விஜய்க்கு அபராதம் விதித்த நீதிமன்றம்: உண்மையான கதாநாயகர்களாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்:
irumbuthirai
July 14, 2021
புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர் விஜய்க்கு 1 இலட்சம் ரூபா அபராதத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) காருக்கு
நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று(13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம், நடிகர் விஜய்க்கு ரூபா: 1 இலட்சம் அபராதமும் விதித்தது.
சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் இவ்வாறு வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர்கள் உண்மையான கதாநாயகர்களாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை குறித்த Rolls Royce காரின் வகைககள் இந்திய மதிப்பில் 7 கோடி ரூபா முதல் 11 கோடி ரூபா வரை விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு அபராதம் விதித்த நீதிமன்றம்: உண்மையான கதாநாயகர்களாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்:
Reviewed by irumbuthirai
on
July 14, 2021
Rating: