai on July 02, 2021 Rating: 5

டெல்டாவுக்கு எதிராக சிறப்பாக செயற்படும் தடுப்பூசி இதுதான்! வெளியானது ஆய்வின் முடிவு!

July 01, 2021

இந்தியாவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட டெல்டா கொரோனா திரிபுக்கு எதிராக அமெரிக்காவின் கொவிட் 19 தடுப்பூசியான மொடர்னா (Moderna) வினைத்திறனுடன் செயற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
புதிய ஆய்வுகள் ஊடாக இது தெரியவந்திருப்பதாக மொடர்னா நிறுவனம் அறிவித்துள்ளது. 
டெல்டா (Delta) திரிபுக்கு எதிராக சிறப்பான எதிர்ப்பாற்றலை இந்த தடுப்பூசி பிறப்பிப்பதாக அமெரிக்க சுகாதார துறைசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
எவ்வாறாயினும் இந்த தடுப்பூசியானது தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக இனங்காணப்பட்ட பீட்டா (Beta) திரிபுக்கு எதிராக வினைத்திறனாக செயற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join our WhatsApp groups:

Join our Telegram channel:

Like our FB Page:
டெல்டாவுக்கு எதிராக சிறப்பாக செயற்படும் தடுப்பூசி இதுதான்! வெளியானது ஆய்வின் முடிவு! டெல்டாவுக்கு எதிராக சிறப்பாக செயற்படும் தடுப்பூசி இதுதான்! வெளியானது ஆய்வின் முடிவு!  Reviewed by irumbuthirai on July 01, 2021 Rating: 5

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை மேலும் நீடிப்பு! விஷேட வர்த்தமானியும் வெளியானது!

July 01, 2021

அரச வைத்தியர்கள் ஓய்வு பெற வேண்டிய கட்டாய வயதெல்லை மேலும் நீடிக்கப்பட்டு பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சால் நேற்றைய தினம் (30) அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. 
அந்த வகையில் இந்த வயதெல்லை 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளது. 
 அரச மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீட்டிக்க ஓய்வூதிய சட்டத்தில் திருத்தம் செய்ய கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. 
இதேவேளை ஏற்கனவே 60 ஆக இருந்த ஓய்வு பெறும் வயதெல்லை கடந்த வருடம் 61 வரை நீிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை மேலும் நீடிப்பு! விஷேட வர்த்தமானியும் வெளியானது! வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை மேலும் நீடிப்பு! விஷேட வர்த்தமானியும் வெளியானது! Reviewed by irumbuthirai on July 01, 2021 Rating: 5

15 வயது இலங்கை மாணவனின் சாதனை! WhatsApp மற்றும் Viber க்கு நிகரான புதிய கண்டுபிடிப்பு:

June 30, 2021

மென்பொருள் விஞ்ஞானியாக வர வேண்டும் என்று சிறுவயதிலிருந்தே தனது கல்வியைத் தொடர்ந்த, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் நக்கீரன் மகழினியன் என்ற 15 வயது மாணவன், வாட்ஸ் எப் (WhatsApp) மற்றும் வைபர் (Viber) ஆகிய செயலிகளுக்கு இணையான புதிய வகை செயலி ஒன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். 
mSQUAD என்ற பெயருடைய இந்த செயலி தொலைத் தொடர்பாடல் துறையில் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு மாத காலமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத் தடையினை 
சிறப்பாகப் பயன்படுத்தி வீட்டில் இருந்தே இந்த புதிய செயலியை கண்டுபிடித்துள்ளார். 
படங்கள், வீடியோக்கள் மற்றும் தரவுகளை இதனூடாக பகிர்ந்து கொள்ள முடியும் என்பதுடன் இந்த App மிகவும் விரைவு தன்மை கொண்டதாகவும் காணப்படுகின்றது. 
60 MB அளவு மெகாபைட் கொண்ட இந்த மென்பொருளினை இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


Join our WhatsApp groups:

Join our Telegram channel:

Like our FB page:
15 வயது இலங்கை மாணவனின் சாதனை! WhatsApp மற்றும் Viber க்கு நிகரான புதிய கண்டுபிடிப்பு: 15 வயது இலங்கை மாணவனின் சாதனை! WhatsApp மற்றும் Viber க்கு நிகரான புதிய கண்டுபிடிப்பு: Reviewed by irumbuthirai on June 30, 2021 Rating: 5
Powered by Blogger.