Online கல்வி: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
irumbuthirai
July 05, 2021
15 வயது சிறுமியை பாலியல் தேவைக்காக இணையத்தின் மூலம் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (5) ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம,
தற்போது பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வி நடத்தப்படுவதால் குழந்தைகள் எளிதில் ஆபாச வலைத்தளங்களை பார்க்கக்கூடும். கையடக்க தொலைபேசிகள் அல்லது கணினிகள் குழந்தைகளின் கைகளுக்கு கிடைப்பதை தடுக்க
முடியாது. பெற்றோர்கள் பணிக்காக வீட்டிலிருந்து சென்றிருக்கும் போது குழந்தைகள் இந்த சாதனங்களை கல்வி நடவடிக்கைகளுக்காக பாவிக்கிறார்கள்.
இதுபோன்ற சூழ்நிலையில், குழந்தைகள் எளிதில் ஆபாச வலைத்தளங்களை அணுகலாம். எனவே இவ்வாறு ஆபாச வலைத்தளங்களை அணுகுவதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்யுமாறு சி.ஐ.டி மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் பணியகத்திடம் நீதவான் உத்தரவிட்டார்.
இதற்கு பதிலளித்த குறித்து அதிகாரிகள் இது குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துடன் (TRC) கலந்துரையாட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
Online கல்வி: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
Reviewed by irumbuthirai
on
July 05, 2021
Rating: