நீடிக்கப்பட்டது SLEAS ற்கான விண்ணப்ப திகதி!

August 02, 2021

SLEAS (இலங்கை கல்வி நிர்வாக சேவை) - 111 ற்கான மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சேவை அடிப்படையிலான போட்டி பரீட்சை தொடர்பில் வெளியான வர்த்தமானியில் திருத்தங்கள் செய்வதற்கு அரச சேவை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த அனுமதியின் பின்னர் திருத்தங்களுடன் வர்த்தமானி வெளியாகும். 

அதனடிப்படையில் விண்ணப்ப முடிவுத் திகதியும் நீடிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நீடிக்கப்பட்டது SLEAS ற்கான விண்ணப்ப திகதி! நீடிக்கப்பட்டது SLEAS ற்கான விண்ணப்ப திகதி! Reviewed by irumbuthirai on August 02, 2021 Rating: 5

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான Online விண்ணப்பம் (வீடியோ வழிகாட்டல் மற்றும் முழு விபரம் இணைப்பு)

August 02, 2021

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்தல் தொடர்பான அறிவித்தலை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

பரீட்சை திகதி: 14-11-2021 (ஞாயிற்றுக்கிழமை) 

விண்ணப்ப முடிவுத் திகதி: 20-08-2021. 

விண்ணப்பங்கள் ஒன்லைன் முறையில் பாடசாலை மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக சகல பாடசாலைகளுக்கும் User name மற்றும் Password 
என்பன வழங்கப்பட்டுள்ளன. இது கிடைக்காத அதிபர்கள் பரீட்சைத் திணைக்களத்தை அவசரமாகத் தொடர்பு கொண்டு அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 

Online முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை பெற்று அதில் மாணவர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் கையொப்பமிட்டு பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும். அதில் ஒரு பிரதியை பாடசாலையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். 

பாடசாலையின் தொலைபேசி இலக்கம் அதிபர் மற்றும் பரீட்சைக்கு பொறுப்பான ஆசிரியரின் கையடக்க தொலைபேசி இலக்கங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.

இது தொடர்பான பத்திரிகை அறிவித்தலை கீழே காணலாம்.


விண்ணப்பித்தல் தொடர்பான வீடியோ வழிகாட்டலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

அதிபர்களுக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டல்களை பார்வையிட...


குறிப்பு:
புலமைப்பரிசில் பரீட்சைக்கான 40க்கும் மேற்பட்ட மாதிரி வினாத்தாள்கள் மற்றும் விடைகளுடன் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான Online விண்ணப்பம் (வீடியோ வழிகாட்டல் மற்றும் முழு விபரம் இணைப்பு) தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான Online விண்ணப்பம் (வீடியோ வழிகாட்டல் மற்றும் முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 02, 2021 Rating: 5

80% ற்கும் அதிகமானோர் கடமைக்கு திரும்பினர்!

August 02, 2021

இன்று சுமார் 80% கும் அதிகமான அரச ஊழியர்கள் கடமைக்கு திரும்பியதாக அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. 

ஆகஸ்ட் 2 முதல் சகல அரச ஊழியர்களும் வழமைபோன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் அவ்வாறு சமூகமளிக்காதவர்கள் விடுமுறை எடுக்க வேண்டுமெனவும் அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஏற்கனவே சுற்றுநிறுபம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
80% ற்கும் அதிகமானோர் கடமைக்கு திரும்பினர்! 80% ற்கும் அதிகமானோர் கடமைக்கு திரும்பினர்! Reviewed by irumbuthirai on August 02, 2021 Rating: 5

இன்று முதல் ஆரம்பம்: பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் விரைவாகப் பெற புதிய முறை! (விளக்கமும் லிங்கும் இணைப்பு)

August 02, 2021

அரசின் சௌபாக்கிய திட்டத்தின் மூலம் வினைத்திறனான மக்கள் சேவையை வழங்கும் முகமாக இன்று(2) முதல் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை நிகழ்நிலை (Online) முறையில் பெற்றுக் கொள்ளும் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

தங்களது கையடக்கத் தொலைபேசி அல்லது கணினி மூலம் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பித்ததன் பின்னர் கட்டணங்களை செலுத்துவதற்கான இணைப்பு பயனாளரின் தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

கடன் அட்டை அல்லது வரவு அட்டையைப் பயன்படுத்தி உரிய கட்டணத்தை செலுத்தலாம். 

விண்ணப்பித்த சான்றிதழின் பிரதியை விரைவு தபால் (Speed Post) மூலம் வீட்டுக்கு வரவழைத்துக் கொள்ளலாம். அல்லது அருகிலுள்ள பிரதேச செயலகத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். 

