தொழிற்சங்கங்களை சந்திப்பது பற்றி கல்வி அமைச்சரின் அறிவிப்பு:
irumbuthirai
July 14, 2021
ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றதா? என்று நேற்று (13) பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கல்வி அமைச்சரிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ்,
ஓரளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. முழுமையாக வீழ்ச்சியடையவில்லை. இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இறுதியில் மாணவர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். சம்பள பிரச்சினை இன்று நேற்று ஆரம்பமானதல்ல. நல்லாட்சியின் காலத்திலும் இது காணப்பட்டது. ஆனால் தீர்க்கப்படவில்லை. அதுபற்றி தொடர்ந்தும் பேச்சு நடத்தி அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்வதற்கும் வழிகள் உள்ளன. வருகின்ற வெள்ளிக்கிழமை
தொழிற்சங்கங்களை சந்திக்கவுள்ளேன். பேச்சு நடத்தியே தீர்க்க எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.
தொழிற்சங்கங்களை சந்திப்பது பற்றி கல்வி அமைச்சரின் அறிவிப்பு:
Reviewed by irumbuthirai
on
July 14, 2021
Rating: