தரம்:04 ஆங்கிலம் (இலகு முறையில்)

July 29, 2021

தரம்: 04 ற்குரிய ஆங்கிலம் என்ற பாடம் இலகு முறையில் இங்கு தரப்படுகிறது. இதில்,

கற்றலில் ஆர்வத்தை தூண்டும் வகையில் இலகுவான எளிமையான முறையில் வடிவமைப்பு, 

படங்கள் மூலமும் விளையாட்டு மூலமும் விளக்கங்கள், 

மாணவர்கள் சுயமாக கற்கவும் அதை தாமே பயிற்சி செய்து தாமே சரிபார்க்கவும், 

ஆங்கில வசனங்களை பூர்த்தியாக்கும் முறை போன்ற பல விடயங்கள் காணப்படுகின்றன. 

இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
தரம்:04 ஆங்கிலம் (இலகு முறையில்) தரம்:04 ஆங்கிலம் (இலகு முறையில்) Reviewed by irumbuthirai on July 29, 2021 Rating: 5

தரம்: 04 சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் (இலகு முறையில்)

July 29, 2021

தரம்:04 சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் என்ற பாடம் இலகு முறையில் இங்கு தரப்படுகிறது. 
இது, 

இலகுவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் சுயமாக கற்கவும் அதை பயிற்சி செய்து தாமே சரிபார்க்கவும் முடியும். 

கற்றலில் ஆர்வத்தை தூண்டும் வகையில் வடிவமைப்பு. 

இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
தரம்: 04 சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் (இலகு முறையில்) தரம்: 04 சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் (இலகு முறையில்) Reviewed by irumbuthirai on July 29, 2021 Rating: 5

தனிமைப்படுத்தப்பட்ட விமல் வீரவன்ச!

July 29, 2021

தன்னுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக கடமையாற்றி பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தான் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தளில் இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 
தனது முகநூல் பக்கத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட விமல் வீரவன்ச! தனிமைப்படுத்தப்பட்ட விமல் வீரவன்ச! Reviewed by irumbuthirai on July 29, 2021 Rating: 5

பகிரங்க விவாதத்திற்கு வர முடியுமா? சரத் வீரசேகரவிற்கு சவால் விட்ட ஹரின்!

July 29, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அழைத்துள்ளார். 
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நேற்றைய தினம் (28) அழைக்கப்பட்டிருந்தார். அந்த வகையில் சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கி விட்டு 
வெளியேறிச் செல்லும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 
எந்த தொலைக்காட்சி அலைவரிசையாயினும் பரவாயில்லை உதவிக்கு அவர் யாரை அழைத்து வந்தாலும் பரவாயில்லை விவாதத்திற்கு வர தயாரா? என அவர் கேட்டுள்ளார். 
இதேவேளை பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பகிரங்க விவாதத்திற்கு வர முடியுமா? சரத் வீரசேகரவிற்கு சவால் விட்ட ஹரின்! பகிரங்க விவாதத்திற்கு வர முடியுமா? சரத் வீரசேகரவிற்கு சவால் விட்ட  ஹரின்! Reviewed by irumbuthirai on July 29, 2021 Rating: 5

03 வருட பயணத்தடை: சவுதியின் அதிரடி அறிவிப்பு!

July 29, 2021

மூன்று வருட பயணத் தடை விதிப்பது தொடர்பான சவுதி அரசின் அதிரடி தீர்மானம் தொடர்பில் அரசுக்கு சொந்தமான சவூதி பிரஸ் ஏஜென்சி (SPA) செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

அதாவது இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை கொரோனா அபாய நாடுகளாக சவுதி அண்மையில் அறிவித்தது. 

அந்தப் பட்டியலில் இந்தியா, துருக்கி, எத்தியோப்பியா, சோமாலியா, காங்கோ, வெனிசூலா, பெலாரஸ், வியத்நாம், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், 
ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, லெபனான், யேமன், ஆா்மீனியா போன்ற நாடுகள் உள்ளடங்குகின்றன. எனவே இந்த நாடுகளுக்கு தமது நாட்டு பிரஜைகள் செல்ல வேண்டாம் எனவும் உத்தரவிட்டது. 

எனவே அரசின் வழிகாட்டுதல்களை மீறி, குறித்த நாடுகளுக்கு யாரேனும் சென்றால், அவா்களுக்கு மிகப் பெரிய தொகை அபராதம் விதிக்கப்படும். அத்துடன், 3 ஆண்டுகளுக்கு அவா்கள் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. 

இது நோய்த் தடுப்பு கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் சவூதி அரசின் வழிகாட்டுதல்களையும் மீறும் குற்றமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
03 வருட பயணத்தடை: சவுதியின் அதிரடி அறிவிப்பு! 03 வருட பயணத்தடை: சவுதியின் அதிரடி அறிவிப்பு! Reviewed by irumbuthirai on July 29, 2021 Rating: 5

கல்வி அமைச்சு: இலங்கை பாடசாலை கட்டமைப்பு தொடர்பான முழுமையான புள்ளிவிபரங்கள் / School Census - 2020

July 28, 2021

2020 வருட தகவல்களின்படி இலங்கையில் உள்ள ஒட்டு மொத்த அரச பாடசாலைகளின் கட்டமைப்பு தொடர்பான முழுமையான புள்ளிவிவர தகவல்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

கல்வித்துறை சார்ந்த பல்வேறு போட்டிப் பரீட்சைகளுக்கு இதில் உள்ள தகவல்கள் உதவலாம். 

மொத்த பாடசாலைகள், தேசிய பாடசாலைகள், மாகாண பாடசாலைகள், ஆண்கள் பாடசாலைகள், பெண்கள் பாடசாலைகள், 
கலவன் பாடசாலைகள், தமிழ் மொழி மூல பாடசாலைகள், சிங்கள மொழி மூல பாடசாலைகள், கலப்பு மொழி மூல பாடசாலைகள், ஆண் ஆசிரியர்கள், பெண் ஆசிரியர்கள், தகைமை களுக்கேற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கை போன்றவை மாத்திரமன்றி இன்னும் பல புள்ளிவிபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

குறித்த தொகை மதிப்பு புள்ளி விபரங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
கல்வி அமைச்சு: இலங்கை பாடசாலை கட்டமைப்பு தொடர்பான முழுமையான புள்ளிவிபரங்கள் / School Census - 2020 கல்வி அமைச்சு: இலங்கை பாடசாலை கட்டமைப்பு தொடர்பான முழுமையான புள்ளிவிபரங்கள் / School Census - 2020 Reviewed by irumbuthirai on July 28, 2021 Rating: 5

அதிபர், ஆசிரியர்களின் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு

July 28, 2021

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் முரண்பாடுகள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (27) தெரிவித்தார். 

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அதற்கமைய எதிர்வரும் திங்கள் முதல் மீண்டும்  பணியாற்றுவதற்கு தயாராகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொழிற்சங்கத்தினரிடம் தெரிவித்தார். 

இந்த சம்பள முரண்பாடுகள் 24 வருட காலமாக காணப்படுகின்ற போதிலும் இதுவரை ஒரு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை என்றும், தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து தெளிவான புரிந்துணர்வை கொண்டிருப்பதால் ஒரே தடவையில் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியாவிடினும், சம்பள முரண்பாட்டை குறைப்பதற்கு விளக்க அறிக்கையின்படி கொள்கை தீர்மானமொன்றை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் இதன்போது வேண்டுகோள் விடுத்தனர். 

இதற்கு  கருத்து தெரிவித்த பிரதமர், 
அதிபர், மற்றும் ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் நான் தெளிவான புரிதலை கொண்டுள்ளேன். ஒரு அரசாங்கம் என்ற வகையில் சம்பள முரண்பாட்டை குறைப்பது அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் உலகளாவிய நிலைமை காரணமாக நாட்டின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி மட்டத்தில் காணப்படுவதால் அரசாங்கத்தினால் விரைவில் சம்பள அதிகரிப்பை மேற்கொள்வது முடியாத விடயம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். 

உங்களது பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சர் சென்ற திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்தார். அமைச்சரவையில் நான் அதிபர், ஆசிரியர்களுக்காக முன்நிற்பேன். இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். எனினும் சம்பள ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி சம்பளம் வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கப்பட வேண்டும் என கௌரவ பிரதமர் சுட்டிக்காட்டினார். 

சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பரப்பப்படுவதாக சுட்டிக்காட்டிய தொழிற்சங்க பிரதிநிதிகள், சம்பள முரண்பாடு குறித்த விளக்க அறிக்கைக்கு தொழிற்சங்கங்கள் உடன்படுவதாகவும், அதன் உள்ளடக்கங்கள் அமைச்சரவை பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை என்றும் கூறினர். 

இதற்கு பதிலளித்து உரையாற்றிய கல்வி அமைச்சர் G.L.பீரிஸ், அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பிலான உச்சநீதிமன்ற தீர்ப்பு, அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானம் மற்றும் விளக்க அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
அதிபர், ஆசிரியர் சேவையை வரைவிட்ட சேவையாக (மூடிய சேவை - Closed Service) பிரகடனப்படுத்துவதன் நோக்கம் பிற அரச சேவைகளின் சம்பள அளவுகோள்களை பாதிக்காத வகையில் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை குறைத்தலாகும் எனவும், இதுவரை அதிபர், ஆசிரியர் சேவையை வரைவிட்ட சேவையாக மாற்றுவதற்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் சில மாதங்கள் ஆய்வு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட வரைவை சமர்ப்பித்து கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 

கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்ட அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் கௌரவ பிரதமரின் தலையீட்டிற்கு இதன்போது தொழிற்சங்க பிரதிநிதிகள் தங்களது நன்றியினை தெரிவித்தனர். 

குறித்த கலந்துரையாடலில், அமைச்சர்களான பேராசிரியர் G.L.பீரிஸ், விமல் வீரவங்ச, ரமேஷ் பதிரண, காமினி லொகுகே, பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, லசந்த அழகியவன்ன, பிரதமரின் மேலதிக செயலாளர் பேராசிரியர் கபில C.K.பெரேரா, கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி M. உபாலி சேதர உள்ளிட்ட அதிபர் சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
Source: thaitv.
அதிபர், ஆசிரியர்களின் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு அதிபர், ஆசிரியர்களின் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு Reviewed by irumbuthirai on July 28, 2021 Rating: 5

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையில் (SLTES) இணைப்பதற்கான போட்டிப் பரீட்சை

July 28, 2021

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் 111 ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 
அந்தவகையில் எதிர்வரும் ஆகஸ்ட் 29ஆம் திகதி நாட்டில் உள்ள 09 மாகாணங்களின் பிரதான நகரங்களில் இந்தப் பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையில் (SLTES) இணைப்பதற்கான போட்டிப் பரீட்சை இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையில் (SLTES)  இணைப்பதற்கான போட்டிப் பரீட்சை Reviewed by irumbuthirai on July 28, 2021 Rating: 5

Results Released (EB Exam for Management Service Officer - 111)

July 28, 2021

Efficiency Bar (EB) examination for officers in grade 111 of Management Service Officers exam results. 
Exame held: 2020-09-27. 
Click the link below for results sheet.
Results Released (EB Exam for Management Service Officer - 111) Results Released (EB Exam for Management Service Officer - 111) Reviewed by irumbuthirai on July 28, 2021 Rating: 5

LLB Selection Test date (Open University) / சட்டமானி பட்டப்படிப்பிற்கான தெரிவுப் பரீட்சை (திறந்த பல்கலைக்கழகம்)

July 28, 2021

Selection test for the LLB Degree programme of the Open University of Sri Lanka - 2021. 

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானி பட்டப் படிப்பிற்காக சேர்த்துக் கொள்வதற்கான தெரிவு பரீட்சைக்குரிய திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 
அந்தவகையில் ஆகஸ்ட் 21ஆம் திகதி நாட்டில் உள்ள 09 மாகாணங்களின் பிரதான நகரங்களில் இந்தப் பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
LLB Selection Test date (Open University) / சட்டமானி பட்டப்படிப்பிற்கான தெரிவுப் பரீட்சை (திறந்த பல்கலைக்கழகம்) LLB Selection Test date (Open University)  / சட்டமானி பட்டப்படிப்பிற்கான தெரிவுப் பரீட்சை (திறந்த பல்கலைக்கழகம்) Reviewed by irumbuthirai on July 28, 2021 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2021 ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்)

July 28, 2021

பரீட்சை திணைக்களத்தால் 2021 ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை மூன்று மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
Examination calendar for the month of August, 2021 

தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
பரீட்சை திணைக்களத்தால் 2021 ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்) பரீட்சை திணைக்களத்தால் 2021 ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on July 28, 2021 Rating: 5

செயலிழக்கும் சினோவெக் தடுப்பூசி: ஆய்வில் வெளியான தகவல்!

July 27, 2021

சீனாவினால் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசியான சினோவெக் (Sinovac) தடுப்பூசி தொடர்பான ஆய்வொன்றை சீனாவைச் சேர்ந்த ஆய்வுக்குழுவொன்று மேற்கொண்டது. 
அதாவது 18 - 59 வயதுக்குட்பட்டவர்களை ஆய்வு செய்த பொழுது அதிர்ச்சியளிக்கும் விடயம் அவதானிக்கப்பட்டுள்ளது. அதாவது சினோவெக் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி 6 மாதங்களில் உடலில் எதிர்ப்பு சக்தி 
35% என்ற குறைவான அளவே எஞ்சியிருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 
எவ்வாறாயினும் மீண்டும் ஒருமுறை தடுப்பூசி செலுத்தும் பட்சத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. 
எனவே தற்போது தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவில் இவ்வாறு சினோவெக் 2 தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் அல்லது மொடர்னாவும் துருக்கியிலும் மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை பயன்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செயலிழக்கும் சினோவெக் தடுப்பூசி: ஆய்வில் வெளியான தகவல்! செயலிழக்கும் சினோவெக் தடுப்பூசி: ஆய்வில் வெளியான தகவல்! Reviewed by irumbuthirai on July 27, 2021 Rating: 5

பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் ஒன்லைன் (Online) கற்பித்தலிலிருந்து விலகல்!

July 27, 2021

பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் நாளைய தினம் Online கற்பித்தலில் இருந்து விலக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே நாளைய தினம் இவ்வாறு பகிஷ்கரிப்பை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் ஒன்லைன் (Online) கற்பித்தலிலிருந்து விலகல்! பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் ஒன்லைன் (Online) கற்பித்தலிலிருந்து விலகல்! Reviewed by irumbuthirai on July 27, 2021 Rating: 5
Powered by Blogger.