தெஹிவலை மிருகக்காட்சிசாலை: மேலும் சில விலங்குகள் கொரோனாவால் பாதிப்பு!

July 18, 2021

தெஹிவலை மிருகக்காட்சிசாலையில் இரு ஒரங்குட்டான் குரங்குகள் மற்றும் இரு சிம்பன்சி குரங்குகள் என நான்கு விலங்குகளுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெஹிவலை மிருகக்காட்சிசாலை: மேலும் சில விலங்குகள் கொரோனாவால் பாதிப்பு! தெஹிவலை மிருகக்காட்சிசாலை: மேலும் சில விலங்குகள் கொரோனாவால் பாதிப்பு! Reviewed by irumbuthirai on July 18, 2021 Rating: 5

Vacancies - ITN / அரச தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் பதவி வெற்றிடங்கள்

July 18, 2021

Vacancies: ITN / அரச தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் பதவி வெற்றிடங்கள்.

அரச ஊடக நிறுவனங்களில் ஒன்றான வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி அலைவரிசைக்குச் (Independent Television Network Ltd) சொந்தமான தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் சில பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
Vasantham TV, Vasantham FM அலைவரிசைக்கான சந்தைப்படுத்தல் முகாமையாளர் பதவி உட்பட வேறு அலைவரிசைக்கான பதவிகளும் காணப்படுகின்றன. 

விண்ணப்ப முடிவு திகதி: 28-07-2021.

முழுமையான விபரங்களை கீழே காணலாம்...
Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancies - ITN / அரச தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் பதவி வெற்றிடங்கள் Vacancies - ITN / அரச தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் பதவி வெற்றிடங்கள் Reviewed by irumbuthirai on July 18, 2021 Rating: 5

Vacancies (State Printing Corporation / அரச அச்சக கூட்டுத்தாபனம்)

July 18, 2021

Vacancies (State Printing Corporation / அரச அச்சக கூட்டுத்தாபனம்) 
Closing date: 26-07-2021. 
See the details below.
Source: Sunday Observer.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancies (State Printing Corporation / அரச அச்சக கூட்டுத்தாபனம்) Vacancies (State Printing Corporation / அரச அச்சக கூட்டுத்தாபனம்) Reviewed by irumbuthirai on July 18, 2021 Rating: 5

Vacancies (National Water Supply & Drainage Board)

July 18, 2021

Vacancies (National Water Supply & Drainage Board) 
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் பதவி வெற்றிடங்கள். 
Closing date: 26-07-2021.
Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட ....
Vacancies (National Water Supply & Drainage Board) Vacancies (National Water Supply & Drainage Board) Reviewed by irumbuthirai on July 18, 2021 Rating: 5

முக்கிய பதவிக்கு நியமிக்கப்படும் துமிந்த சில்வா?

July 17, 2021

துமிந்த சில்வாவை தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவராக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய பதவிக்கு நியமிக்கப்படும் துமிந்த சில்வா? முக்கிய பதவிக்கு நியமிக்கப்படும் துமிந்த சில்வா? Reviewed by irumbuthirai on July 17, 2021 Rating: 5

16-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

July 17, 2021

16-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official Gazette released on 16-07-2021 (in three languages)
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


இதற்கு முன்னர் வந்த வர்த்தமானிகளை பார்வையிட இந்த லிங்கை கிளிக் செய்க:
16-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 16-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on July 17, 2021 Rating: 5

விரைவில் ரணில் - சஜித் சந்திப்பு:

July 17, 2021

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவிற்குமிடையில் விரைவில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். 
தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
இதற்கான ஏற்பாடுகளை 
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
இந்த சந்திப்பு தொடர்பான செய்திகள் வெளியானவுடன் அரசியல் வட்டாரங்களில் பல வகையான கருத்துக்களும் பல எதிர்பார்ப்புகளும் நிலவி வருகின்றன.
விரைவில் ரணில் - சஜித் சந்திப்பு: விரைவில் ரணில் - சஜித் சந்திப்பு: Reviewed by irumbuthirai on July 17, 2021 Rating: 5

ஜோசப் ஸ்டாலின் உட்பட சகலரும் விடுவிப்பு: நடந்தது இதுதான்!

July 17, 2021

முல்லைத்தீவு கோப்பாப்புலவு வான்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேரும் நேற்று (16) மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர். 
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 8ஆம் திகதி போராட்டம் நடத்தியதன் காரணமாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். 
இதனைத் தொடர்ந்து அதிபர் ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக சேர்ந்து இணைய வழி கற்பித்தல் புறக்கணிப்பு உட்பட 
பல்வேறு போராட்டங்களையும் பல இடங்களில் செய்து வந்தனர். இதனைத் தொடர்ந்து 8 நாட்களின் பின்னர் அவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். 
இதேவேளை கடந்த 7ஆம் திகதி பொறியியல் கூட்டுத்தாபனம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பின்னர் பள்ளேகள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ உட்பட 6 பேரும் 
நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை இவ்வாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து நீதிமன்றம் பிணை வழங்க இருந்த நிலையிலும் அவர்கள் போலீசாரால் பலவந்தமாக சட்டத்திற்கு முரணான விதத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என தெரிவித்து அவர்கள் அனைவருக்கும் ஆட்கொணர்வு மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஜோசப் ஸ்டாலின் உட்பட சகலரும் விடுவிப்பு: நடந்தது இதுதான்! ஜோசப் ஸ்டாலின் உட்பட சகலரும் விடுவிப்பு: நடந்தது இதுதான்! Reviewed by irumbuthirai on July 17, 2021 Rating: 5

18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களிற்கு இராணுவ முகாம்களில் பயிற்சி:

July 16, 2021

சமூகத்தில் ஒழுக்கத்தை பேணுவதற்கு 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களிற்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவ பயிற்சியை வழங்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 
இவ்வாறு பயிற்சி வழங்கப்படுவது இளைஞர்களை படைவீரர்களாக்கும் நடவடிக்கையில்லை. சமூகத்தில் ஒழுக்கத்தை பேணுவதற்கு அது உதவும். சந்தேகம் அல்லது 
அச்சமின்றி வாழவேண்டுமென்றால் சமூகத்தில் மோசடிக்காரர்கள் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் இல்லாத நிலையேற்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களிற்கு இராணுவப் பயிற்சி தொடர்பான யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைத்த வேளை தன்னை கடுமையாக விமர்சித்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களிற்கு இராணுவ முகாம்களில் பயிற்சி: 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களிற்கு இராணுவ முகாம்களில் பயிற்சி: Reviewed by irumbuthirai on July 16, 2021 Rating: 5

இலங்கையின் பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி: காரணம் இதுதான்!

July 16, 2021

வருடம் ஒன்றிற்கு 350,000 குழந்தை பிறப்புக்கள் இலங்கையில் பதிவாகும். ஆனால் தற்போது அது பெருமளவில் குறைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். 
கொவிட் தொற்று பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதன் காரணமாக திருமண வைபவங்கள் நடக்கவில்லை. இதன் காரணமாகவே பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி: காரணம் இதுதான்! இலங்கையின் பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி: காரணம் இதுதான்! Reviewed by irumbuthirai on July 16, 2021 Rating: 5

ஆரம்பமானது பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டம்: முதலாவது பல்கலைக்கழகம் கேகாலையில்:

July 16, 2021

தொழில் சந்தையை இலக்காகக் கொண்ட திறமையான பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கத்துடன், நாட்டின் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், பெருநகரப் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும். 
இதன் முதலாவது பல்கலைக்கழகம், கேகாலை மாவட்டத்தின் பின்னவல பகுதியை மையமாகக் கொண்டு அமைக்கப்படவுள்ளது. அதற்கான பணிகளை 
அடுத்த சில வாரங்களில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. 
இந்த பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டத்தை ஓர் எண்ணக்கருவாக அறிமுகப்படுத்தும் வகையில், அதற்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் (www.cu.ac.lk), “2021 - உலக இளைஞர் திறன் தினம்” கொண்டாடப்படும் திமான ஜுலை 15 (நேற்று) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யினால், ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பமானது பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டம்: முதலாவது பல்கலைக்கழகம் கேகாலையில்: ஆரம்பமானது பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டம்: முதலாவது பல்கலைக்கழகம் கேகாலையில்: Reviewed by irumbuthirai on July 16, 2021 Rating: 5

அனுமதி மறுப்பு: விமானப்படையிடம் பொருட்களைக் கையளித்த ஆசிரியர் சங்கம்!

July 16, 2021

இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் பிரியந்த பெர்ணான்டோ தலைமையிலான குழுவினர் நேற்று(15) முல்லைத்தீவு - கேப்பாப்புலவு, விமானப்படைத் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்காக உலர் உணவுப் பொருட்களை வழங்க சென்றுள்ளனர். 
ஆனால் விமானப்படையினர் அவர்களைப் பார்வையிட அனுமதித்திருக்கவில்லை. பின்னர் உலர் உணவுப் பொருட்களை விமானப் படையினர் 
பரிசோதித்து பெற்றுக்கொண்டனர். மேலும் உணவுப்பொருட்களை வழங்கிய ஆசிரியர் சங்கத் தலைவர் தலைமையிலான குழுவினரின் விபரங்களும் விமானப் படையினரால் பெற்றுக்கொள்ளப்பட்டது. 
இதுமாத்திரமன்றி தனிமைப் படுத்தப்பட்டவர்களின் குடும்பத்தவர்களால், அவர்களின் வீட்டில் செய்யப்பட்ட சமைத்த உணவுகளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஏற்க மறுத்ததுடன், சுகாதார வழிமுறைகளுக்குட்பட்ட உணவுகளை மாத்திரமே வழங்க அனுமதிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனுமதி மறுப்பு: விமானப்படையிடம் பொருட்களைக் கையளித்த ஆசிரியர் சங்கம்! அனுமதி மறுப்பு: விமானப்படையிடம் பொருட்களைக் கையளித்த ஆசிரியர் சங்கம்! Reviewed by irumbuthirai on July 16, 2021 Rating: 5

முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா!

July 16, 2021

2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் முதன்முதல் கண்டறியப்பட்டது. பின்னர் மெல்லமெல்ல ஒவ்வொரு நாடாக கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. 
இந்நிலையில் வுஹான் மாநிலத்தில் 3ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த இந்திய கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த மாணவி விடுமுறைக்காக நாடு திரும்பினார். அப்போது அவரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. 
இதன்மூலம் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 
முதன் நபராக கண்டறியப்பட்டார். பின்னர் 03 வார சிகிச்சைக்குப்பின் குணமடைந்து வீடு திரும்பினார். 
இந்நிலையில் அந்த மாணவி படிப்பு விடயமாக டெல்லிக்கு செல்ல தயாராகியுள்ளார். இதனால் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது அன்டிஜென் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. ஆனால் PCR சோதனையில் பாசிட்டிவ் என வந்துள்ளது. இதன் காரணமாக ஒன்றரை வருடங்களுக்குப்பின் மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அவருக்கு அறிகுறி ஏதும் இல்லை. அந்த மாணவி தற்போது அவரது வீட்டில் நலமாக உள்ளார் எனவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா! முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா! Reviewed by irumbuthirai on July 16, 2021 Rating: 5
Powered by Blogger.