Application for 06 External Degrees (Sri Jayawardenepura University) / 06 வகையான வெளிவாரி பட்டப்படிப்பிற்கான விண்ணப்பம்

July 08, 2021

Applications are called for the following external degree programs offered by University of Sri Jayawardenepura.
(1) BA (General) 
(2) B.Sc in Environmental & Development Studies. 
(3) BA in English. 
(4) B. Com 
(5) B. Sc in Public Management. 
(6) B. Sc in Business Studies. 

Closing date: 31-07-2021. 
Applications On: http://external.sjp.ac.lk/
See the details below.
Source: Sunday Observer.


Join our Telegram channel:

Like our FB page:

Join our WhatsApp groups:
Application for 06 External Degrees (Sri Jayawardenepura University) / 06 வகையான வெளிவாரி பட்டப்படிப்பிற்கான விண்ணப்பம் Application for 06 External Degrees (Sri Jayawardenepura University) / 06 வகையான வெளிவாரி பட்டப்படிப்பிற்கான விண்ணப்பம் Reviewed by irumbuthirai on July 08, 2021 Rating: 5

Courses: National School of Business Management (NSBM)

July 08, 2021

Courses: National School of Business Management (NSBM) - Green University. 
- Postgraduates Diploma Programs (PGD) 
- MBA & MBS Programs. 
See the details below.
Source: Sunday Observer.


Join our Telegram channel:

Like our FB page:

Join our WhatsApp groups:
Courses: National School of Business Management (NSBM) Courses: National School of Business Management (NSBM) Reviewed by irumbuthirai on July 08, 2021 Rating: 5

எலிகளிடம் பரிசோதனை: கண்டுபிடிக்கப்பட்டது கொரோனாவுக்கான சிகிச்சை முறை!

July 08, 2021

உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரசுக்காக இதுவரை பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இதற்கான சிகிச்சை முறை ஒன்றை தற்போது அமெரிக்க கன்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 
அந்த வகையில் கொரோனா வைரஸ் பாதித்த எலிகள் உள்ளிட்ட இன்னும் சில விலங்குகளுக்கு புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்போது, அவற்றின் இறப்புகள் 
குறைவதுடன், நுரையீரல் தொற்று குறைவதும் கண்டறியப்பட்டு உள்ளது. 
வைரஸ் தடுப்பு மருந்துகளின் ஒரு வகையான இந்த புரோட்டீஸ் தடுப்பான்களால், வைரஸ்களின் இனப்பெருக்கம் தடுப்பதுடன், வைரஸ் உற்பத்திக்கு தேவையான புரதங்களை செயல்படுத்துவதையும் தடுக்கப்படுகிறது. 
இது தொடர்பாக கன்சாஸ் பல்கலைக்கழக இணை பேராசிரியரான யுன்ஜியோங் கிம் கூறுகையில், 
‘பூனைகளுக்கு கொரோனா சிகிச்சைக்காக நாங்கள் இந்த புரோட்டீஸ் தடுப்பான்களை ஜிசி376 உருவாக்கினோம். தற்போது அது விலங்குகளுக்கான மருந்தாக வர்த்தக ரீதியான தயாரிப்பில் உள்ளது’ என்று தெரிவித்தார். 
கொரோனா வைரசுக்கு எதிராக இந்த தடுப்பானும் பயனுள்ளதாக இருப்பதாக பல ஆராய்ச்சி குழுக்கள் தெரிவித்ததாக கூறிய கிம், தற்போது பலரும் இதை ஒரு சிகிச்சையாக தொடர்வதாகவும் தெரிவித்தார். 
இந்த புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் ஜிசி376-ஐ டியூட்டிரேசன் மூலம் மாற்றியமைக்கும்போது, அது கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 
தொற்று பாதித்த எலிக்கு 24 மணி நேரத்துக்கு பின் இந்த சிகிச்சையை மேற்கொள்ளும்போது, சிகிச்சை பெறாத எலிகளை விட சிகிச்சை பெற்ற எலிகளிடம் இறப்பு விகிதம் மிகவும் குறைவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். 
கொரோனாவுக்கு எதிராக பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி மேம்பட்ட தடுப்பான்களை வைரஸ் சிகிச்சை நிபுணர்கள் உருவாக்கி வருகின்றனர். இதில் மேற்படி சிகிச்சை முறை மேலும் சாத்தியமான மேம்பாட்டுக்காக மதிப்பீடு செய்யப்படுகிறது. எலிகளிடம் இந்த சிகிச்சை முறை வெற்றி பெற்றிருப்பதன் மூலம் இது கொரோனா சிகிச்சை முறையில் முக்கிய திருப்பு முனையாக கருதப்படுகிறது.
Source: Thinakaran.
எலிகளிடம் பரிசோதனை: கண்டுபிடிக்கப்பட்டது கொரோனாவுக்கான சிகிச்சை முறை! எலிகளிடம் பரிசோதனை: கண்டுபிடிக்கப்பட்டது கொரோனாவுக்கான சிகிச்சை முறை! Reviewed by irumbuthirai on July 08, 2021 Rating: 5

ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 16 தொலைக்காட்சி அலைவரிசைகள்:

July 08, 2021

கடந்த செவ்வாய்க்கிழமை (6) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் பாராளுமன்றத்தில் தொலைக் கல்வி முறை தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றிய கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, 
நான் இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்ற பின்னர் அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை பிரதானிகளுடன் கலந்துரையாடினோம். 
இதன் காரணமாக செனல் ஐ (Channel Eye) ஊடாக தற்போது கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் அவை நடைபெறுகின்றன. 
தேசிய அலைவரிசைகளில் நஷ்டத்துடனும் அந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 
இதேவேளை தற்போது கொழும்பில் சகல பாடசாலைகளின் 
அதிபர்களையும் அழைத்து கலந்துரையாடல் நடத்தப்படுகின்றது. 
அதனடிப்படையில் 16 அலைவரிசைகளை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 
ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு அலைவரிசை என்ற ரீதியில் செய்மதி முறையில் அந்த அலைவரிசைகள் தயாரிக்கப்படவுள்ளன. 
காலை 7.30 மணி - பி.ப 1.30 மணி வரையில் பாடசாலையில் கற்பிப்பதை போன்றே அது நடக்கும். 
இந்த கொவிட்19 நிலைமை எப்போது முடியுமென்று தெரியாது. இதனால் நாங்கள் மாணவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கின்றோம். 
இதேவேளை தனியார் தொலைக்காட்சிகள் ஏற்கனவே ஒளிபரப்பிய நாடகங்கள், படங்களை மீள ஒளிபரப்புவதை நிறுத்தி அதனை கல்விக்காக ஒதுக்கலாம். அல்லது மாணவர்களுக்கான உடற்பயிற்சிக்காக அரை மணி நேரத்தை ஒதுக்கலாம் என்றும் கேட்கின்றோம் என அமைச்சர் தெரிவித்தார்.
Source: தினகரன்.
ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 16 தொலைக்காட்சி அலைவரிசைகள்: ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 16 தொலைக்காட்சி அலைவரிசைகள்: Reviewed by irumbuthirai on July 08, 2021 Rating: 5

05-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

July 07, 2021

05-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இங்கு தருகிறோம்.! 
இதில்,
பாடசாலை மாணவர்களுக்கான Home Based Activity உட்பட பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன.
இதன் முழு வடிவத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

கடந்த வார அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களுக்கு செல்ல இங்கே கிளிக் செய்க.


Join our Telegram channel:

Like our FB page:

Join our WhatsApp groups:
05-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 05-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on July 07, 2021 Rating: 5

நிரந்தர நியமனம் வழங்கல் தொடர்பான அறிவித்தல்

July 07, 2021

தற்போது உள்ளுராட்சி மன்றங்களில் ஒப்பந்த, சமயாசமய, பகுதிநேர அடிப்படையில் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். 
தற்சமயம் உள்ளூராட்சி மன்றங்களில் நிரந்தர நியமனம் பெறாத, 
8000 ஊழியர்கள் பணியாற்றுவதாக கூறினார். 
இது தொடர்பான யோசனையை நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் இவர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு பிரதமர் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நிரந்தர நியமனம் வழங்கல் தொடர்பான அறிவித்தல் நிரந்தர நியமனம் வழங்கல் தொடர்பான அறிவித்தல் Reviewed by irumbuthirai on July 07, 2021 Rating: 5

அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திகதி அறிவிப்பு!

July 07, 2021

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் தினத்தை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் அறிவித்துள்ளார். 
அந்த வகையில் இம்மாதம் 
12ஆம் திகதி முதல் இவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார். 
நாட்டில் உள்ள 10,155 பாடசாலைகளின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் என அனைவருக்கும் இவ்வாறு தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திகதி அறிவிப்பு! அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திகதி அறிவிப்பு! Reviewed by irumbuthirai on July 07, 2021 Rating: 5

Teachers' Training College - ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கான அனுமதி: நீடிக்கப்பட்டது விண்ணப்ப திகதி: (சுற்றுநிறுபம், அறிவுறுத்தல்கள், விண்ணப்பம் என்பன இணைப்பு)

July 06, 2021

பட்டதாரியல்லாத பயிற்றப்படாத ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் என்பவர்களை ஆசிரியர் கலாசாலைக்கு 02 வருட பயிற்சிக்காக அனுமதிப்பதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீடிக்கப்பட்ட புதிய திகதி: 20-07-2021. 

சுற்று நிருபத்தை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 

விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 

விண்ணப்ப படிவத்தை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
Teachers' Training College - ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கான அனுமதி: நீடிக்கப்பட்டது விண்ணப்ப திகதி: (சுற்றுநிறுபம், அறிவுறுத்தல்கள், விண்ணப்பம் என்பன இணைப்பு) Teachers' Training College - ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கான அனுமதி: நீடிக்கப்பட்டது விண்ணப்ப திகதி: (சுற்றுநிறுபம், அறிவுறுத்தல்கள், விண்ணப்பம் என்பன இணைப்பு) Reviewed by irumbuthirai on July 06, 2021 Rating: 5

Annual Teacher Transfer (Central Province) / வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் (மத்திய மாகாணம்) - 2022 (முழுமையான விளக்கங்களுடன்)

July 06, 2021

மத்திய மாகாண பாடசாலைகளில் கடமை புரியும் ஆசிரியர்களிடமிருந்து 2022 ஆம் வருடத்திற்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

விண்ணப்ப முடிவு திகதி: 15-07-2021. 

வலயத்தினுள் அல்லது வலயங்களுக்கிடையில் இடமாற்றம் பெற விரும்புவோர் Online முறையில் விண்ணப்பிக்க வேண்டும். Online விண்ணப்பத்தை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
(குறிப்பு:- 2022 ற்குரிய விண்ணப்பம்  காட்சிப்படுத்தப்பட்டவுடன் விண்ணப்பிக்கவும்)


மாகாணங்களுக்கு இடையில் அல்லது தேசிய பாடசாலைக்கு விண்ணப்பிப்போர் 15-07-2021ற்கு முன் அதிபர் ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். (இதற்காக மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தால் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விண்ணப்ப படிவத்தை மட்டும் பயன்படுத்தவும். இதை வலயக்கல்வி காரியாலயத்திலிருந்து பெறலாம்.) 

மாகாணங்களுக்கு இடையிலான விண்ணப்பங்கள் - 05 

மாகாணத்திலிருந்து தேசிய பாடசாலைக்கான விண்ணப்பங்கள் - 05 

ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக இடமாற்றம் பெற்ற ஆசிரியர்கள் 
இடமாற்றம் தொடர்பாக விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். 

வேறு மாகாணத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் மத்திய மாகாணத்தில் குறைந்தபட்சம் 05 வருடங்கள் சேவையை பூர்த்தி செய்திருத்தலுடன் நியமனம் நிரந்தரமாக்கப்பட்டிருத்தல் அவசியம். 

பாடசாலையில் மேலதிக ஆசிரியராகவோ அல்லது அந்தப் பாடசாலையில் 08 வருடங்கள் சேவையாற்றியிருந்தாலோ விண்ணப்பிக்காமலே இடமாற்றத்திற்கு உள்ளாக நேரிடலாம். 

விண்ணப்பங்கள் இணைய தளத்திற்கு உட்படுத்தப்பட்டவுடன் விண்ணப்பதாரருக்கு பதிவிலக்கம் வழங்கப்படும். மேலதிக செயற்பாடுகளின் போது அந்த இலக்கத்தை விண்ணப்பதாரிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இது தொடர்பாக மாகாண கல்விப் பணிப்பாளரால் வெளியிடப்பட்ட அறிவித்தலை கீழே காணலாம்.


Join our Telegram channel:

Like our FB page:

Join our WhatsApp groups:
Annual Teacher Transfer (Central Province) / வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் (மத்திய மாகாணம்) - 2022 (முழுமையான விளக்கங்களுடன்) Annual Teacher Transfer (Central Province)  / வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் (மத்திய மாகாணம்) - 2022 (முழுமையான விளக்கங்களுடன்) Reviewed by irumbuthirai on July 06, 2021 Rating: 5

Online கல்வி: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

July 05, 2021

15 வயது சிறுமியை பாலியல் தேவைக்காக இணையத்தின் மூலம் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (5) ஆஜர்படுத்தப்பட்டனர். 
 இதன்போது கருத்து தெரிவித்த கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம, 
தற்போது பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வி நடத்தப்படுவதால் குழந்தைகள் எளிதில் ஆபாச வலைத்தளங்களை பார்க்கக்கூடும். கையடக்க தொலைபேசிகள் அல்லது கணினிகள் குழந்தைகளின் கைகளுக்கு கிடைப்பதை தடுக்க 
முடியாது. பெற்றோர்கள் பணிக்காக வீட்டிலிருந்து சென்றிருக்கும் போது குழந்தைகள் இந்த சாதனங்களை கல்வி நடவடிக்கைகளுக்காக பாவிக்கிறார்கள். 
இதுபோன்ற சூழ்நிலையில், குழந்தைகள் எளிதில் ஆபாச வலைத்தளங்களை அணுகலாம். எனவே இவ்வாறு ஆபாச வலைத்தளங்களை அணுகுவதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்யுமாறு சி.ஐ.டி மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் பணியகத்திடம் நீதவான் உத்தரவிட்டார்.
இதற்கு பதிலளித்த குறித்து அதிகாரிகள் இது குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துடன் (TRC) கலந்துரையாட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
Online கல்வி: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! Online கல்வி: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! Reviewed by irumbuthirai on July 05, 2021 Rating: 5

2021 A/L Exam: பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்! (வீடியோ வழிகாட்டல் மற்றும் ஏனைய விபரங்கள்)

July 05, 2021

இந்த வருடத்திற்கான (2021) உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்பித்தல் தொடர்பான விபரங்களைத் தருகிறோம். 

Online முறையில் மாத்திரமே இம்முறை விண்ணப்பிக்கலாம். 

Online இல் விண்ணப்பிப்பதற்கான தளங்கள் (ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம்)
3. DoE என்று அழைக்கப்படும் பரீட்சை திணைக்களத்தின் Mobile App. (இந்த Mobile App தொடர்பான விளக்கங்களுக்கும் அதை தரவிறக்கம் செய்யவும் https://www.irumbuthirainews.com/2021/05/official-mobile-app-for-department-of.html?m=1 என்ற லிங்கிற்கு செல்க)

விண்ணப்பிக்க முடியுமான காலப் பகுதி: 
ஜூலை 05 - ஜூலை 30 வரை. 

பாடசாலை பரீட்சார்த்திகள்: 
பாடசாலையின் அதிபர்கள் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பாடசாலை அதிபர்களுக்கும் 
ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User Name மற்றும் Password ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். 

தனிப்பட்ட பரீட்சார்த்திகள்: 
உரிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றி Online இல் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதோடு அதன் அச்சுப் பிரதியை பெற்று, உரிய சந்தர்ப்பத்தில் காண்பிக்கும் வகையில் தம்வசம் அந்த  அச்சுப் பிரதியை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். 

சந்தேகங்கள் மற்றும் மேலதிக விளக்கங்களுக்கு: 
பாடசாலை பரீட்சைகள் பிரிவு 
0112785231/ 0112785216 0112784037 
உடனடி தொலைபேசி இலக்கம் - 1911

வீடியோ முறையிலான வழிகாட்டலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

PDF முறையிலான வழிகாட்டலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

Join our Telegram channel:

Like our FB page:

Join our WhatsApp groups :
2021 A/L Exam: பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்! (வீடியோ வழிகாட்டல் மற்றும் ஏனைய விபரங்கள்) 2021 A/L Exam: பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்! (வீடியோ வழிகாட்டல் மற்றும் ஏனைய விபரங்கள்) Reviewed by irumbuthirai on July 05, 2021 Rating: 5

Online இல் கற்க முடியாத மாணவர்கள்: இன்று முதல் ஆரம்பமாகும் Regional Learning Centres திட்டம்! (இலகுவான விளக்கங்களுடன் சுற்றுநிருபமும் இணைப்பு)

July 05, 2021

நிகழ்நிலை / தொலைக்கல்வி கல்வி நடவடிக்கைகளுக்காக வசதிகள் இல்லாத மாணவர்களுக்கு பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை தாபித்தல் தொடர்பாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையிலிருந்து முக்கிய விடயங்களை இங்கு தருகிறோம். 

(1) சுற்றுநிருபம் வெளியான திகதி? 
17-06-2021. 

(2) இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவது? 
05-07-2021 இலிருந்து...  (சுற்றறிக்கைக்கு மேலதிகமான தகவல்)

(3) யாருக்காக இந்த நிலையம்? 
இணையத்தள / நிகழ்நிலை செயற்பாடுகள் ஊடாக தொடர்பு கொள்ள முடியாத மாணவர்களுக்காக. 

(4) இத்திட்டத்தை கல்வி அமைச்சானது வேறு எந்த அமைச்சுகளுடன் இணைந்து திட்டமிட்டுள்ளது? 
1. கல்வி மறுசீரமைப்புகள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக் கல்வி மேம்பாட்டு ராஜாங்க அமைச்சு. 
2. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் ராஜாங்க அமைச்சு. 
3. டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு. 

(5) இந்த நிலையம் தொழிற்படுவது? 
வாரநாட்கள் ஐந்திலும் மு.ப. 7:30 - பி.ப. 3:30 வரை. 

(6) எந்த முறைமையை ஒட்டி கற்றல் நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும்? 
இ-தக்சலாவ (e-thakshalawa) உள்ளடக்க முறைமையை ஒட்டி. 

(7) நிலையத்தில் இருக்க வேண்டியது? 
1. குறைந்தது 10 கணனி/லேப்டாப்/டடெப். 
2. இணைய வசதி 

(8) இதனை நடைமுறைப்படுத்துவது வலய மட்ட குழுவின் மூலமாகும். அந்த குழுவின் அங்கத்தவர்கள்? 
1. வலய கல்விப் பணிப்பாளர் / மேலதிக வலயக் கல்விப் பணிப்பாளர் (அபிவிருத்தி) -(குழுவின் தலைவர்) 
2. பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர். 
3. பிரதேச செயலாளர் /அவரின் பிரதிநிதி. 
4. அதிபர் ஒருவர். 
5. ஆசிரிய ஆலோசகர் ஒருவர். 
6. வலய வன்பொருள் மற்றும் வலையமைப்பு தீர்வு பணி குழுவின் உறுப்பினர். 

(9) இது தொடர்பான கண்காணிப்பு வழிகாட்டல் என்பன மாகாண மட்ட குழு மூலமாக இடம்பெறும். அதன் உறுப்பினர்கள்? 
1. மாகாணக் கல்விப் பணிப்பாளர் / மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் (அபிவிருத்தி) - (குழுவின் தலைவர்) 
2. வலயக்கல்வி பணிமனைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக ஒரு வலயக் கல்விப் பணிப்பாளர். 
3. பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர். 
4. அதிபர் ஒருவர். 
5. ஆசிரிய ஆலோசகர் ஒருவர். 

(10) வலயமட்ட குழுவால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு? 
மாகாண மட்ட குழுவிலிருந்து பரிந்துரைகளை பெறல் வேண்டும். 

(11) மாகாண குழுவால் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு? 
கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (பாடசாலை விவகாரங்கள்) மற்றும் மேலதிக செயலாளர் (கல்வி பண்புத்தர விருத்தி) ஆலோசனை பிரகாரம் செயற்பட வேண்டும். 

(12) e-thakshalawa உள்ளடக்க முறையை நடைமுறைப்படுத்தும் போது பிரச்சினைகள் வந்தால்..? 
கல்வி மறுசீரமைப்பு திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக் கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் (தொலைக்கல்வி) உடன் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

(13) மத்திய நிலையத்திற்கு பொறுப்பாளர்
அதிபர். 

(14) பாடசாலை அல்லாத வேறு நிலையம் தேர்வு செய்யப்பட்டால் அதற்கு பொறுப்பாளர்? 
பொருத்தமான அதிபர் ஒருவரை வலயக்கல்வி பணிப்பாளர் நியமிக்க வேண்டும். 

(15) நிலையத்தை தெரிவு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை? 
1. இணையதள வசதி அல்லது அதை பெறக் கூடிய பிரதேசம். 
2. தனிநபர் இடைவெளியை பேணக்கூடிய இயலுமை. 
3. குறைந்தது 10 மாணவர்களுக்கான தளபாட வசதி. 

(16) எந்த முன்னுரிமை அடிப்படையில் நிலையத்தை தெரிவு செய்ய வேண்டும்? 
1. செயல்பாட்டு நிலையில் உள்ள கணினிகள் மற்றும் இணையதள வசதி உள்ள பாடசாலை. 
2. டெப் கணனி வழங்கப்படும் திட்டத்திற்குரிய பாடசாலை. 
3. மாகாண கணணி மத்திய நிலையம் / வலய கணனி வள மத்திய நிலையம். 
4. கணினி வசதிகள் கொண்ட தொழில் பயிற்சி மத்திய நிலையம். 
5. நெனசல மத்திய நிலையம். 
6. சமய வழிபாட்டு ஸ்தாபனம் / பிரிவெனாக்களை ஒட்டி மத்திய நிலையத்தை அமைக்க வசதி கொண்ட இடம் 
7. சனசமூக நிலையம். 

(17) தெரிவுசெய்யப்படும் நிலையத்திற்கு கணணி வசதிகள் இல்லாவிட்டால்? 
வேறு பாடசாலையிலிருந்து தற்காலிக அடிப்படையில் பெற்றுக் கொடுக்க வலயக்கல்விப் பணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

(18) நிலையத்தை நடத்தி செல்ல தேவையான குறைந்த அளவு பணிக்குழுவினர்? 
1. அதிபர் 
2. முற்பகலுக்கு ஒரு ஆசிரியர் ஒரு ஆசிரியை. பிற்பகலுக்கு ஒரு ஆசிரியர் ஒரு ஆசிரியை. (மொத்தம் 04 பேர்) 
3. பிரதேச செயலாளர் பணிமனை ஊடாக நியமிக்கப்படும் பட்டதாரி பயிலுனர் ஒருவர் (இவரை நியமிக்க வலயக்கல்விப் பணிப்பாளர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்) 

(19) நிலையத்திற்கான தூரம்? 
 மாணவர்கள் நடந்து செல்லக்கூடிய கிட்டிய தூரத்தில் இருத்தல் வேண்டும். 

(20) ஒரே தடவையில் அதிக மாணவர்கள் வருவதை தடுக்க? 
முறையான நேர அட்டவணையை தயாரித்து அதற்கமைய வரச் செய்ய வேண்டும். 


மேலும், 
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து இந்த நிலையத்தை நடாத்திச் செல்ல பொருத்தமானவாறு பெற்றோர்களின் அனுசரணையை பெறலாம். 


இது தொடர்பான சுற்றுநிருபத்தை சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.



Join our Telegram channel:

Like our FB page :
Online இல் கற்க முடியாத மாணவர்கள்: இன்று முதல் ஆரம்பமாகும் Regional Learning Centres திட்டம்! (இலகுவான விளக்கங்களுடன் சுற்றுநிருபமும் இணைப்பு) Online இல் கற்க முடியாத மாணவர்கள்: இன்று முதல் ஆரம்பமாகும் Regional Learning Centres திட்டம்! (இலகுவான விளக்கங்களுடன் சுற்றுநிருபமும் இணைப்பு) Reviewed by irumbuthirai on July 05, 2021 Rating: 5

02-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

July 05, 2021

02-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official Gazette released on 02-07-2021 (in three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 



கடந்த வார வர்த்தமானிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


Join our Telegram channel:

Like our FB page:

Join our WhatsApp groups.
02-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 02-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on July 05, 2021 Rating: 5
Powered by Blogger.