ஆசிரியர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி எப்போது?

July 14, 2021

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு கொண்டிருக்கும் தடுப்பூசி வேலைத்திட்டத்தை 10 நாட்களுக்குள் வழங்கி நிறைவு செய்யக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ், அவர்களுக்குரிய இரண்டாவது டோஸ் தடுப்பூசி 4 வாரங்களின் பின்னர் மீண்டும் வழங்கப்படும் என தெரிவித்தார். 
நேற்று (13) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி எப்போது? ஆசிரியர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி எப்போது? Reviewed by irumbuthirai on July 14, 2021 Rating: 5

Interview List - Mid Wife Training / குடும்ப நல உத்தியோகத்தர் பயிற்சிக்காக நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டோர்

July 14, 2021

துணை மருத்துவ சேவையின் குடும்பநல உத்தியோகத்தர் பதவிக்கான பயிற்சிக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை - 2021 

மேற்படி நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டவர்களின் பெயர் விபரம், நேர்முகப் பரீட்சை நடைபெறும் இடம், திகதி, நேரம் மற்றும் நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதம் போன்றவற்றை கீழே உள்ள லிங்கில் சென்று பார்வையிடுக.

Interview List - Mid Wife Training / குடும்ப நல உத்தியோகத்தர் பயிற்சிக்காக நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டோர் Interview List - Mid Wife Training / குடும்ப நல உத்தியோகத்தர் பயிற்சிக்காக நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டோர்  Reviewed by irumbuthirai on July 14, 2021 Rating: 5

அதிகரிக்கப்பட்டது ஓய்வூதிய வயது (தாதியர்கள் மற்றும் பல் மருத்துவர்கள்): விசேட வர்த்தமானி இணைப்பு!

July 14, 2021

08-07-2021 அன்று வெளியான விசேட வர்த்தமானியில் தாதியர்கள் மற்றும் பல் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையும் நீடிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் குறித்த வர்த்தமானியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது... 
"காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் பிரிவு 2 மற்றும் 17இல் குறிப்பிடப்பட்டுள்ள மேலதிகமாக சேர்க்கப்பட்ட "அரச சேவையில் பணியாற்றும் அனைத்து தரத்திலுமுள்ள மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் கட்டாய வயதெல்லை 63 வயது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" எனும் பகுதி நீக்கப்பட்டு, 
"அரசாங்க ஓய்வூதியத்திற்கு உரிமையுள்ள, பின்வரும் பதவிகளில் பணிபுரியும் அலுவலர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை பின்வருமாறு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. 
மருத்துவர்கள் - 63 வயது / நடைமுறைக்கு வரும் திகதி 2021-04-05. 

பல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் - வயது 63 / நடைமுறைக்கு வரும் திகதி 2021-04-05. 

தாதியர்கள் - வயது 63 / நடைமுறைக்கு வரும் திகதி 2021-06-14. 
என்று திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியான அதிவிசேட வர்த்தமானியை முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
அதிகரிக்கப்பட்டது ஓய்வூதிய வயது (தாதியர்கள் மற்றும் பல் மருத்துவர்கள்): விசேட வர்த்தமானி இணைப்பு! அதிகரிக்கப்பட்டது ஓய்வூதிய வயது (தாதியர்கள் மற்றும் பல் மருத்துவர்கள்): விசேட வர்த்தமானி இணைப்பு!  Reviewed by irumbuthirai on July 14, 2021 Rating: 5

12-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

July 14, 2021

12-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில்,
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


இதற்கு முந்தைய அமைச்சரவை கூட்டங்களுக்கு செல்ல...



Join our WhatsApp groups:

Join our Telegram channel:

Like our FB page:
12-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 12-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on July 14, 2021 Rating: 5

மாணவர்களுக்கு தடுப்பூசி போடலாமா? ஜனாதிபதி வழங்கிய உத்தரவு!

July 13, 2021

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 
தற்போது உலகளாவிய ரீதியில் மாணவர்களுக்கு சினோவெக் (Sinovac) மற்றும் பைஸர் என் பயோடெக் (Pfizer-BioNTech) போன்ற தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் 12 - 18 வயது வரையான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான சாத்தியப்பாடு பற்றி ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு தடுப்பூசி போடலாமா? ஜனாதிபதி வழங்கிய உத்தரவு! மாணவர்களுக்கு தடுப்பூசி போடலாமா? ஜனாதிபதி வழங்கிய உத்தரவு! Reviewed by irumbuthirai on July 13, 2021 Rating: 5

பரீட்சைகளை ஒக்டோபரில் நடத்துவதா? இல்லையா? - கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

July 13, 2021

இவ்வருடத்திற்குரிய உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடத்துவதா? இல்லையா? என்ற தீர்மானம் அடுத்த வாரம் எடுக்கப்பட இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற தரப்பினரோடு கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பரீட்சைகளை ஒக்டோபரில் நடத்துவதா? இல்லையா? - கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல் பரீட்சைகளை ஒக்டோபரில் நடத்துவதா? இல்லையா? - கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்  Reviewed by irumbuthirai on July 13, 2021 Rating: 5

Online கல்வி: சிகிச்சை பெறும் மாணவர்கள் அதிகரிப்பு!

July 13, 2021

இணையவழிக் கல்வி நடவடிக்கைகளின் காரணமாக மாணவர்களுக்கு ஏற்படும் கண் தொடர்பான பிரச்சனை மற்றும் மன உளைச்சல் என்பன அதிகரித்து வருவதாக மாத்தறை பொது வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை நிபுணர் பிரியங்க இத்தவல தெரிவித்தார். 
அண்மைக் காலமாக கண் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Online கல்வி: சிகிச்சை பெறும் மாணவர்கள் அதிகரிப்பு! Online கல்வி: சிகிச்சை பெறும் மாணவர்கள் அதிகரிப்பு! Reviewed by irumbuthirai on July 13, 2021 Rating: 5

கொரோனாவுக்காக வெவ்வேறு தடுப்பூசிகள்: WHO வின் எச்சரிக்கை:

July 13, 2021

உலகின் பல நாடுகளில் கொரோனாவுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் நிலையில் முதலாவது டோசிற்கு ஒரு தடுப்பூசியும் இரண்டாவது டோசிற்கு வேறொரு தடுப்பூசியும் பயன்படுத்துவதில் சில நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. 
தாய்லாந்து போன்ற சில நாடுகள் இவ்வாறு வெவ்வேறு தடுப்பூசிகளை பாவித்து நல்ல பலன்கள் அடைந்திருப்பதாக தெரிவிக்கின்றன. 
ஆனால் இது தொடர்பில் கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், 
இவ்வாறு வெவ்வேறு தடுப்பூசிகளை பாவிப்பதற்கு பரிந்துரை செய்வது ஆபத்தை ஏற்படுத்தும். இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இது தொடர்பில் முறையான ஆராய்ச்சிகளும் அது தொடர்பிலான பெறுபேறுகள் அவசியம். 
முறையான ஆய்வுகள் இல்லாமல் அதனை பரிந்துரை செய்ய முடியாது. எனவே தற்போதைய நிலையில் வெவ்வேறு தடுப்பூசிகளை பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
கொரோனாவுக்காக வெவ்வேறு தடுப்பூசிகள்: WHO வின் எச்சரிக்கை: கொரோனாவுக்காக வெவ்வேறு தடுப்பூசிகள்: WHO வின் எச்சரிக்கை: Reviewed by irumbuthirai on July 13, 2021 Rating: 5

ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு சேனல்: பிரிவெனாவுக்கு இரண்டு சேனல்: - கெஹெலிய ரம்புக்வெல்ல

July 13, 2021

வெகுஜன ஊடக அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து செயல்படுத்தும் திட்டத்தின் கீழ், இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையில் கல்விச் சேவைக்கென 20 தனித்தனி அலைவரிசைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 
நேற்று முன்தினம் (11) குண்டசாலை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 
தரம் 1 - 13 வரை 13 சனல்களும் பிரிவெனா கல்விக்காக 02 தனித்தனி சனல்களும் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும். உலகளாவிய இந்த தொற்று நோய் இன்னும் இரண்டு வருடங்களுக்கு தொடர வாய்ப்புள்ளது. எனவே 
குழந்தைகளின் கல்வியை சீர்குலைக்க அனுமதிக்காமல் அதில் உச்சக்கட்ட அவதானம் செலுத்துவது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு. கல்வியின் சரிவு என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பின் சரிவு எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு சேனல்: பிரிவெனாவுக்கு இரண்டு சேனல்: - கெஹெலிய ரம்புக்வெல்ல ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு சேனல்: பிரிவெனாவுக்கு இரண்டு சேனல்: - கெஹெலிய ரம்புக்வெல்ல   Reviewed by irumbuthirai on July 13, 2021 Rating: 5

Vacancy @ Lanka Sathosa Ltd.

July 13, 2021

Vacancy @ Lanka Sathosa Ltd. 
Closing date: 14 days from 04-07-2021. 
See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...



Join our Telegram channel:

Like our FB page:

Join our WhatsApp groups:
Vacancy @ Lanka Sathosa Ltd. Vacancy @ Lanka Sathosa Ltd. Reviewed by irumbuthirai on July 13, 2021 Rating: 5

Vacancy @ National Medicine Regulatory Authority

July 13, 2021

Vacancy @ National Medicine Regulatory Authority. 
Closing date: 17-07-2021. 
See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...



Join our Telegram channel :

Like our FB page:

Join our WhatsApp groups:
Vacancy @ National Medicine Regulatory Authority Vacancy @ National Medicine Regulatory Authority Reviewed by irumbuthirai on July 13, 2021 Rating: 5

Vacancy @ Regional Development Bank

July 13, 2021

Vacancy @ Regional Development Bank. 

Regional development bank, as the premier state owned development bank in Sri Lanka with a network of 276 branches islandwide and with over 3000 manpower strength ... 

Post: Media Developer. 
Closing date: 18-07-2021. 

See the details below.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...


Join our Telegram channel:

Like our FB page:

Join our WhatsApp groups:
Vacancy @ Regional Development Bank Vacancy @ Regional Development Bank Reviewed by irumbuthirai on July 13, 2021 Rating: 5

Vacancies: Industrial Development Board (Ministry of Industries)

July 13, 2021

Vacancies: Industrial Development Board (Ministry of Industries) 
Closing date: 19-07-2021. 
See the details below.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட....


Join our Telegram channel:

Like our FB page:

Join our WhatsApp groups:
Vacancies: Industrial Development Board (Ministry of Industries) Vacancies: Industrial Development Board (Ministry of Industries) Reviewed by irumbuthirai on July 13, 2021 Rating: 5
Powered by Blogger.