யாழ். பல்கலைக்கழக தெரிவுப் பரீட்சைக்கான (Selection Test) திகதிகள் அறிவிப்பு!
irumbuthirai
July 09, 2021
யாழ் பல்கலைக்கழகத்தில் 2020/21ஆம் கல்வி ஆண்டில் பயில்வதற்காக கலைமாணி மற்றும் உடற்கல்வி விஞ்ஞானமாணி ஆகிய கற்கை நெறிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தெரிவுப் பரீட்சைகளை நடத்துவதற்குரிய திகதிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் கலைமாணிக்குரிய தெரிவுப் பரீட்சை (Aptitude Test – Translation Studies) எதிர்வரும் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும், உடற்கல்வி விஞ்ஞானமாணிக்கான (Aptitude Test – Physical Education) தெரிவுப் பரீட்சை எதிர்வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கலைமாணி கற்கை நெறி தெரிவுப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 1,590 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 360 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியதற்கான வங்கிச் சிட்டையை அனுப்பவில்லை.
அத்துடன் உடற்கல்வி விஞ்ஞானமாணி கற்கை நெறி தெரிவுப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 417 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 49 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியற்கான வங்கிச் சிட்டையை அனுப்பவில்லை.
இதுவரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியவர்கள், தங்களின் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியமைக்கான வங்கிச் சிட்டையை மின்னஞ்சல் (E-Mail) மூலமாக அனுமதிகள் கிளைக்கு அனுப்பி வைக்குமாறும், கட்டணம் செலுத்தியமையை உறுதிப்படுத்தத் தவறுபவர்களுக்குப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அனுப்பப்படமாட்டாது எனவும் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் மற்றும் ஏனைய விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
யாழ். பல்கலைக்கழக தெரிவுப் பரீட்சைக்கான (Selection Test) திகதிகள் அறிவிப்பு!
Reviewed by irumbuthirai
on
July 09, 2021
Rating: