ஜோசப் ஸ்டாலின் ஐரோப்பிய சங்கத்திற்கு தெரிந்தவர். அவரின் கைதினால் ஏற்படும் சிக்கலை விவரித்த ரணில்
irumbuthirai
July 09, 2021
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதானது ஜிஎஸ்பி பிளஸ் (GSP+) வரிச் சலுகைக்கு தடையாக அமையலாம் என பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை விடுதலை செய்ததால் ஏற்பட்ட சாதக நிலைமை நேற்று நடைபெற்ற சம்பவத்தால் இல்லாமல் போகும் வாய்ப்பு உள்ளது.
ஜோசப் ஸ்டாலின் என்பவர் ஐரோப்பிய சங்கம் தெரிந்த ஒரு நபராவார். அவரின் கைது இந்த வரிச் சலுகைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இது தொடர்பில் நிதி அமைச்சும் தொழிற்சங்கங்களோடு கலந்துபேசி முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
ஜோசப் ஸ்டாலின் ஐரோப்பிய சங்கத்திற்கு தெரிந்தவர். அவரின் கைதினால் ஏற்படும் சிக்கலை விவரித்த ரணில்
Reviewed by irumbuthirai
on
July 09, 2021
Rating: