மாணவர்களுக்கு சலுகை விலையில் முகக் கவசம்:

July 26, 2021

மாணவர்களுக்கு சலுகை விலையில் முகக்கவசம் வழங்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 
அடுத்த மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இதற்காக முகக் கவசம் தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு சலுகை விலையில் முகக் கவசம்: மாணவர்களுக்கு சலுகை விலையில் முகக் கவசம்: Reviewed by irumbuthirai on July 26, 2021 Rating: 5

இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியவர் கொரோனாவுக்கு பலி!

July 26, 2021

முறையாக இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. 
73 வயதான குறித்த நபருக்கு சினோபாம் (Sinopharm) கொவிட் தடுப்பூசிகளே செலுத்தப்பட்டுள்ளது. 
முதலாவது தடுப்பூசி மே 29 இலும் இரண்டாவது தடுப்பூசி ஜூன் 28 இலும் செலுத்தப்பட்டுள்ளது. 
குறித்த நபருக்கு சளி அதிகரித்தமையினால் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியவர் கொரோனாவுக்கு பலி! இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியவர் கொரோனாவுக்கு பலி! Reviewed by irumbuthirai on July 26, 2021 Rating: 5

சா. தர பரீட்சைக்குரிய புதிய திகதி அறிவிப்பு!

July 26, 2021

இவ்வருடம் (2021) நடைபெற வேண்டிய சாதாரண தர பரீட்சைகுரிய புதிய திகதி கல்வியமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. 
அந்த வகையில் இப்பரீட்சையானது எதிர்வரும் 2022 பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இதேவேளை இவ்வருடத்திற்குரிய புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பன இந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சா. தர பரீட்சைக்குரிய புதிய திகதி அறிவிப்பு! சா. தர பரீட்சைக்குரிய புதிய திகதி அறிவிப்பு! Reviewed by irumbuthirai on July 26, 2021 Rating: 5

தரம்:04 கணிதம் (இலகு முறையில்)

July 25, 2021

தரம்: 4 ற்குரிய கணிதம் என்ற பாடம் இங்கு இலகு முறையில் தரப்பட்டுள்ளது. 
இதில், 
மாணவர்களே சுயமாக கற்கும் வகையில் இலகுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

சுயமாக பயிற்சிகளை செய்யவும் அதை சரி பார்க்கவும் முடியும். 

இலகுவான வடிவமைப்பு..  

முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
தரம்:04 கணிதம் (இலகு முறையில்) தரம்:04 கணிதம் (இலகு முறையில்) Reviewed by irumbuthirai on July 25, 2021 Rating: 5

தரம்: 04 தமிழ்மொழி (இலகு முறையில்)

July 25, 2021

தரம்: 04 ற்குரிய தமிழ் மொழி என்ற பாடம் இலகு முறையில் இங்கு தரப்படுகிறது. இதில், 

எழுத்தின் வகைகள், குறியீட்டு வகைகள், உறுப்பமைய எழுதுதல், அடுக்குச் சொற்கள் உட்பட பல விடயங்கள் தரப்பட்டுள்ளன. 

மாணவர்கள் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பயிற்சிகளை தாமே செய்யவும் அதை சரி பார்க்கவும் முடியும். 

இலகுவான விளக்கங்கள்.. 

முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
தரம்: 04 தமிழ்மொழி (இலகு முறையில்) தரம்: 04  தமிழ்மொழி (இலகு முறையில்) Reviewed by irumbuthirai on July 25, 2021 Rating: 5

Certificate Course in Urbanization, Climate Change, Displacement & Re location (University of Colombo)

July 25, 2021

Certificate Course in Urbanization, Climate Change, Displacement & Re location (University of Colombo) 
Closing date: 15-08-2021. 
See the details below.


Certificate Course in Urbanization, Climate Change, Displacement & Re location (University of Colombo) Certificate Course in Urbanization, Climate Change, Displacement & Re location (University of Colombo) Reviewed by irumbuthirai on July 25, 2021 Rating: 5

உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினம்: இலங்கையில் நீரில் மூழ்கி மரணிப்போர் எத்தனை பேர் தெரியுமா?

July 25, 2021

இன்று (ஜூலை 25) உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினமாகும். ஐ. நா. பொதுச் சபையின் 75வது கூட்டத் தொடரில் உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தொடர்பான முதலவாது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில், ஜூலை 25 உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 
வருடமொன்றுக்கு உலகில் நீரில் மூழ்குவதால் 220,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதுடன், அதில் 1/3 மரணங்கள் தென்னாசியாவிலேயே இடம்பெறுவதாகவும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை இலங்கையில் ஒவ்வொரு வருடமும் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினம்: இலங்கையில் நீரில் மூழ்கி மரணிப்போர் எத்தனை பேர் தெரியுமா? உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினம்: இலங்கையில் நீரில் மூழ்கி மரணிப்போர் எத்தனை பேர் தெரியுமா? Reviewed by irumbuthirai on July 25, 2021 Rating: 5

வாகன இலக்கத் தகடுகளை விநியோகிக்க புதிய முறை

July 25, 2021

வாகன இலக்கத் தகடுகளை தபால் மூலம் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்கும் செயற்திட்டத்தின் முதல்கட்டமாக இந்த விடயம் செயற்படுத்தப்படவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வாகன இலக்கத் தகடுகளை விநியோகிக்க புதிய முறை வாகன இலக்கத் தகடுகளை விநியோகிக்க புதிய முறை Reviewed by irumbuthirai on July 25, 2021 Rating: 5

19-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

July 25, 2021

19-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. இதன் முழு வடிவத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


முன்னைய அமைச்சரவை கூட்டங்களுக்கு செல்ல...
19-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 19-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on July 25, 2021 Rating: 5

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம்: உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட 41 தொழிற்சங்கங்கள்:

July 25, 2021

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக அதிபர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போன்றன பல்வேறு எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றன. 
இந்நிலையில் இந்த கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக நேற்று 41 தொழிற்சங்கங்கள் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. 
கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிபர் ஆசிரியர் சங்கங்கள், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட 41 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம்: உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட 41 தொழிற்சங்கங்கள்: கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம்: உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட 41 தொழிற்சங்கங்கள்: Reviewed by irumbuthirai on July 25, 2021 Rating: 5

ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் Aptitude Test

July 24, 2021

2020 உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு பல்வேறு பாடநெறிகளுக்காக விண்ணப்பித்தவர்களுக்குரிய தெரிவுப் பரீட்சை ஆகஸ்ட் 4 முதல் 7 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
பரீட்சை விபரம் பின்வருமாறு... 
ஆகஸ்ட் 4 - கணனி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பாடநெறிக்கான பரீட்சை 
ஆகஸ்ட் 5 - கைத்தொழில், தகவல் தொழில்நுட்பத்திற்கான பரீட்சை. 
ஆகஸ்ட் 6 - முயற்சியாண்மை மற்றும் முகாமைத்துவ பாடநெறிக்கான பரீட்சை. 
ஆகஸ்ட் 7 - சுற்றுலாத்துறை பாடநெறிக்கான பரீட்சை. 

மேலதிக விபரங்களுக்கு:

ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் Aptitude Test ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் Aptitude Test Reviewed by irumbuthirai on July 24, 2021 Rating: 5

சிறுவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மற்றுமொரு கொரோனா தடுப்பூசி:

July 24, 2021

தற்போதைய நிலையில் பைசர் தடுப்பூசி மாத்திரமே 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படுகிறது. ஏனைய Covid தடுப்பூசிகள் அனைத்தும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே செலுத்தப்படுகிறது. 
இந்நிலையில் அமெரிக்காவில் சுமார் 3700 க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு Moderna தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆய்வொன்று அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இதன்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உண்டாகும் எதிர்ப்பு சக்தியை போன்றே இவர்களுக்கும் உண்டாகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. 
எனவே அமெரிக்கா தயாரிப்பான இந்த மொடர்னா தடுப்பூசியை 
12 - 17 வயதுக்குட்பட்டவர்களுக்கும் செலுத்தலாம் என அமெரிக்க மருந்து முகவரகம் பரிந்துரை செய்துள்ளதோடு ஐரோப்பிய மருந்து முகவரகமும் பரிந்துரை செய்துள்ளது.
சிறுவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மற்றுமொரு கொரோனா தடுப்பூசி: சிறுவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மற்றுமொரு கொரோனா தடுப்பூசி: Reviewed by irumbuthirai on July 24, 2021 Rating: 5

வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படுவோர் தொடர்பில் அறிவிக்கப்பட்ட புதிய முறை

July 24, 2021

வீட்டு வேலைகளுக்காக ஆட்களை எடுக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய புதிய முறையொன்றை மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. 
இதற்கமைய தற்போது பணிபுரிந்து வருபவர்கள் மற்றும் எதிர்காலத்தில் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட இருப்போர் தமக்குரிய 
பிரதேச செயலகத்தில் பதிவு செய்வது கட்டாயம் என மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். 
யாரேனும் ஒருவர் வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்படுவார்களாயின், அவர்கள் கிராம உத்தியோகத்தர், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் உரிமை தொடர்பான உத்தியோகத்தர் என்பவர்களின் கண்காணிப்பின் கீழ் வரும் வகையில் பிரதேச செயலகத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், சிறுவர்களை வேலைக்கமர்த்தும் செயற்பாடுகளை எதிர்காலத்தில் நிறுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். 
ஒழுங்கு முறையான வேலைத் திட்டமொன்று இல்லாததனாலேயே தற்போது அதிகளவிலான சிறுவர்கள் தொழிலில் அமர்த்தப்படுகின்றனர். எனவே இந்த விடயங்களை கருத்திற்கொண்டு அமைச்சு என்ற வகையில் முறையான வேலைத் திட்டமொன்றை அமுல்படுத்த தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படுவோர் தொடர்பில் அறிவிக்கப்பட்ட புதிய முறை வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படுவோர் தொடர்பில் அறிவிக்கப்பட்ட புதிய முறை Reviewed by irumbuthirai on July 24, 2021 Rating: 5
Powered by Blogger.