தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான Online விண்ணப்பம் (வீடியோ வழிகாட்டல் மற்றும் முழு விபரம் இணைப்பு)
irumbuthirai
August 02, 2021
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்தல் தொடர்பான அறிவித்தலை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
பரீட்சை திகதி: 14-11-2021 (ஞாயிற்றுக்கிழமை)
விண்ணப்ப முடிவுத் திகதி: 20-08-2021.
விண்ணப்பங்கள் ஒன்லைன் முறையில் பாடசாலை மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக சகல பாடசாலைகளுக்கும் User name மற்றும் Password
என்பன வழங்கப்பட்டுள்ளன. இது கிடைக்காத அதிபர்கள் பரீட்சைத் திணைக்களத்தை அவசரமாகத் தொடர்பு கொண்டு அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
Online முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை பெற்று அதில் மாணவர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் கையொப்பமிட்டு பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும்.
அதில் ஒரு பிரதியை பாடசாலையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
பாடசாலையின் தொலைபேசி இலக்கம் அதிபர் மற்றும் பரீட்சைக்கு பொறுப்பான ஆசிரியரின் கையடக்க தொலைபேசி இலக்கங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.
இது தொடர்பான பத்திரிகை அறிவித்தலை கீழே காணலாம்.
விண்ணப்பித்தல் தொடர்பான வீடியோ வழிகாட்டலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
அதிபர்களுக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டல்களை பார்வையிட...
குறிப்பு:
புலமைப்பரிசில் பரீட்சைக்கான 40க்கும் மேற்பட்ட மாதிரி வினாத்தாள்கள் மற்றும் விடைகளுடன் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான Online விண்ணப்பம் (வீடியோ வழிகாட்டல் மற்றும் முழு விபரம் இணைப்பு)
Reviewed by irumbuthirai
on
August 02, 2021
Rating: