சகல அரச ஊழியர்களும் பணிக்கு திரும்ப உத்தரவு! வெளியானது அறிவித்தல்!
irumbuthirai
July 30, 2021
சகல அரச ஊழியர்களும் வழமைபோன்று கடமைக்கு திரும்ப வேண்டும் என அழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் ஆகஸ்ட்
2 ஆம் திகதி முதல் சகல அரச ஊழியர்களும் வழமைபோன்று கடமைக்கு திரும்ப வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் அரச நிறுவன பிரதானிகளுக்கு விடுத்துள்ளார்.
மேலும் குறைந்த ஊழியர்களைக் கொண்டு கடமைகளை மேற்கொள்வது தொடர்பாக இதற்கு முன்னர் வெளியான சுற்றுநிருபங்கள் மற்றும் அறிவித்தல்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகல அரச ஊழியர்களும் பணிக்கு திரும்ப உத்தரவு! வெளியானது அறிவித்தல்!
Reviewed by irumbuthirai
on
July 30, 2021
Rating:
