புலமை பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகள் நடைபெறும் தினங்களின் மாற்றம்

July 11, 2021

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தினங்களில் உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பன நடைபெறமாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் மேலும் ஆராய்ந்ததன் பின்னர் புதிய திகதிகள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
புலமை பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகள் நடைபெறும் தினங்களின் மாற்றம் புலமை பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகள் நடைபெறும் தினங்களின் மாற்றம் Reviewed by irumbuthirai on July 11, 2021 Rating: 5

Twitter, Google மற்றும் FB ற்கு எதிராக வழக்கு: ட்ரம்பின் அதிரடி!

July 10, 2021

அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பேச்சுரிமையை கட்டுப்படுத்துவதாய்க் கூறி Twitter, Facebook,Google ஆகிய தளங்கள் மீது, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழக்குத் தொடுத்திருப்பதாகக் கூறியுள்ளார். 
Google தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, Facebook நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் (Mark Zuckerberg), டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி 
ஜேக் டோர்சே (Jack Dorsey) ஆகியோர் மீது இந்த வழக்குகள் மயாமியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளன. 
குறித்த நிறுவனங்கள் நியாயமற்ற வகையில் தங்கள் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறும் மற்ற பல பயனீட்டாளர்களுக்காகவும் தாம் குரல் கொடுக்கவிருப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
Twitter, Google மற்றும் FB ற்கு எதிராக வழக்கு: ட்ரம்பின் அதிரடி! Twitter,  Google மற்றும் FB ற்கு எதிராக வழக்கு: ட்ரம்பின் அதிரடி! Reviewed by irumbuthirai on July 10, 2021 Rating: 5

அடுத்த வருடம் முதல் தரம்: 01 ற்கு அனுமதிக்கும் மாணவர் எண்ணிக்கையில் மாற்றம் (புதிய, பழைய சுற்றறிக்கைகள் இணைப்பு)

July 10, 2021

2022 முதல் தரம் 01ற்கு அனுமதிக்கப்படும் மாணவர் எண்ணிக்கையை 40 ஆக அதிகரித்து கல்வியமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 
13/2021 என்ற இலக்கம் கொண்ட 28-05-2021 திகதியிடப்பட்ட சுற்றறிக்கை மூலம் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர் எண்ணிக்கை: 
இந்த புதிய சுற்றறிக்கையின் படி நேர்முகப் பரீட்சையின் மூலம் 35 மாணவர்களும் யுத்த நடவடிக்கை கடமையினருக்கான சலுகையின் கீழ் 5 மாணவர்களும் ஆக மொத்தம் 40 மாணவர்களை இணைத்துக் கொள்ளப்படுவர். 
ஆனால் பழைய சுற்றறிக்கையின்படி மாணவர் எண்ணிக்கை 35 ஆக வரையறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பாடசாலைக்கான தூரத்தை கணிக்கும் முறை: 
விண்ணப்பதாரரின் வீட்டு வாசலிலிருந்து ஆரம்பப்பிரிவு காரியாலயத்திற்கு உள்ள வான்வழி தூரத்தை ஆரையாகக் கொண்டு வரையப்படும் வட்டத்திற்குள்ளே அமைந்துள்ள பாடசாலைகளுக்கு புள்ளிகள் குறைக்கப்படும். 
ஆரம்ப பிரிவானது பாடசாலையிலிருந்து புறம்பாக வேறு வளாகத்தில் நடத்தப்படுமாயின் அந்த ஆரம்ப பிரிவின் அலுவலகம் வரையே தூரம் பார்க்கப்பட வேண்டும். மாறாக பிரதான பாடசாலை அலுவலகத்தை பார்க்க முடியாது. 

புதிய சுற்றறிக்கையை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
பழைய சுற்றறிக்கையை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
அடுத்த வருடம் முதல் தரம்: 01 ற்கு அனுமதிக்கும் மாணவர் எண்ணிக்கையில் மாற்றம் (புதிய, பழைய சுற்றறிக்கைகள் இணைப்பு) அடுத்த வருடம் முதல் தரம்: 01 ற்கு அனுமதிக்கும் மாணவர் எண்ணிக்கையில் மாற்றம் (புதிய, பழைய சுற்றறிக்கைகள் இணைப்பு)  Reviewed by irumbuthirai on July 10, 2021 Rating: 5

திங்கள் முதல் Online கல்வி இடைநிறுத்தம்! ஆசிரியர் சங்கங்கள் அதிரடி தீர்மானம்! பாதெனிய கைது செய்யப்பட்டால் வைத்தியர்கள் சும்மா இருப்பார்களா?

July 09, 2021

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரும் நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொள்ளாமல் அவர்கள் பலவந்தமாக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 
எனவே இதனை கண்டித்து எதிர்வரும் திங்கட்கிழமை (12) முதல் சகலவிதமான இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்தும் விலக தீர்மானித்திருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் இன்று அறிவித்துள்ளன. 
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எனவே அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு முறையான தீர்வு வழங்கும் 
வரை திங்கட்கிழமை முதல் சகல விதமான இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்தும் விலக தீர்மானித்திருப்பதாக ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். 
இதேவேளை அரசாங்கத்தின் இந்த நியாயமற்ற நடவடிக்கைகளை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 
வைத்தியர் சங்கத்தின் தலைவர் அனுருந்த பாதெனிய இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தால் வைத்தியர்கள் சும்மா இருப்பார்களா என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றது.
திங்கள் முதல் Online கல்வி இடைநிறுத்தம்! ஆசிரியர் சங்கங்கள் அதிரடி தீர்மானம்! பாதெனிய கைது செய்யப்பட்டால் வைத்தியர்கள் சும்மா இருப்பார்களா? திங்கள் முதல் Online கல்வி இடைநிறுத்தம்! ஆசிரியர் சங்கங்கள் அதிரடி தீர்மானம்! பாதெனிய கைது செய்யப்பட்டால் வைத்தியர்கள் சும்மா இருப்பார்களா? Reviewed by irumbuthirai on July 09, 2021 Rating: 5

யாழ். பல்கலைக்கழக தெரிவுப் பரீட்சைக்கான (Selection Test) திகதிகள் அறிவிப்பு!

July 09, 2021

யாழ் பல்கலைக்கழகத்தில் 2020/21ஆம் கல்வி ஆண்டில் பயில்வதற்காக கலைமாணி மற்றும் உடற்கல்வி விஞ்ஞானமாணி ஆகிய கற்கை நெறிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தெரிவுப் பரீட்சைகளை நடத்துவதற்குரிய திகதிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
அந்தவகையில் கலைமாணிக்குரிய தெரிவுப் பரீட்சை (Aptitude Test – Translation Studies) எதிர்வரும் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும், உடற்கல்வி விஞ்ஞானமாணிக்கான (Aptitude Test – Physical Education) தெரிவுப் பரீட்சை எதிர்வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 
கலைமாணி கற்கை நெறி தெரிவுப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 1,590 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 360 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியதற்கான வங்கிச் சிட்டையை அனுப்பவில்லை. 
அத்துடன் உடற்கல்வி விஞ்ஞானமாணி கற்கை நெறி தெரிவுப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 417 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 49 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியற்கான வங்கிச் சிட்டையை அனுப்பவில்லை. 
இதுவரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியவர்கள், தங்களின் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியமைக்கான வங்கிச் சிட்டையை மின்னஞ்சல் (E-Mail) மூலமாக அனுமதிகள் கிளைக்கு அனுப்பி வைக்குமாறும், கட்டணம் செலுத்தியமையை உறுதிப்படுத்தத் தவறுபவர்களுக்குப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அனுப்பப்படமாட்டாது எனவும் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் மற்றும் ஏனைய விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
யாழ். பல்கலைக்கழக தெரிவுப் பரீட்சைக்கான (Selection Test) திகதிகள் அறிவிப்பு! யாழ். பல்கலைக்கழக தெரிவுப் பரீட்சைக்கான (Selection Test) திகதிகள் அறிவிப்பு! Reviewed by irumbuthirai on July 09, 2021 Rating: 5

ஜோசப் ஸ்டாலின் ஐரோப்பிய சங்கத்திற்கு தெரிந்தவர். அவரின் கைதினால் ஏற்படும் சிக்கலை விவரித்த ரணில்

July 09, 2021

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதானது ஜிஎஸ்பி பிளஸ் (GSP+) வரிச் சலுகைக்கு தடையாக அமையலாம் என பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 
முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை விடுதலை செய்ததால் ஏற்பட்ட சாதக நிலைமை நேற்று நடைபெற்ற சம்பவத்தால் இல்லாமல் போகும் வாய்ப்பு உள்ளது. ஜோசப் ஸ்டாலின் என்பவர் ஐரோப்பிய சங்கம் தெரிந்த ஒரு நபராவார். அவரின் கைது இந்த வரிச் சலுகைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இது தொடர்பில் நிதி அமைச்சும் தொழிற்சங்கங்களோடு கலந்துபேசி முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
ஜோசப் ஸ்டாலின் ஐரோப்பிய சங்கத்திற்கு தெரிந்தவர். அவரின் கைதினால் ஏற்படும் சிக்கலை விவரித்த ரணில் ஜோசப் ஸ்டாலின் ஐரோப்பிய சங்கத்திற்கு தெரிந்தவர். அவரின் கைதினால் ஏற்படும் சிக்கலை விவரித்த ரணில் Reviewed by irumbuthirai on July 09, 2021 Rating: 5

உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

July 09, 2021

2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதியும் உயர்தர பரீட்சை ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on July 09, 2021 Rating: 5

Vacancies: The Open University of Sri Lanka.

July 09, 2021

Vacancies: The Open University of Sri Lanka. 
Database Administrator.  
Senior Software Engineer.  
Software Engineer. 
Associate Software Engineer. 
Quality Assurance Engineer.  
Business Analyst. 
Developer Associate. 
Closing date: 19-07-2021. 
See the details below.
Source: Sunday Observer.


Join our WhatsApp groups:

Join our Telegram channel:

Like our FB page:
Vacancies: The Open University of Sri Lanka. Vacancies: The Open University of Sri Lanka. Reviewed by irumbuthirai on July 09, 2021 Rating: 5

21 Vacancies (State Ministry of Batik, Handloom Textiles & Local Apparel Production)

July 09, 2021

21 Vacancies in the State Ministry of Batik, Handloom Textiles & Local Apparel Production. 
Closing date: 19-07-2021. 
See the details below.
Source: Sunday Observer.


Join our Telegram channel:

Like our FB page:

Join our WhatsApp groups.
21 Vacancies (State Ministry of Batik, Handloom Textiles & Local Apparel Production) 21 Vacancies (State Ministry of Batik, Handloom Textiles & Local Apparel Production) Reviewed by irumbuthirai on July 09, 2021 Rating: 5

Vacancies: Sri Lanka Telecom

July 08, 2021
Vacancies: Sri Lanka Telecom Vacancies: Sri Lanka Telecom Reviewed by irumbuthirai on July 08, 2021 Rating: 5

எல்லா வகையிலும் கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்கள்: உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா? அமைச்சர் வெளியிட்ட தகவல்

July 08, 2021

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன இன்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிசிடம் பாராளுமன்றத்தில் சில கேள்விகளை முன்வைத்தார். அதாவது, 
இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் தமது சாதாரண தரப் பரீட்சை எழுதியதில் இருந்து பல்வேறு சிரமங்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டவர்கள். 
2018 இல் சா.தர பரீட்சை எழுதிய இவர்களுக்கு 2019இல் 
இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் காரணமாக உரிய நேரத்துக்கு உயர் தரத்தை ஆரம்பிக்க முடியவில்லை. 
இவர்களின் உயர்தரம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை கொரோனா பிரச்சினை காரணமாக கல்வி நடவடிக்கைகள் முழுமையாக பாதிப்படைந்தன. 
எனவே இவர்களின் பரீட்சையை பிற்போட மாட்டீர்களா? என்ற கோரிக்கை எம்மிடம் முன்வைக்கப்படுகின்றது. அந்த கோரிக்கை உங்களிடமும் முன்வைக்கப்பட்டிருக்கலாம். எனவே இவர்களது பரீட்சை பிற்போடப்படுமா? என்ற கேள்வியை முன்வைத்தார். 
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் G.L. பீரிஸ் அவர்கள், 
மாணவர்களுக்கு அநீதி இழைக்காத வகையில் பரீட்சையை பிற்போடுவதா என்ற தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
எல்லா வகையிலும் கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்கள்: உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா? அமைச்சர் வெளியிட்ட தகவல் எல்லா வகையிலும் கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்கள்: உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா? அமைச்சர் வெளியிட்ட தகவல் Reviewed by irumbuthirai on July 08, 2021 Rating: 5

முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி

July 08, 2021

நாட்டிலுள்ள சகல முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச்சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனையின் பேரில் அடுத்த வாரம் முதல் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 
இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை (12) முதல் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி முன்பள்ளி ஆசிரியர்களுக்கும்  தடுப்பூசி  Reviewed by irumbuthirai on July 08, 2021 Rating: 5

Application for 06 External Degrees (Sri Jayawardenepura University) / 06 வகையான வெளிவாரி பட்டப்படிப்பிற்கான விண்ணப்பம்

July 08, 2021

Applications are called for the following external degree programs offered by University of Sri Jayawardenepura.
(1) BA (General) 
(2) B.Sc in Environmental & Development Studies. 
(3) BA in English. 
(4) B. Com 
(5) B. Sc in Public Management. 
(6) B. Sc in Business Studies. 

Closing date: 31-07-2021. 
Applications On: http://external.sjp.ac.lk/
See the details below.
Source: Sunday Observer.


Join our Telegram channel:

Like our FB page:

Join our WhatsApp groups:
Application for 06 External Degrees (Sri Jayawardenepura University) / 06 வகையான வெளிவாரி பட்டப்படிப்பிற்கான விண்ணப்பம் Application for 06 External Degrees (Sri Jayawardenepura University) / 06 வகையான வெளிவாரி பட்டப்படிப்பிற்கான விண்ணப்பம் Reviewed by irumbuthirai on July 08, 2021 Rating: 5
Powered by Blogger.