உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலமாணிக்க கொத்தணி இலங்கையில் கண்டுபிடிப்பு!
irumbuthirai
July 27, 2021
உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீல மாணிக்க கொத்தணி (Star Sapphire Cluster) ஒன்று இலங்கையின் இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி பகுதியில் வியாபாரி ஒருவர் தனது வீட்டுக்குப் பின்புறம் கிணறு தோண்டும் வேளையில் இந்த நட்சத்திர நீல மாணிக்க கொத்தணி கிடைத்துள்ளது.
ஏறத்தாழ 510 Kg (2.5 மில்லியன் கரட்) நிறையுடைய இந்த கல்லின் பெறுமதி
சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கை நாணய பெறுமதியில் சுமார் 20 பில்லியன் ரூபா ஆகும்.
குறித்த நபர் இந்த கல்லிற்கு செரண்டிப் நீல மாணிக்கம் (Serendipity Sapphire) என பெயரிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலமாணிக்க கொத்தணி இலங்கையில் கண்டுபிடிப்பு!
Reviewed by irumbuthirai
on
July 27, 2021
Rating: