03 வருட பயணத்தடை: சவுதியின் அதிரடி அறிவிப்பு!
irumbuthirai
July 29, 2021
மூன்று வருட பயணத் தடை விதிப்பது தொடர்பான சவுதி அரசின் அதிரடி தீர்மானம் தொடர்பில் அரசுக்கு சொந்தமான சவூதி பிரஸ் ஏஜென்சி (SPA) செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதாவது இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை கொரோனா அபாய நாடுகளாக சவுதி அண்மையில் அறிவித்தது.
அந்தப் பட்டியலில்
இந்தியா, துருக்கி, எத்தியோப்பியா, சோமாலியா, காங்கோ, வெனிசூலா, பெலாரஸ், வியத்நாம், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம்,
ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, லெபனான், யேமன், ஆா்மீனியா போன்ற நாடுகள் உள்ளடங்குகின்றன. எனவே இந்த நாடுகளுக்கு தமது நாட்டு பிரஜைகள் செல்ல வேண்டாம் எனவும் உத்தரவிட்டது.
எனவே அரசின் வழிகாட்டுதல்களை மீறி, குறித்த நாடுகளுக்கு யாரேனும் சென்றால், அவா்களுக்கு மிகப் பெரிய தொகை அபராதம் விதிக்கப்படும். அத்துடன், 3 ஆண்டுகளுக்கு அவா்கள் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இது நோய்த் தடுப்பு கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் சவூதி அரசின் வழிகாட்டுதல்களையும் மீறும் குற்றமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
03 வருட பயணத்தடை: சவுதியின் அதிரடி அறிவிப்பு!
Reviewed by irumbuthirai
on
July 29, 2021
Rating: