கொரோனா வந்தவர்கள் எப்போது தடுப்பூசி போட வேண்டும்?
irumbuthirai
July 12, 2021
கொரோனா வந்தவர்கள் எப்போது தடுப்பூசி போட வேண்டும் என்ற விடயத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த் ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வந்தவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் Covid நோய் நிலமைகள் வந்தாலோ அல்லது அதற்குரிய அறிகுறிகள் தென்படும் பட்சத்திலோ உடம்பின் நோயெதிர்ப்பு நிலைமைகளில் மாற்றம் ஏற்படுகிறது. எனவே இந்த நேரத்தில் தடுப்பூசி போடுவது அவ்வளவு பலனளிக்காது. அந்த தடுப்பூசியை வீணாக்குவது போன்ற செயலாகும்.
எனவே இவ்வாறு கொரோனா நோய் வந்தவர்கள் அவர்கள் பூரண சுகம்
அடைந்து 14 நாட்களுக்கு பின்னரே தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வந்தவர்கள் எப்போது தடுப்பூசி போட வேண்டும்?
Reviewed by irumbuthirai
on
July 12, 2021
Rating: