தடுப்பூசியை ஏற்றுக்கொள்ளாத நாடுகள்: வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
irumbuthirai
July 23, 2021
சைனோபார்ம் (Sinopharm) தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களை தமது நாட்டுக்கு வேலைக்காக எடுப்பதில்லை என்ற தீர்மானத்தை சில மத்திய கிழக்கு நாடுகள் எடுத்துள்ளன. இதனால் குறித்த சில நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தாம் செல்லும் நாடு அனுமதிக்கும் தடுப்பூசியை தமக்கு போடுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் கோரிக்கைகளை குறிப்பிட்ட தரப்பினர் முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறித்த தரப்பினருக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது
இவ்வாறு வேலைக்குச் செல்ல இருப்பவர்கள் எந்த நாட்டுக்கு செல்கிறார்களோ அந்த நாடு அனுமதித்துள்ள தடுப்பூசியை போடுவதற்கு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு 15 நாடுகளுக்கு செல்ல இருக்கும் சுமார் 8 ஆயிரம் தொழிலாளர்கள் இவ்வாறு தடுப்பூசியை பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
தடுப்பூசியை ஏற்றுக்கொள்ளாத நாடுகள்: வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
Reviewed by irumbuthirai
on
July 23, 2021
Rating: