கொரோனாவுக்காக வெவ்வேறு தடுப்பூசிகள்: WHO வின் எச்சரிக்கை:
irumbuthirai
July 13, 2021
உலகின் பல நாடுகளில் கொரோனாவுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் நிலையில் முதலாவது டோசிற்கு ஒரு தடுப்பூசியும் இரண்டாவது டோசிற்கு வேறொரு தடுப்பூசியும் பயன்படுத்துவதில் சில நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
தாய்லாந்து போன்ற சில நாடுகள் இவ்வாறு வெவ்வேறு தடுப்பூசிகளை பாவித்து நல்ல பலன்கள் அடைந்திருப்பதாக தெரிவிக்கின்றன.
ஆனால் இது தொடர்பில் கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்,
இவ்வாறு வெவ்வேறு தடுப்பூசிகளை பாவிப்பதற்கு பரிந்துரை செய்வது ஆபத்தை ஏற்படுத்தும். இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இது தொடர்பில் முறையான ஆராய்ச்சிகளும் அது தொடர்பிலான பெறுபேறுகள் அவசியம்.
முறையான ஆய்வுகள் இல்லாமல் அதனை பரிந்துரை செய்ய முடியாது. எனவே தற்போதைய நிலையில் வெவ்வேறு தடுப்பூசிகளை பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
கொரோனாவுக்காக வெவ்வேறு தடுப்பூசிகள்: WHO வின் எச்சரிக்கை:
Reviewed by irumbuthirai
on
July 13, 2021
Rating:
