தரம்: 01 ற்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்படுமா?
irumbuthirai
July 14, 2021
பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நேற்று (13) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸிடம், அடுத்த வருடத்திற்காக தரம் 1 ற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்படுமா என்று கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர்,
எல்லா கேள்விகளுக்கும் உடனடி பதிலை வழங்க விரும்பவில்லை. அனைத்து துறையைச் சேர்ந்தவர்களிடத்தில் பேச்சு நடத்திய பின்னரே தீர்மானம் அறிவிக்கப்படும். கல்வி அமைச்சர் என்ற வகையில் அடுத்தவாரத்தில் நான் தீர்மானத்தை அறிவிக்கவுள்ளேன். திகதி நீடிக்கப்பட வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பாகும் என்று தெரிவித்தார்.
தரம்: 01 ற்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்படுமா?
Reviewed by irumbuthirai
on
July 14, 2021
Rating: