19-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

July 25, 2021

19-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. இதன் முழு வடிவத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


முன்னைய அமைச்சரவை கூட்டங்களுக்கு செல்ல...
19-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 19-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on July 25, 2021 Rating: 5

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம்: உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட 41 தொழிற்சங்கங்கள்:

July 25, 2021

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக அதிபர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போன்றன பல்வேறு எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றன. 
இந்நிலையில் இந்த கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக நேற்று 41 தொழிற்சங்கங்கள் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. 
கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிபர் ஆசிரியர் சங்கங்கள், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட 41 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம்: உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட 41 தொழிற்சங்கங்கள்: கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம்: உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட 41 தொழிற்சங்கங்கள்: Reviewed by irumbuthirai on July 25, 2021 Rating: 5

ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் Aptitude Test

July 24, 2021

2020 உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு பல்வேறு பாடநெறிகளுக்காக விண்ணப்பித்தவர்களுக்குரிய தெரிவுப் பரீட்சை ஆகஸ்ட் 4 முதல் 7 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
பரீட்சை விபரம் பின்வருமாறு... 
ஆகஸ்ட் 4 - கணனி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பாடநெறிக்கான பரீட்சை 
ஆகஸ்ட் 5 - கைத்தொழில், தகவல் தொழில்நுட்பத்திற்கான பரீட்சை. 
ஆகஸ்ட் 6 - முயற்சியாண்மை மற்றும் முகாமைத்துவ பாடநெறிக்கான பரீட்சை. 
ஆகஸ்ட் 7 - சுற்றுலாத்துறை பாடநெறிக்கான பரீட்சை. 

மேலதிக விபரங்களுக்கு:

ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் Aptitude Test ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் Aptitude Test Reviewed by irumbuthirai on July 24, 2021 Rating: 5

சிறுவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மற்றுமொரு கொரோனா தடுப்பூசி:

July 24, 2021

தற்போதைய நிலையில் பைசர் தடுப்பூசி மாத்திரமே 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படுகிறது. ஏனைய Covid தடுப்பூசிகள் அனைத்தும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே செலுத்தப்படுகிறது. 
இந்நிலையில் அமெரிக்காவில் சுமார் 3700 க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு Moderna தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆய்வொன்று அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இதன்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உண்டாகும் எதிர்ப்பு சக்தியை போன்றே இவர்களுக்கும் உண்டாகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. 
எனவே அமெரிக்கா தயாரிப்பான இந்த மொடர்னா தடுப்பூசியை 
12 - 17 வயதுக்குட்பட்டவர்களுக்கும் செலுத்தலாம் என அமெரிக்க மருந்து முகவரகம் பரிந்துரை செய்துள்ளதோடு ஐரோப்பிய மருந்து முகவரகமும் பரிந்துரை செய்துள்ளது.
சிறுவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மற்றுமொரு கொரோனா தடுப்பூசி: சிறுவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மற்றுமொரு கொரோனா தடுப்பூசி: Reviewed by irumbuthirai on July 24, 2021 Rating: 5

வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படுவோர் தொடர்பில் அறிவிக்கப்பட்ட புதிய முறை

July 24, 2021

வீட்டு வேலைகளுக்காக ஆட்களை எடுக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய புதிய முறையொன்றை மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. 
இதற்கமைய தற்போது பணிபுரிந்து வருபவர்கள் மற்றும் எதிர்காலத்தில் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட இருப்போர் தமக்குரிய 
பிரதேச செயலகத்தில் பதிவு செய்வது கட்டாயம் என மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். 
யாரேனும் ஒருவர் வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்படுவார்களாயின், அவர்கள் கிராம உத்தியோகத்தர், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் உரிமை தொடர்பான உத்தியோகத்தர் என்பவர்களின் கண்காணிப்பின் கீழ் வரும் வகையில் பிரதேச செயலகத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், சிறுவர்களை வேலைக்கமர்த்தும் செயற்பாடுகளை எதிர்காலத்தில் நிறுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். 
ஒழுங்கு முறையான வேலைத் திட்டமொன்று இல்லாததனாலேயே தற்போது அதிகளவிலான சிறுவர்கள் தொழிலில் அமர்த்தப்படுகின்றனர். எனவே இந்த விடயங்களை கருத்திற்கொண்டு அமைச்சு என்ற வகையில் முறையான வேலைத் திட்டமொன்றை அமுல்படுத்த தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படுவோர் தொடர்பில் அறிவிக்கப்பட்ட புதிய முறை வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படுவோர் தொடர்பில் அறிவிக்கப்பட்ட புதிய முறை Reviewed by irumbuthirai on July 24, 2021 Rating: 5

எதிர்ப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் ஆரம்பமான ஒலிம்பிக் போட்டிகள்: முக்கிய தகவல்கள்...

July 24, 2021

உலகின் மிகப்பெரும் விளையாட்டு போட்டி நிகழ்வான ஒலிம்பிக் போட்டிகள் 04 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கிறது. 

அந்த வகையில் கடந்த வருடம் (2020) ஜப்பான் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் பரவல் காரணமாக இந்த வருடம் நடைபெறுகிறது. 

இந்த வருடமும் அங்கு போட்டிகளை நடத்த வேண்டாம் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் ஜப்பான் அரசும் ஒலிம்பிக் கமிட்டியும் உறுதியாக இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து இந்த போட்டிகளை நடத்துகிறது. 

இதன் தொடக்க விழா நேற்று(23) ஜப்பான், டோக்கியோ தேசிய விளையாட்டு அரங்கில் இலங்கை நேரப்படி மாலை 04:30 மணிக்கு (ஜப்பான் நேரம் இரவு 08.00மணி) ஆரம்பமானது. 

தொடக்க விழாவானது உலக தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என சுமார் 1000 பேருக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 

இலங்கை சார்பாக விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார். 

இம்முறை ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான சில முக்கிய தகவல்களை இங்கு தருகிறோம். 
இது 32வது ஒலிம்பிக். 

 

ஜப்பானில் நடைபெறும் இரண்டாவது சந்தர்ப்பம். இதற்கு முன்னர் 1964இல் முதல்முறையாக ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியிருந்தது. 

 

33 வகையான விளையாட்டுகளில் 339 போட்டிகள் நடைபெறுகின்றன. 

 

205 நாடுகளை சேர்ந்த 11,326 வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

 

 
ஜூலை 23 தொடங்கி ஆகஸ்ட் 8 நிறைவு பெறுகிறது. 

 

உணர்வுகளால் ஒன்றிணைவோம் (United by Emotions) என்பது இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கான குறிக்கோள் வாசகம் (Motto) ஆகும்.

 

 
இம்முறை புதிதாக 5 விளையாட்டுக்கள் இணைக்கப்பட்டுள்ளன. (Baseball / Softball, Karate, Skateboarding, Sport Climbing & Surfing) 

ஜப்பானில் அவசரநிலை பிரகடனம் செய்து பார்வையாளர்கள் அனுமதியின்றி இம்முறை போட்டிகள் நடைபெறுவது முக்கிய விடயமாகும்.

 

 
இலங்கையில் இருந்து இம்முறை 9 வீர வீராங்கனைகள் பங்குபற்றுகின்றனர். 

 

இம்முறை போட்டிகளில் முதலாவது தங்கப் பதக்கத்தை சீனா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இம்முறை போட்டிகளில் பட்மின்டன் தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்ற பசறை தமிழ் மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) உடற்கல்வி ஆசிரியை மாரிமுத்து அகல்யா ஜப்பானுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் வரலாற்றிலேயே தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்ற தெரிவான முதல் இலங்கைத் தமிழர் இவராவார். 

 

அதேபோல் குத்துச்சண்டை போட்டிகளுக்கான பெண் நடுவராக இலங்கையைச் சேர்ந்த நெல்கா ஷிரோமலாவும் தெரிவானமை குறிப்பிடத்தக்கது. 
இலங்கை மெய்வல்லுனர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறுவது 1928ல் ஆரம்பமானது. 

1948 இல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது இலங்கைக்கு முதலாவது பதக்கம் கிடைத்தது. 400M தடைதாண்டலில் Duncan White என்பவர் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளி பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார். 

அதன்பின்னர் 2000 ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 200 M ஓட்டப் போட்டியில் இரண்டாமிடம் பெற்று சுசந்திகா மீண்டும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார். 





எதிர்ப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் ஆரம்பமான ஒலிம்பிக் போட்டிகள்: முக்கிய தகவல்கள்... எதிர்ப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் ஆரம்பமான ஒலிம்பிக் போட்டிகள்: முக்கிய தகவல்கள்... Reviewed by irumbuthirai on July 24, 2021 Rating: 5

Vacancy (Public Service Commission)

July 24, 2021

Vacancy (Public Service Commission) 
Closing date: 11-08-2021. 
See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட....
Vacancy (Public Service Commission) Vacancy (Public Service Commission) Reviewed by irumbuthirai on July 24, 2021 Rating: 5

இதுவரை பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம்: வெளியான அறிவிப்பு:

July 24, 2021

2020 உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பத்தை வழங்க தயாராக இருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு மீண்டும் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. 
அந்தவகையில் எதிர்வரும் திங்கட்கிழமை (26) முதல் 
ஜூலை 30 வரை Online மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. 
ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த மாதம் 18 ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம்: வெளியான அறிவிப்பு: இதுவரை பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம்: வெளியான அறிவிப்பு: Reviewed by irumbuthirai on July 24, 2021 Rating: 5

23-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

July 24, 2021

23-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official Gazette released on 23-07-2021 (in three languages) 
இதில்,
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


முன்னைய வர்த்தமானிகளைப் பார்வையிட....
23-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 23-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on July 24, 2021 Rating: 5

அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் எடுத்துள்ள மற்றுமொரு அதிரடி தீர்மானம்

July 24, 2021

அதிபர் ஆசிரியர் சங்கங்கள் தற்போது மேற்கொண்டு வரும் பல்வேறு பணிப்பகிஷ்கரிப்புக்கு மேலதிகமாக மற்றுமொரு அதிரடி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன. 
அதாவது க.பொ.த. (சா/தர) பரீட்சைக்குரிய செயன்முறை பரீட்சைகளிலிருந்து விலக தீர்மானித்திருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
தமது கோரிக்கைகளுக்கு பல்வேறு தீர்வுகள் தர முடியுமாக இருப்பினும் அதனை புறக்கணித்து அரசாங்கம் நாட்களை கடத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் எடுத்துள்ள மற்றுமொரு அதிரடி தீர்மானம் அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் எடுத்துள்ள மற்றுமொரு அதிரடி தீர்மானம் Reviewed by irumbuthirai on July 24, 2021 Rating: 5

தடுப்பூசியை ஏற்றுக்கொள்ளாத நாடுகள்: வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

July 23, 2021

சைனோபார்ம் (Sinopharm) தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களை தமது நாட்டுக்கு வேலைக்காக எடுப்பதில்லை என்ற தீர்மானத்தை சில மத்திய கிழக்கு நாடுகள் எடுத்துள்ளன. இதனால் குறித்த சில நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
எனவே தாம் செல்லும் நாடு அனுமதிக்கும் தடுப்பூசியை தமக்கு போடுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் கோரிக்கைகளை குறிப்பிட்ட தரப்பினர் முன்வைத்துள்ளனர். 
இந்த நிலையில் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறித்த தரப்பினருக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது 
இவ்வாறு வேலைக்குச் செல்ல இருப்பவர்கள் எந்த நாட்டுக்கு செல்கிறார்களோ அந்த நாடு அனுமதித்துள்ள தடுப்பூசியை போடுவதற்கு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு 15 நாடுகளுக்கு செல்ல இருக்கும் சுமார் 8 ஆயிரம் தொழிலாளர்கள் இவ்வாறு தடுப்பூசியை பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
தடுப்பூசியை ஏற்றுக்கொள்ளாத நாடுகள்: வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்! தடுப்பூசியை ஏற்றுக்கொள்ளாத நாடுகள்: வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்! Reviewed by irumbuthirai on July 23, 2021 Rating: 5

இதுவரை தடுப்பூசி போடாத அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவித்தல்

July 22, 2021

இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. 
அதாவது இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் எந்த மாகாணத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும் 
தாம் பணியாற்றும் பாடசாலை அமைந்துள்ள வலயக்கல்வி காரியாலயத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுவரை தடுப்பூசி போடாத அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவித்தல் இதுவரை தடுப்பூசி போடாத அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவித்தல் Reviewed by irumbuthirai on July 22, 2021 Rating: 5

சினோபார்ம் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி

July 21, 2021

சினோபார்ம் (Sinopharm) கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுள் 95% ஆனவர்களின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சியடைந்துள்ளமை பரிசோதனை ஊடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துவப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பல்கலைகழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட் பரிசோதனையில் டெல்டா மற்றும் பீடா வைரஸில் இருந்து பூரண பாதுகாப்பை இந்த தடுப்பூசியை வழங்குவதாகவும் தெரியவந்துள்ளது என்றார்.
சினோபார்ம் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி சினோபார்ம் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி Reviewed by irumbuthirai on July 21, 2021 Rating: 5
Powered by Blogger.