அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறையில் மீண்டும் மாற்றம்:

August 05, 2021

அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறையில் மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. 

அந்த வகையில் கர்ப்பிணிகளை சேவைக்கு அழைப்பது உடன் அமுலாகும் வகையில் நிறுத்தப்படுவதாகவும் அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று(5) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

மேலும் நிறுவன பிரதானிகளின் தீர்மானத்திற்கு அமைய வாரத்திற்கு ஒரு குழு என்ற அடிப்படையில் 
இரண்டு குழுக்களாகப் பிரித்து சேவைக்கு அழைக்க முடியும். மேலும் இந்த புதிய மாற்றங்களோடு புதிய சுற்றுநிருபம் விரைவில் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறையில் மீண்டும் மாற்றம்: அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறையில் மீண்டும் மாற்றம்:  Reviewed by irumbuthirai on August 05, 2021 Rating: 5

மூன்றாவது தடுப்பூசி வழங்குவது தொடர்பாக WHO வின் அறிவித்தல்..

August 05, 2021

செப்டம்பர் மாதம் நிறைவடையும் வரையாவது 3வது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்த வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார். 

இதனால் வறிய நாடுகளின் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை பாதிக்கப்படும். எனவே இந்த 3வது தடுப்பூசி வழங்கும் திட்டத்தை நிறுத்தும் போது, ஒவ்வொரு நாட்டினதும் 10% ஆன மக்களுக்காவது தடுப்பூசியை ஏற்றக்கூடியதாகவிருக்கும். 

இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது தடுப்பூசி வழங்குவது தொடர்பாக WHO வின் அறிவித்தல்.. மூன்றாவது தடுப்பூசி வழங்குவது தொடர்பாக WHO வின் அறிவித்தல்.. Reviewed by irumbuthirai on August 05, 2021 Rating: 5

தரம்: 01 க்கான மாணவர் அனுமதி: சுற்றறிக்கையில் திருத்தம்:

August 04, 2021

தரம் 1 மாணவர் அனுமதி தொடர்பாக 2019-05-24 திகதியிடப்பட்ட 29/2019 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையின் 7.5.2.2 பிரிவு மாற்றப்படுவதாக கல்வியமைச்சின் செயலாளர் 2021-07-29 திகதியிடப்பட்ட 13/2021 (1) இலக்கம் கொண்ட சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார். 

குறிப்பிட்ட திருத்தம் பின்வருமாறு: 
7.5.2.2 தற்போது கஷ்டப் பாடசாலையொன்றில் சேவையாற்றாதிருப்பினும் இதற்கு முன் கஷ்டப் பாடசாலையொன்றில் சேவையாற்றியிருப்பின் சேவைக் காலம் - பூரண 01 வருடத்திற்கு 03 புள்ளிகள் வீதம் 15 புள்ளிகள். 
என மாற்றப்பட்டுள்ளது. 

திருத்தப்பட்ட சுற்றறிக்கையை கீழே காணலாம்.


தரம்: 01 க்கான மாணவர் அனுமதி: சுற்றறிக்கையில் திருத்தம்: தரம்: 01 க்கான மாணவர் அனுமதி: சுற்றறிக்கையில் திருத்தம்:  Reviewed by irumbuthirai on August 04, 2021 Rating: 5

அமெரிக்க ஜனாதிபதியின் கையெழுத்திட்ட சான்றிதழ்: இலங்கையைச் சேர்ந்த சப்ராஸின் சாதனை!

August 04, 2021

குருநாகல், பறகஹதெனிய கிராமத்தைச் சேர்ந்தவரும், அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராருமான எம்.எஸ்.எம்.சப்றாஸ், அமெரிக்க ஜனாதிபதியின் கையெழுத்திட்டு வழங்கப்படும் சான்றிதழ் விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார். 

தொழில் முயற்சியாண்மை முகாமைத்துவம் தொடர்பான பாடநெறிக்காக கடந்த ஜனவரியில் தெரிவுசெய்யப்பட்ட இவர், அமெரிக்க்காவிலுள்ள 
கேனல் பல்கலைக்கழகத்தில் தனது கற்கை நெறியைப் பூர்த்தி செய்து இந்த சான்றிதழ் விருதையும் பெற்று நாடு திரும்பியுள்ளார். 

ஏற்கனவே எமது நாட்டில் ஜனாதிபதியின் செயலாளர்களாக பதவி வகித்த பிரட்மன் வீரக்கோன் மற்றும் லலித் வீரதுங்க போன்றோர் இந்த சான்றிதழ் விருதைப் பெற்றுள்ளனர். அந்த வரிசையில் இலங்கையிலிருந்து தமிழ் பேசும் சமூகம் சார்பாக இந்த கற்கைநெறிக்குத் தெரிவு செய்யப்பட்டு கற்கை நெறியைப் பூர்த்தி செய்து சான்றிதழ் விருதைப் பெற்ற முதலாமவர் M.S.M. சப்றாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 

பறகஹதெனியாவைச் சேர்ந்த முகம்மட் சௌபான் சொஹறா உம்மா தம்பதியின் புதல்வரான இவர்,2017 இல் இந்தியாவிலும், 2018, 2019,ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரிலும், 2019, 2020ஆம் ஆண்டுகளில் சீனாவிலும் பல கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்துள்ளமை குறிப்பித்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதியின் கையெழுத்திட்ட சான்றிதழ்: இலங்கையைச் சேர்ந்த சப்ராஸின் சாதனை! அமெரிக்க ஜனாதிபதியின் கையெழுத்திட்ட சான்றிதழ்: இலங்கையைச் சேர்ந்த சப்ராஸின் சாதனை! Reviewed by irumbuthirai on August 04, 2021 Rating: 5

வாக்காளர் இடாப்பில் விபரங்களை சேர்க்க மற்றும் மாற்றம் செய்ய புதிய முறை!

August 03, 2021

வாக்காளர் இடாப்பில் தமது பெயரை சேர்க்க அதேபோன்று ஏற்கனவே உள்ள விபரங்களை மாற்றம் செய்ய ஒன்லைன் (Online) முறையை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த புதிய வசதி மூலம், புதிய வாக்காளர் பதிவு, பதிவில் மாற்றங்களை செய்தல், ஏற்கனவே காணப்படுகின்ற தகவல்களைத் திருத்துதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். 

குறித்த பக்கத்திற்கு சென்று ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தமக்குரிய User Name, Password என்பவற்றை தயாரித்து அதன் பின்னர் தகவல்களை மாற்றலாம் அல்லது புதிதாக சேர்க்கலாம். 

குறித்த பக்கத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
வாக்காளர் இடாப்பில் விபரங்களை சேர்க்க மற்றும் மாற்றம் செய்ய புதிய முறை! வாக்காளர் இடாப்பில் விபரங்களை சேர்க்க மற்றும் மாற்றம் செய்ய புதிய முறை! Reviewed by irumbuthirai on August 03, 2021 Rating: 5

வெளியிடப்பட்டன SLEAS தடைதாண்டல் பரீட்சை பெறுபேறுகள்!

August 03, 2021

Results of 2nd Bar efficiency examination (EB - 11) of SLEAS have been released. Exam date: 14-02-2021. 

இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS) இரண்டாம் தடைதாண்டல் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பரீட்சை 14-02-2021 நடைபெற்றது. 

பரீட்சை முடிவுகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
வெளியிடப்பட்டன SLEAS தடைதாண்டல் பரீட்சை பெறுபேறுகள்! வெளியிடப்பட்டன SLEAS தடைதாண்டல் பரீட்சை பெறுபேறுகள்! Reviewed by irumbuthirai on August 03, 2021 Rating: 5

அகில இலங்கை சித்திரம், சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிகள் (முழு விபரம் இணைப்பு)

August 03, 2021

All Island Art, Poster & Cartoon Competition - 2021
 
National child protection authority is planning a drawing, poster & cartoon competition to celebrate universal children's day. 

ஒக்டோபர் 1ம் திகதி உலக சிறுவர் தினம் அனுஷ்டிப்பு செய்வது தொடர்பாக அகில இலங்கை ரீதியில் சித்திரம், சுவரொட்டிகள் மற்றும் கார்ட்டூன் போட்டிகள் நடத்துவதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை தீர்மானித்துள்ளது. 
பாடசாலை பிரிவு, திறந்த பிரிவு என இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். 

பாடசாலை பிரிவு:
பாடசாலை பிரிவில் அரச பாடசாலைகள் தனியார் பாடசாலைகள் மற்றும் சர்வதேச பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். 

திறந்த பிரிவு:
திறந்த பிரிவு வகை 1, வகை 2 என்ற அடிப்படையில் நடத்தப்படும். 

வகை1: அரச பாடசாலைகள், சர்வதேச பாடசாலைகள், முன்பள்ளிகள், மறைக் கல்வி பாடசாலை மற்றும் பிரிவெனாக்களை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம். 

வகை2: பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்வாண்மை மிக்கவர்கள் மற்றும் ஏனையவர்கள் கலந்து கொள்ளலாம். 

விண்ணப்ப முடிவு திகதி: 31-08-2021. 

விண்ணப்பம் மற்றும் முழுமையான விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
அகில இலங்கை சித்திரம், சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிகள் (முழு விபரம் இணைப்பு) அகில இலங்கை சித்திரம், சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிகள் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 03, 2021 Rating: 5

பணிக்கு செல்லாத அதிபர் ஆசிரியர்கள் கடமையிலிருந்து விலகியதாக நடவடிக்கை எடுக்கப்படுமா? அரசின் பதில்

August 03, 2021

சுற்றுநிருபத்திற்கமைய பணிக்குச் செல்லாத அதிபர், ஆசிரியர்கள் கடமையிலிருந்து விலகியதாக அரசு நடவடிக்கை எடுக்குமா என்று ஊடகவியலாளர் ஒருவர் இன்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன அவர்கள், 
அத்தகைய முடிவை அரசாங்கம் எடுக்காது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. இதனை ஜனாதிபதியும் அங்கீகரிக்கிறார் என்று குறிப்பிட்டார்.
பணிக்கு செல்லாத அதிபர் ஆசிரியர்கள் கடமையிலிருந்து விலகியதாக நடவடிக்கை எடுக்கப்படுமா? அரசின் பதில் பணிக்கு செல்லாத அதிபர் ஆசிரியர்கள் கடமையிலிருந்து விலகியதாக நடவடிக்கை எடுக்கப்படுமா? அரசின் பதில்  Reviewed by irumbuthirai on August 03, 2021 Rating: 5

கடுமையான அழுத்தம் அதனால் தடுப்பூசி பெற்றேன் - சஜித்

August 03, 2021

தனக்கு கொரோனா சிகிச்சையளித்த வைத்தியர்களின் கடுமையான அழுத்தத்தின் காரணமாக தான் இன்று கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

தடுப்பூசி போடாவிட்டால் மீண்டும் கொரோனா வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவ்வாறு வந்தால் அது பாரதூரமாக அமையும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்ததை 
தொடர்ந்து நானும் என் உடல்நிலையை கருத்தில் கொண்டு அதற்கு சம்மதித்தேன் என்று மேலும் தெரிவித்துள்ளார். 

முன்னதாக கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டிலுள்ள சகலருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னரே தான் தடுப்பூசி போட இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
கடுமையான அழுத்தம் அதனால் தடுப்பூசி பெற்றேன் - சஜித் கடுமையான அழுத்தம் அதனால் தடுப்பூசி பெற்றேன் - சஜித் Reviewed by irumbuthirai on August 03, 2021 Rating: 5

En Savuku karanam... ஹிஷாலினியின் அறையில் வெளியான புதிய சாட்சி!

August 03, 2021

ஹிஷாலினியின் அறையில் உள்ள சுவற்றில் எழுதப்பட்டிருந்த En Savuku Karanam... என்ற வாசகம் தொடர்பில் தற்போது பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 

இது தமிழை ஆங்கிலத்தில் எழுதும் முறையில் (தங்லிஷ்) எழுதப்பட்டிருந்தது. 

இது தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் குறித்த அறைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். 

மேலும் இது தொடர்பில் விசாரணை செய்யும் பொலிஸ் குழு ஹிஷாலினியின் வீட்டிற்கு சென்று இது அவரால் எழுதப்பட்டதா 
என்பதை கண்டறிய ஹிசாலினி எழுதிய கொப்பிகளையும் எடுத்துள்ளனர். 

மேலும் குறித்த விடயம் தொடர்பில் ஹிஷாலினியின் சகோதரர் கருத்து தெரிவிக்கையில், தனது சகோதரி தரம் 7 வரை மாத்திரமே படித்ததாகவும். தனக்கு தெரிந்த வகையில் சுயமாகவே சகோதரிக்கு ஆங்கிலத்தில் எழுத முடியாது என்றும் ஆனால் பார்த்து எழுதலாம் என்றும் தெரிவித்தார்.
En Savuku karanam... ஹிஷாலினியின் அறையில் வெளியான புதிய சாட்சி! En Savuku karanam... ஹிஷாலினியின் அறையில் வெளியான புதிய சாட்சி! Reviewed by irumbuthirai on August 03, 2021 Rating: 5

அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பயந்தா கல்வி அமைச்சு சுற்றுநிருபம் வெளியிட்டது? கல்வி அமைச்சரின் பதில்..

August 03, 2021

தற்போது அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பணி பகிஷ்கரிப்பில் மற்றும் போராட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களை கண்டு பயந்தா அல்லது அவர்களின் போராட்டத்தை உடைக்கும் நோக்கிலா கல்வி அமைச்சு சுற்றுநிருபம் வெளியிட்டு அவர்களை பாடசாலைக்கு அழைத்தது? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கல்வி அமைச்சரிடம் இன்று(3) பாராளுமன்றத்தில் வைத்து கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ், 
அவர்களைக் கண்டு பயந்து அல்ல. அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது. ஆனால் உடனடி தீர்வை வழங்க அரசினால் முடியவில்லை. கொவிட் பிரச்சினையால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு எதிர்வரும் வரவுசெலவுத்திட்டம் நவம்பரில் சமர்ப்பிக்கப்படும் பொழுது சகல அரச ஊழியர்களையும் கருத்திற்கொண்டு பிரயோக ரீதியான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி, அவர்கள் உடனே சம்பள அதிகரிப்பை கேட்கவில்லை. தமது கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொள்கிறதா? அப்படி ஏற்றுக்கொண்டால் அதை எப்பொழுதிலிருந்து நடைமுறைப்படுத்தும்? என்று எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என்றே கோரிக்கை விடுக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பயந்தா கல்வி அமைச்சு சுற்றுநிருபம் வெளியிட்டது? கல்வி அமைச்சரின் பதில்.. அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பயந்தா கல்வி அமைச்சு சுற்றுநிருபம் வெளியிட்டது? கல்வி அமைச்சரின் பதில்.. Reviewed by irumbuthirai on August 03, 2021 Rating: 5

நீடிக்கப்பட்டது SLEAS ற்கான விண்ணப்ப திகதி!

August 02, 2021

SLEAS (இலங்கை கல்வி நிர்வாக சேவை) - 111 ற்கான மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சேவை அடிப்படையிலான போட்டி பரீட்சை தொடர்பில் வெளியான வர்த்தமானியில் திருத்தங்கள் செய்வதற்கு அரச சேவை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த அனுமதியின் பின்னர் திருத்தங்களுடன் வர்த்தமானி வெளியாகும். 

அதனடிப்படையில் விண்ணப்ப முடிவுத் திகதியும் நீடிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நீடிக்கப்பட்டது SLEAS ற்கான விண்ணப்ப திகதி! நீடிக்கப்பட்டது SLEAS ற்கான விண்ணப்ப திகதி! Reviewed by irumbuthirai on August 02, 2021 Rating: 5

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான Online விண்ணப்பம் (வீடியோ வழிகாட்டல் மற்றும் முழு விபரம் இணைப்பு)

August 02, 2021

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்தல் தொடர்பான அறிவித்தலை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

பரீட்சை திகதி: 14-11-2021 (ஞாயிற்றுக்கிழமை) 

விண்ணப்ப முடிவுத் திகதி: 20-08-2021. 

விண்ணப்பங்கள் ஒன்லைன் முறையில் பாடசாலை மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக சகல பாடசாலைகளுக்கும் User name மற்றும் Password 
என்பன வழங்கப்பட்டுள்ளன. இது கிடைக்காத அதிபர்கள் பரீட்சைத் திணைக்களத்தை அவசரமாகத் தொடர்பு கொண்டு அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 

Online முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை பெற்று அதில் மாணவர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் கையொப்பமிட்டு பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும். அதில் ஒரு பிரதியை பாடசாலையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். 

பாடசாலையின் தொலைபேசி இலக்கம் அதிபர் மற்றும் பரீட்சைக்கு பொறுப்பான ஆசிரியரின் கையடக்க தொலைபேசி இலக்கங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.

இது தொடர்பான பத்திரிகை அறிவித்தலை கீழே காணலாம்.


விண்ணப்பித்தல் தொடர்பான வீடியோ வழிகாட்டலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

அதிபர்களுக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டல்களை பார்வையிட...


குறிப்பு:
புலமைப்பரிசில் பரீட்சைக்கான 40க்கும் மேற்பட்ட மாதிரி வினாத்தாள்கள் மற்றும் விடைகளுடன் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான Online விண்ணப்பம் (வீடியோ வழிகாட்டல் மற்றும் முழு விபரம் இணைப்பு) தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான Online விண்ணப்பம் (வீடியோ வழிகாட்டல் மற்றும் முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 02, 2021 Rating: 5
Powered by Blogger.