மேலதிக விபரங்களுக்கு: 

விண்ணப்பிப்பதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

இன்று முதல் ஆரம்பம்: பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் விரைவாகப் பெற புதிய முறை! (விளக்கமும் லிங்கும் இணைப்பு) இன்று முதல் ஆரம்பம்: பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் விரைவாகப் பெற புதிய முறை! (விளக்கமும் லிங்கும் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 02, 2021 Rating: 5

பாடசாலைக்கு சமுகமளித்தல் தொடர்பாக அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் கல்வியமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதம் (கடிதம் இணைப்பு)

August 01, 2021

அரச ஊழியர்கள் வழமைபோன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டுமென வெளியான சுற்று நிருபத்தின் படி கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளரினால் இன்று(1) வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் தொடர்பாக அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கடிதம் ஒன்றை கல்வியமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ளன. 

அந்தக் கடிதத்தில், எமது கோரிக்கைகள் தொடர்பாக ஆகஸ்ட் 2ஆம் தேதி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்படவுள்ளது. 

ஆகஸ்ட் 3ஆம் திகதி தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தையும் இடம்பெறவுள்ளது. 

இந்தப் பின்னணியில் பாடசாலைகளுக்கு கடமைக்கு வருமாறு அழைத்துள்ளீர்கள். ஆனால் தற்போது நாம் 
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதனால் பாடசாலைகளுக்கு வருவதில் இருந்து தவிர்ந்து கொள்கிறோம் என்பதை உங்களுக்கு அறியத் தருகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இக்கடிதத்தை அதிபர், ஆசிரியர் சங்கங்கள் ஒப்பமிட்டு அனுப்பியுள்ளன. 

குறித்த கடிதத்தை கீழே காணலாம்.



பாடசாலைக்கு சமுகமளித்தல் தொடர்பாக அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் கல்வியமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதம் (கடிதம் இணைப்பு) பாடசாலைக்கு சமுகமளித்தல் தொடர்பாக அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் கல்வியமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதம் (கடிதம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 01, 2021 Rating: 5

நாளை முதல் ஆசிரியர்களும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டுமா? இன்று வெளியான கல்வியமைச்சின் சுற்றுநிருபம்! (சுற்றுநிருபம் இணைப்பு)

August 01, 2021

சகல அரச ஊழியர்களும் நாளை (2) முதல் கடமைக்கு வழமைபோன்று சமூகமளிக்க வேண்டும் அரசு சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் ஜூலை 30 ஆம் திகதி சுற்றுநிறுபம் வெளியிடப்பட்டது. 

அது தொடர்பில் இன்றைய தினம் (1) கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவினால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த சுற்றுநிறுபம் மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு முகவரி இடப்பட்டுள்ளது. 

அதன்படி சகல மாகாண கல்வி திணைக்களம் மற்றும் கோட்டக்கல்வி காரியாலயங்களின் அலுவலர்கள் மற்றும் பணிக்குழுவினர் சகல பாடசாலைகளிலும் கல்விசார் மற்றும் 
கல்விசாரா பணிக்குழுவினர் அச் சுற்றுநிறுபத்தின் ஆலோசனைகளுக்கு அமைவாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். 

எனவே இந்த சுற்றுநிருபத்தின் படி பாடசாலைகள் நடைபெறாவிட்டாலும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்ல வேண்டும் என்ற விடயம் புலனாகின்றமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த சுற்றுநிருபத்தை கீழே காணலாம்.


நாளை முதல் ஆசிரியர்களும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டுமா? இன்று வெளியான கல்வியமைச்சின் சுற்றுநிருபம்! (சுற்றுநிருபம் இணைப்பு) நாளை முதல் ஆசிரியர்களும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டுமா? இன்று வெளியான கல்வியமைச்சின் சுற்றுநிருபம்! (சுற்றுநிருபம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 01, 2021 Rating: 5

Vacancy (Parliament of Sri Lanka)

July 31, 2021

Vacancy (Parliament of Sri Lanka) 
Closing date: 22-08-2021. 
See the details below.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட ...
Vacancy (Parliament of Sri Lanka) Vacancy (Parliament of Sri Lanka) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

அரச ஊழியர்களை கடமைக்கு அழைத்தல்: கல்வியமைச்சின் அறிவித்தல்!

July 31, 2021

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அனுமதி வழங்கப்பட்டால் மாத்திரமே ஆசிரியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
எனவே அரச ஊழியர்களை வழமை போன்று கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு பொருந்தாது எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களை கடமைக்கு அழைத்தல்: கல்வியமைச்சின் அறிவித்தல்! அரச ஊழியர்களை கடமைக்கு அழைத்தல்: கல்வியமைச்சின் அறிவித்தல்! Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

30-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

July 31, 2021

30-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official Government Gazette released on 30-07-2021. 
இதில்,
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 

தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

இதற்கு முன்னர் வெளிவந்த வர்த்தமானிகளைப் பார்வையிட ...
30-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 30-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

கொத்தலாவல பல்கலைக்கழக பீடமாக மாற்றப்பட்ட நிறுவனம்:

July 31, 2021

அமைச்சுக்கள் சிலவற்றின் விடயதானங்களில் மாற்றம் செய்து நேற்றைய தினம் ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. 

மிலோதா ( Miloda) எனப்படும் Academy of Financial Studies என்ற நிறுவனம் புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பீடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர் இந்த நிறுவனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் 
தனிப்பட்ட ஒரு நிறுவனமாக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு பூராகவும் பல்வேறு தரப்பினர் பல வகைகளிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொத்தலாவல பல்கலைக்கழக பீடமாக மாற்றப்பட்ட நிறுவனம்: கொத்தலாவல பல்கலைக்கழக பீடமாக மாற்றப்பட்ட நிறுவனம்: Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

கொவிஷீல்ட் தடுப்பூசி: இலங்கையில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு வெளியானது!

July 31, 2021

பல்வேறு கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்படுகின்றமை தற்சமயம் பெரும்பாலான நாடுகளில் இடம்பெறும் விடயமாகும். 

அந்த வகையில் கொவிஷீல்ட் தடுப்பூசி தொடர்பாக செய்யப்பட்ட ஆய்வின் முடிவை ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர அறிவித்துள்ளார். 
அதாவது இந்த தடுப்பூசியின் முதல் டோஸை மாத்திரம் செலுத்திக் கொண்டவர்களுக்கு 93.4% நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதாகவும் நடுநிலையாக்கும் பிறபொருள் எதிரிகள் (developed neutralizing antibodies) 97.1 % மாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் முதல் டோஸ் செலுத்தி 16 வாரங்களின் பின்னர் நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றம் இல்லாத போதிலும், நடுநிலையாக்கும் பிறபொருள் எதிரிகள் 26% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஆனால் 2வது டோஸ் செலுத்திக் கொண்டவுடன் அது மீண்டும் வழமைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கொவிஷீல்ட் தடுப்பூசி: இலங்கையில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு வெளியானது! கொவிஷீல்ட் தடுப்பூசி: இலங்கையில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு வெளியானது! Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

புதிய பாதையில் போராட்டத்தை முன்னெடுப்போம் - ஜோசப் ஸ்டாலின்

July 31, 2021

தங்களுக்கு பிரச்சினைகளுக்கு எதிர்வரும் திங்கட் கிழமை (2) உரிய தீர்வு கிடைக்காவிட்டால் புதிய பாதையில் தங்களது போராட்டம் முன்னெடுக்கப்படுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஏற்கனவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய பாதையில் போராட்டத்தை முன்னெடுப்போம் - ஜோசப் ஸ்டாலின் புதிய பாதையில் போராட்டத்தை முன்னெடுப்போம் - ஜோசப் ஸ்டாலின் Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

புதிய ஒலிம்பிக் சாதனை படைத்த ஜமைக்கா!

July 31, 2021

ஒலிம்பிக் 100M ஓட்டப்போட்டியில் ஜமைக்கா பல்வேறு சாதனைகளை படைப்பது வழமை. 
இதற்கு முன்னர் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் உசைன் போல்ட் சாதனைகளை நிகழ்த்தியது அறிந்ததே. 
அந்தவகையில் இம்முறை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜமைக்கா மீண்டும் சாதனை படைத்துள்ளது. 
இன்று நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்சன்-ஹெரா 10.61 வினாடிகளில் ஓடி முடித்து தங்கம் வென்றார். 
இதற்கு முன்னர் 10.62 வினாடிகளே இந்த போட்டிக்கு சாதனையாக இருந்தது. அது அமெரிக்க வீராங்கனை பிளோரன்ஸ் நிகழ்த்திய சாதனையாகும். அதனை தற்போது ஜமைக்கா முறியடித்துள்ளது.
புதிய ஒலிம்பிக் சாதனை படைத்த ஜமைக்கா! புதிய ஒலிம்பிக் சாதனை படைத்த ஜமைக்கா! Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5
Powered by Blogger.