இதுவரை தடுப்பூசி போடாத அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவித்தல்

July 22, 2021

இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. 
அதாவது இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் எந்த மாகாணத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும் 
தாம் பணியாற்றும் பாடசாலை அமைந்துள்ள வலயக்கல்வி காரியாலயத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுவரை தடுப்பூசி போடாத அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவித்தல் இதுவரை தடுப்பூசி போடாத அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவித்தல் Reviewed by irumbuthirai on July 22, 2021 Rating: 5

சினோபார்ம் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி

July 21, 2021

சினோபார்ம் (Sinopharm) கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுள் 95% ஆனவர்களின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சியடைந்துள்ளமை பரிசோதனை ஊடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துவப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பல்கலைகழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட் பரிசோதனையில் டெல்டா மற்றும் பீடா வைரஸில் இருந்து பூரண பாதுகாப்பை இந்த தடுப்பூசியை வழங்குவதாகவும் தெரியவந்துள்ளது என்றார்.
சினோபார்ம் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி சினோபார்ம் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி Reviewed by irumbuthirai on July 21, 2021 Rating: 5

Vacancy (National Research Council of Sri Lanka)

July 21, 2021


Vacancy (National Research Council of Sri Lanka) 
Closing date: 27-07-2021. 
See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancy (National Research Council of Sri Lanka) Vacancy (National Research Council of Sri Lanka) Reviewed by irumbuthirai on July 21, 2021 Rating: 5

Online கல்வி: மாணவன் தற்கொலை!

July 20, 2021

Online கல்விக்காக தொலைபேசி வசதி இல்லாததன் காரணமாக மாணவன் ஒருவன் தற்கொலை செய்த சம்பவம் ஒன்று குருநாகல் வாரியபொல பகுதியில் பதிவாகியுள்ளது. 
தரம் 10 இல் படிக்கும் குறித்த மாணவன் தனது வீட்டிலுள்ள அறையினுள் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Online கல்வி: மாணவன் தற்கொலை! Online கல்வி: மாணவன் தற்கொலை! Reviewed by irumbuthirai on July 20, 2021 Rating: 5

சா. தர பரீட்சையின் அழகியல் பாட செயன்முறை பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

July 20, 2021
நடைபெற்ற க.பொ.த. (சா.தர) பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செயன்முறை பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 08 வரை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சா. தர பரீட்சையின் அழகியல் பாட செயன்முறை பரீட்சைக்கான திகதி அறிவிப்பு சா. தர பரீட்சையின் அழகியல் பாட செயன்முறை பரீட்சைக்கான திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on July 20, 2021 Rating: 5

Post of Vice Chancellor (Eastern University of Sri Lankal)

July 20, 2021

Post of Vice Chancellor (Eastern University of Sri Lankal) 
Closing date: 20-08-2021. 
See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Post of Vice Chancellor (Eastern University of Sri Lankal) Post of Vice Chancellor (Eastern University of Sri Lankal) Reviewed by irumbuthirai on July 20, 2021 Rating: 5

Management Assistants (Rubber Research Institute of Sri Lanka)

July 20, 2021

Management Assistants (Rubber Research Institute of Sri Lanka) 
Closing date: 28-07-2021. 
See the details below.

Source: Sunday Observer.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Management Assistants (Rubber Research Institute of Sri Lanka) Management Assistants (Rubber Research Institute of Sri Lanka) Reviewed by irumbuthirai on July 20, 2021 Rating: 5

தடுப்பூசி செலுத்தினால் மாத்திரமே அனுமதி

July 19, 2021

வருமானம் இல்லாத காரணத்தினால் தெஹிவலை மிருக காட்சிசாலை உட்பட சகல உயிரியல் பூங்காக்களும் பாரிய சிக்கலில் இருப்பதாக அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 
எனவே எதிர்வரும் திங்கட்கிழமை முதல் உயிரியல் பூங்காக்களை திறக்கவுள்ளதாகவும் தடுப்பூசி செலுத்திக் கொண்வர்களுக்கு மாத்திரமே பார்ப்பதற்கு உள் நுழைய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தினால் மாத்திரமே அனுமதி தடுப்பூசி செலுத்தினால் மாத்திரமே அனுமதி Reviewed by irumbuthirai on July 19, 2021 Rating: 5

நீடிக்கப்பட்டது தரம்: 01 ற்கான விண்ணப்ப திகதி:

July 19, 2021

2022 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி ஏற்கனவே அறிவித்ததன்படி இம்மாதம் 31 என இருந்தது.
அது தற்போது ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நீடிக்கப்பட்டது தரம்: 01 ற்கான விண்ணப்ப திகதி: நீடிக்கப்பட்டது தரம்: 01 ற்கான விண்ணப்ப திகதி: Reviewed by irumbuthirai on July 19, 2021 Rating: 5

உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு!

July 19, 2021

இவ்வருடம் (2021) நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றுக்கான புதிய திகதிகள் மீண்டும் கல்வி அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளன.  
அந்த வகையில் புலமைப் பரிசில் பரீட்சை நவம்பர் 14 ஆம் திகதியும் உயர்தர பரீட்சை நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 15 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.
உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு! உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு! Reviewed by irumbuthirai on July 19, 2021 Rating: 5

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம்: சஜித் பிரேமதாசவின் கோரிக்கை!

July 18, 2021

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உத்தேச சட்டமூலம் நாட்டின் இலவச கல்விக்கும் அதன் இருப்புக்கும் பேரழிவை ஏற்படுத்தும். எனவே இந்த சட்ட மூலத்தை உடனடியாக மீள பெறுமாறு ஜனாதிபதியிடம் கோருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 
அரசாங்கம் தான்றோன்றித்தனமாக இந்த சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள முயற்சித்தால் மகா சங்கத்தினர் பல்கலைக்கழக சமூகம், சிவில் அமைப்புகள், ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களை ஒன்றுதிரட்டி அந்த முயற்சியை தோற்கடிக்க ஐக்கிய மக்கள் சக்தி திடசங்கற்பத்துடன் செயற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம்: சஜித் பிரேமதாசவின் கோரிக்கை! கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம்: சஜித் பிரேமதாசவின் கோரிக்கை! Reviewed by irumbuthirai on July 18, 2021 Rating: 5

தெஹிவலை மிருகக்காட்சிசாலை: மேலும் சில விலங்குகள் கொரோனாவால் பாதிப்பு!

July 18, 2021

தெஹிவலை மிருகக்காட்சிசாலையில் இரு ஒரங்குட்டான் குரங்குகள் மற்றும் இரு சிம்பன்சி குரங்குகள் என நான்கு விலங்குகளுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெஹிவலை மிருகக்காட்சிசாலை: மேலும் சில விலங்குகள் கொரோனாவால் பாதிப்பு! தெஹிவலை மிருகக்காட்சிசாலை: மேலும் சில விலங்குகள் கொரோனாவால் பாதிப்பு! Reviewed by irumbuthirai on July 18, 2021 Rating: 5

Vacancies - ITN / அரச தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் பதவி வெற்றிடங்கள்

July 18, 2021

Vacancies: ITN / அரச தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் பதவி வெற்றிடங்கள்.

அரச ஊடக நிறுவனங்களில் ஒன்றான வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி அலைவரிசைக்குச் (Independent Television Network Ltd) சொந்தமான தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் சில பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
Vasantham TV, Vasantham FM அலைவரிசைக்கான சந்தைப்படுத்தல் முகாமையாளர் பதவி உட்பட வேறு அலைவரிசைக்கான பதவிகளும் காணப்படுகின்றன. 

விண்ணப்ப முடிவு திகதி: 28-07-2021.

முழுமையான விபரங்களை கீழே காணலாம்...
Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancies - ITN / அரச தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் பதவி வெற்றிடங்கள் Vacancies - ITN / அரச தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் பதவி வெற்றிடங்கள் Reviewed by irumbuthirai on July 18, 2021 Rating: 5
Powered by Blogger.